ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் அறிமுகம் எப்போது?

Written By:

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியை இந்த பண்டிகை காலங்களின் போது இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் டூஸான்...

ஹூண்டாய் டூஸான்...

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் மாடல் ஆகும்.

இது இந்திய வாகன சந்தைகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாடல்களில் ஒன்றாக உள்ளது.

முன்னதாக, ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தப்பட்டது.

வகைப்படுத்தல்;

வகைப்படுத்தல்;

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் சான்ட்டா பீ மாடல்களுக்கு மத்தியில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவிக்கு, 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின் அல்லது 1.6 டீசல் இஞ்ஜின் ஆகிய 2 இஞ்ஜின்களில் ஏதேனும் ஒன்று பொருத்தப்படலாம்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் இஞ்ஜினை, ஹூண்டாய் இஞ்ஜினியர்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய ௨ தேர்வுகளிலும் வழங்க உள்ளனர்.

டீசல் இஞ்ஜினுக்கு தடை;

டீசல் இஞ்ஜினுக்கு தடை;

2,000 சிசி அல்லது அதற்கும் கூடுதலான கொள்ளளவு உடைய டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்ட வாகணங்க மீது தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த பிரச்னையை சமாளிக்க, ஹூண்டாய் நிறுவனம் 2,000 சிசி-க்கும் குறைவான கொள்ளளவு உடைய இஞ்ஜினையே, டூஸான் எஸ்யூவி-க்கு பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு;

எதிர்பார்ப்பு;

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், ஒரு வருடத்திற்கு 15,000 முதல் 25,000 டூஸான் எஸ்யூவிக்களை விற்பனை செய்ய முடியும் என எதிர்பார்க்கிறது.

உறுதியற்ற நிலை;

உறுதியற்ற நிலை;

இந்தியாவிற்கான ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, எத்தகைய விவரக்குறிப்புகள் கொண்டதாக இருக்கும் என்பது குறித்து, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், இது வரை எந்த விதமான உறுதிபடுத்தப்பட்ட தகவல்களையும் அளிக்கவில்லை.

அறிமுகம்;

அறிமுகம்;

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, இந்திய வாகன சந்தைகளில் இந்த பண்டிகை காலங்களின் போது அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி;

போட்டி;

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, ஹோண்டா சிஆர்-வி மற்றும் அடுத்த தலைமுறை ரெனோ டஸ்ட்டர் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

எதிர்பார்க்கப்படும் விலை;

எதிர்பார்க்கப்படும் விலை;

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, இந்தியாவில் 16 லட்சம் ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய்-க்கும் இடைப்பட்ட (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, 2016 இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்

ஹூண்டாய் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் கார்களின் பட்டியல் - முழு விவரம்

ஹூண்டாய் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

English summary
South Korea based automobile manufacturer Hyundai Motors plans to launch their Hyundai Tucson SUV during this Festive Season or by during 2016-end. Tucson will be placed in between Santa Fe and Creta. Hyundai Tucson may compete with Honda CR-V and next-gen Renault Duster in India. It might be priced between Rs. 16 lakh to Rs. 18 lakh ex-showroom. To know more, check here...
Story first published: Wednesday, July 13, 2016, 7:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark