ஹூண்டாய் நிறுவனத்தின் ஜெனிசிஸ் பிராண்ட், இந்தியாவில் 2020-ல் பிரவேசம்

Written By:

ஹூண்டாய் நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டான ஜெனிசிஸ், இந்தியாவில் 2020-ஆம் ஆண்டில் பிரவேசம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஹூண்டாய் நிறுவனத்தின் ஜெனிசிஸ் மற்றும் அதன் இந்திய பிரவேசம் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஜெனிசிஸ்...

ஜெனிசிஸ்...

தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனம், உயர் தரத்திலான சொகுசு கார்களை ஜெனிசிஸ் என்ற பிராண்டின் கீழ் வழங்கி வருகிறது.

ஜெனிசிஸ், பிராண்ட் பெயர் கொண்டு, உருவாக்கப்படும் புதிய மாடல் கார்கள், மிக உயரிய தரத்திலான வடிவமைப்பு, ஆற்றல் மற்றும் புதுமைகள் கொண்டதாக உள்ளது.

ஜெனிசிஸ் பிராண்டின் சிறப்பம்சங்கள்;

ஜெனிசிஸ் பிராண்டின் சிறப்பம்சங்கள்;

ஜெனிசிஸ், பிராண்ட்டுடன் தயாரிக்கபடும் கார்கள் சர்வதேச சந்தைகளை மையபடுத்தி உருவாக்கப்படுகிறது.

இந்த பிராண்டின் கீழ், லக்சுரி செடான்கள், சலூன்கள், கூபே-க்கள் மற்றும் எஸ்யூவிக்களும் உருவாக்கப்பகிறது.

இந்தியாவில் பிரவேசம்;

இந்தியாவில் பிரவேசம்;

டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் வெளியான செய்திபடி, ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சிஇஓ யங் கீ கூ, தங்கள் நிறுவனத்தின் மத்திய தர மற்றும் பிரிமியம் செக்மண்ட்டை சேர்ந்த தயாரிப்புகள் நல்ல வரவேற்ப்பை பெற்றால், ஜெனிசிஸ் பிராண்டில் தயாரிக்கபடும் கார்களும் விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

வகைபடுத்தல்;

வகைபடுத்தல்;

ஜெனிசிஸ் பிராண்டானது, ஹூண்டாய் மற்றும் கியா பிராண்ட்களுக்கு மேலே வகைபடுத்தபட்டுள்ளது.

பிராதன போட்டி;

பிராதன போட்டி;

ஜெனிசிஸ் பிராண்ட் பிரதானமாக, மெர்சிடிஸ்-பென்ஸ், ஆடி, பிஎம்டபுள்யூ உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

ஜெனிசிஸ் பிராண்ட், மற்ற சர்வதேச பிராண்ட்களான அக்யூரா, கேடில்லாக், இன்ஃபினிட்டி, லெக்சஸ் மற்றும் லிங்கன் உள்ளிட்டவற்றிடம் இருந்தும் போட்டியை எதிர் கொள்ள வேண்டியதாக உள்ளது.

கிடைக்கும் மாடல்கள்;

கிடைக்கும் மாடல்கள்;

தற்போது நிலையில், ஜெனிசிஸ் பிராண்டின் கீழ் ஜி90 என்ற மாடல் மட்டுமே விற்பனை செய்யபட்டு வருகிறது.

இது, 5-லிட்டர், வி8 இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 420 பிஹெச்பியையும், 519 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

ஜி90 - உச்சபட்ச வேகம்;

ஜி90 - உச்சபட்ச வேகம்;

ஹூண்டாய் ஜெனிசிஸ் ஜி90 சொகுசு கார், உச்சபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 241 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

ஜெனிசிஸ் பிராண்டின் அடையாளம்;

ஜெனிசிஸ் பிராண்டின் அடையாளம்;

ஜெனிசிஸ் பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் மாடல்கள், பிரஃபிக்ஸ் ‘G' (முன்னொட்டு - ‘G') உடனும், அதனையடுத்து, ஒரு எண்னுடன் பெயரிடப்பட்டு வெளியாக உள்ளது.

ஜெனிஸிஸ் என்ற வார்த்தைக்கு பொருள், துவக்கம் என்பதாகும். ஹூண்டாய் நிறுவனம் தங்களின் லக்சுரி பிராண்டுக்கு வைத்த இந்த ‘ஜெனிஸிஸ்' என்ற பெயர், அதற்கு மிக பொருத்தமாக உள்ளது.

வருங்கால திட்டங்கள்;

வருங்கால திட்டங்கள்;

ஜெனிஸிஸ் தங்களின் பிராண்டின் கீழ், 2020-ஆம் ஆண்டிற்குள், சுமார் 6 சொகுசு கார் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஜெனிஸிஸ் பிராண்ட் மூலம் தயாரிக்கபடும் கார்கள், ஆரம்ப கட்டத்தில் ஹூண்டாயின் மற்ற தயாரிப்புகளுடனே சேர்த்து விற்கப்பட உள்ளது.

வருங்காலத்தில், ஜெனிஸிஸ் பிராண்ட்-க்கு என பிரத்யேக ஷோரூம்கள் நிறுவபட்டு, அவற்றின் மூலம் ஜெனிஸிஸ் பிராண்ட் தயாரிப்புகள் விற்கப்பட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய சொகுசு கார் பிராண்டு அறிமுகம்

ஜெனிசிஸ் பிராண்டின் கீழ் தயாராகும் ஜெனிசிஸ் ஜி90 காரை காட்சிபடுத்தும் ஹூண்டாய்

ஜெனிசிஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
South Korean automaker Hyundai is planning to bring its luxury brand, Genesis to India by 2020. In an interview with The Times Of India, Hyundai Motor India CEO, Young Key Koo said that, Hyundai would Genesis brand into India soon. Genesis is Hyundai's global luxury brand and sits above both Hyundai and Kia brands. To know more about Genesis, Indian Entry, check here...
Story first published: Saturday, May 14, 2016, 12:15 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark