தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி

By Ravichandran

ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி தீபாவளியை ஒட்டி அக்டோபர் 24-ல் அறிமுகம் செய்யப்படும் என செய்திகள் வெளியாகிறது. தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் தான் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியை தயாரிகிறது. புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, இந்நிறுவனம் தயாரிக்கும் புகழ்பெற்ற மாடல்களில் ஒன்றாக உள்ளது.

புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி...

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி...

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் பிரிமியம் கிராஸ்ஓவர் எஸ்யூவி ஆகும். இது முன்னதாக, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது, இந்நிறுவனம் இந்த ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியை இந்த ஆண்டில் அறிமுகம் செய்யும் என தெரிவித்தது. ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, உலகளாவிய அறிமுகம் 2004-ல் நடைபெற்றது. இதையடுத்து, ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் முதல் தலைமுறை மாடல், இந்தியாவிற்கு 2005-ல் கொண்டுவரப்பட்டது.

விலக்கி கொள்ளப்பட்ட மாடல்;

விலக்கி கொள்ளப்பட்ட மாடல்;

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் 5 ஆண்டுகள் வரை, இது அமோக வரவேற்ப்பை பெற்று வந்தது. பின்னர், குறைந்து வந்த விற்பனையின் காரணமாக, இது விலக்கி கொள்ளப்பட்டது. தற்போது, இந்தியாவில், எஸ்யூவி-களின் தேவை அதிகமாக உள்ளது. இதனால், சரியான நேரம் பார்த்து ஹூண்டாய் நிறுவனம், இந்த ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியை இந்தியாவில் ஆறுமுகம் செய்கிறது.

வகைப்படுத்தல்;

வகைப்படுத்தல்;

மூன்றாம் தலைமுறை மாடலான தற்போதைய புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, க்ரெட்டா மற்றும் சான்ட்டா பீ ஆகிய மாடல்களுக்கு மத்தியில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, ஹூண்டாயின் ஃப்ளூயிடிக் ஸ்கள்ப்ச்சர் 2.0 டிசைன் சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, முனைகளில் மென்மையான வளைவுகள், குரோம் ஸ்லாட்கள் உடைய ஃபிரண்ட் கிரில், ஸ்டைலான ஹெட்லேம்ப்கள், ஸ்போர்ட்டியான பம்பர்கள், மேலும் எஸ்யூவி போன்ற அமைப்பை பலப்படுத்தும் வகையிலான சுற்றப்பட்டுள்ள எல்இடி டெயில்லைட்கள் உள்ளன.

இன்டீரியர்;

இன்டீரியர்;

இன்டீரியர் பொருத்த வரை, புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, சீட்களுக்கு மிக உயரிய தையல் வேலைப்பாடுகள் உள்ள லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, லெதர் போர்த்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், ஸ்டீயரிங் வீல் கொண்டுள்ளது. மேலும், ஆக்ஸ், யூஎஸ்பி மற்றும் புளுடூத் கனெக்ட்டிவிட்டி உடைய டச்-ஸ்கிரீன் இன்ஃபோடேயின்மென்ட் சிஸ்டம், 8-ஸ்பீக்கர்கள் உடைய உயர்தர மியூசிக் சிஸ்டம், எலக்ட்ரிக் லிஃப்ட் கேட் மற்றும் தேர்வு முறையிலான பானராமிக் சன்ரூஃப் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, 134 பிஹெச்பியையும், 181 பிஹெச்பியையும் வெளிப்படுத்தும் வகையிலான 2 டியூனிங் வசதி உடைய 2.0 லிட்டர் இஞ்ஜினுடன் வெளியாகலாம்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, க்ரெட்டா மாடலை போல், 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் வெளியாகலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, இந்தியாவில் தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் 24-ல் அறிமுகம் செய்யப்படலாம். பண்டிகை காலத்தை ஒட்டி அறிமுகம் செய்யப்படுவதனால், இது மக்களிடையே பலத்த ஆதரவை பெரும் என எதிர்பார்க்கலாம்.

போட்டி;

போட்டி;

புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், இது ஹோண்டா சிஆர்-வி, ஸ்கோடா யெட்டி மற்றும் சாங்யாங் ரெக்ஸ்டன் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, 20 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சத்திற்கு இடைப்பட்ட விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, 2016 இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் அறிமுகம் எப்போது?

இந்தியாவில் கண்ணாடி கூரை [சன்ரூஃப்] வசதியுடன் கிடைக்கும் டாப்- 10 கார்கள்!

Most Read Articles
English summary
Hyundai Tucson Launch Date in India is revealed. Much-awaited SUV from Hyundai is launched in India on October 24,2016 ahead of festival season of Diwali. This premium crossover-SUV is positioned between Creta and Santa Fe SUVs in India. New-generation Tucson is based on Hyundai's famed Fluidic Sculpture 2.0 design philosophy. To know more, check here...
Story first published: Wednesday, September 28, 2016, 11:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X