ஹூண்டாய் மோட்டார்ஸ் தயாரிப்புகளின் மீது 80,000 ரூபாய் வரையிலான சலுகைகள் கிடைக்கிறது

Written By:

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் தயாரிப்புகளின் மீது 80,000 ரூபாய் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.

எந்த எந்த கார்கள் மீது என்ன என்ன சலுகைகள் வழங்கபடுகிறது என வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

ஹூண்டாய் ஆஃபர்கள்;

ஹூண்டாய் ஆஃபர்கள்;

ஹூண்டாய் மோட்டார்ஸ், ஏராளமான தயாரிப்புகளை இந்தியாவில் வழங்கிவருகினறனர். தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் இந்த கார் உற்பத்தி நிறுவனம் ஹேட்ச்பேக்கள் முதல் பிரிமியம் எஸ்யூவிகள் வரை அனைத்து வகையிலான கார்களை வழங்குகின்றனர்.

இந்த மார்ச் மாதத்தில், ஹூண்டாய் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அளிக்கின்றனர்.

இயான் மீதான சலுகை;

இயான் மீதான சலுகை;

ஹூண்டாய் இயான் மாடல் மீது 38,000 ரூபாய் வரை கிடைக்கிறது. எல்பிஜி மற்றும் பெட்ரோல் மாடல்கள் ஆகிய இரண்டுமே இந்த சலுகைகளுடன் கிடைக்கிறது.

ஐ10 ஹேட்ச்பேக் மீதான சலுகை;

ஐ10 ஹேட்ச்பேக் மீதான சலுகை;

ஹூண்டா ஐ10 ஹேட்ச்பேக் மீது 45,000 ரூபாய் வரையிலான சலுகைகளும், தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது.

கிராண்ட் ஐ10 மீதான சலுகை;

கிராண்ட் ஐ10 மீதான சலுகை;

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 பெட்ரோல் மாடல் மீது 43,000 ரூபாய் வரையிலான விலைகுறைப்பு அறிவிக்கபட்டுள்ளது.

சிஎன்ஜி மற்றும் டீசல் மூலம் இயங்கும் கிராண்ட்

ஐ10 மீது 50,000 ரூபாய் வரையிலான தள்ளுபடி வழங்கபடுகிறது.

ஹூண்டாய் எக்ஸ்செண்ட் மீதான சலுகை;

ஹூண்டாய் எக்ஸ்செண்ட் மீதான சலுகை;

ஹூண்டாய் எக்ஸ்செண்ட் டீசல் மாடல் மீது 50,000 ரூபாய் வரையிலான சலுகைகள் வழங்கபடுகிறது. இதன் பெட்ரோல் மாடல் மீது 45,000 ரூபாய் வரையிலான சலுகைகள் கிடைக்கிறது.

எலைட் ஐ20 மீதான் ஆஃபர்;

எலைட் ஐ20 மீதான் ஆஃபர்;

எலைட் ஐ20 பெட்ரோல் மாடல் மீது எந்த விதமான ஆஃபர்களும் வழங்கபடவில்லை. ஆனால், டீசல் மாடல் மீது 10,000 ரூபாய் வரையிலான தள்ளுபடி கிடைக்கிறது.

வெர்னா மீதான ஆஃபர்;

வெர்னா மீதான ஆஃபர்;

ஹூண்டாய் வெர்னாவின் டீசல் மாடல் மற்றும் பெட்ரோல் மாடல்கள் இரண்டின் மீதும், 50,000 ரூபாய் வரை சேமிக்க கூடிய வகையிலான சலுகைகள் கொடுக்கபடுகிறது.

இந்த அனைத்து விதமான தள்ளுபடிகளும் 2016-ஆம் ஆண்டின் மாடல்கள் மீது வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் எலான்ட்ரா மீதான ஆஃபர்;

ஹூண்டாய் எலான்ட்ரா மீதான ஆஃபர்;

ஹூண்டாய் எலான்ட்ரா மாடலின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களின் மீது 70,000 ரூபாய் வரையிலான தள்ளுபடிகள் வழங்கபடுகிறது.

சான்ட்டா பீ மீதான சலுகை;

சான்ட்டா பீ மீதான சலுகை;

சான்ட்டா பீ மீதும், 80,000 ரூபாய் வரையிலான சலுகைகளும், ஆதாயங்களும் வழங்கபடுகிறது.

கிடைக்கும் காலம்;

கிடைக்கும் காலம்;

இந்த சலுகைகள் அனைத்தும் குறிப்பிட்ட அளவிலான ஸ்டாக் உள்ளவரை மட்டுமே கிடைக்கிறது.

இந்த மாடல்கள் மீது வழங்கபடும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளும் மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே வழங்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹூண்டாய் க்ரெட்டா ஆட்டோமேட்டிக் எஸ்யூவி - சிறப்பு பார்வை

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் அனுகூலங்கள், குறைபாடுகள் - முழுமையான விவரங்கள்

ஹூண்டாய் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Hyundai Motors is offering Discounts and offers on almost all their Cars. Offers are given on Petrol, Diesel and CNG Models. These offers are available only still Stocks last. These offers may be available until 31st March only. Offers and discounts worth upto RS. 80,000 are offered on various models. To know more on which models, what offers are given, check here...
Story first published: Tuesday, March 22, 2016, 18:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark