இந்தியாவில் மையம் கொள்ள உள்ள ரெனோ கேப்டர் ரஷ்யாவில் அறிமுகம்

Written By:

இந்தியாவில் விரைவில் மையம் கொள்ள உள்ள ரெனோ கேப்டர் ரஷ்யாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

ரெனோ நிறுவனம், தாங்கள் தயாரித்து வழங்கும் கேப்டர் கிராஸ்ஓவரை ரஷ்யாவில் அறிமுகம் செய்துள்ளனர். ரெனோ கேப்டர், வளர்ந்து வரும் வாகன சந்தைகளான இந்தியா, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்காக தயாரிக்கபட்டுள்ளது. இது ரெனோ டஸ்ட்டர் மாடலுக்கான அடுத்த பிரிமியம் கிராஸ்ஓவர் மாற்றாக அமைய உள்ளது.

இந்த கேப்டர், டஸ்ட்டர் உருவாக்கபட்டுள்ள அதே பிளார்ஃபார்மை அடிப்பபையாக கொண்டு தான் அமைக்கபட்டுள்ளது. ஆனால், இதற்கான பல்வேறு ஸ்டைல் தொடர்பான அம்சங்கள், ஐரோப்பாவில் விற்பனை செய்யபடும் கேப்டர் கிராஸ் ஓவரில் இருந்து ஏற்று கொள்ளபட்டுள்ளது.

ரெனோ கேப்டர், 4,333 மில்லிமீட்டர் நீளம், 1,813 மில்லிமீட்டர் அகலம், 1,613 மில்லிமீட்டர் உயரம் மற்றும் 2,674 மில்லிமீட்டர் அளவிலான வீல்பேஸ் கொண்டுள்ளது. டஸ்ட்டர் 4,315 மில்லிமீட்டர் நீளம், 1,822 மில்லிமீட்டர் அகலம், 1,695 மில்லிமீட்டர் உயரம் மற்றும் 2,673 மில்லிமீட்டர் அளவிலான வீல்பேஸ் கொண்டுள்ளது. இந்த 2 மாடல்களின் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளது.

india-bound-renault-kaptur-suv-unveiled-in-russia

டிசைன் ரீதியாக, கேப்டர் மாடல், ஐரோப்பாவில் விற்கபடும் கிராஸ்ஓவரை போலவே உள்ளது. எனினும் கேப்டர் மாடலின் முன் பம்பர் அதிகமாக செதுக்கபட்டது போல் காட்சி அளிக்கிறது. இது டிஆர்எல் எனப்படும் டேடைம் ரன்னிங் எல்இடி-களை கொண்டுள்ளது. இதன் கிரில்லின் மத்தியில் ரெனோ பேட்ஜ் ஆதிக்கம் செலுத்தும் வகையில் உள்ளது. மேலும், இதன் பக்கவாட்டில் ஆங்குலார் ஹெட்லேம்கள் பொருத்தபட்டுள்ளது.

கேப்டர் மாடலின் பின்பக்கத்தில், எல்இடி டெய்ல் டெய்ல்லேம்ப்கள் மற்றும் பம்பர் மீது ஸ்கிட்பிளேட் கொண்ட பெரிய டெய்ல்கேட் கொண்டுள்ளது.

ஆனால், கேப்டர் மாடலில், எந்த மாதிரியான இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது என்பது குறித்து, எந்த விதமான தகவல்களையும் ரெனோ நிறுவனம் வெளியிடவில்லை. எனினும், இது இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது, டஸ்ட்டரில் உபயோகிக்கபடும் இஞ்ஜினை காட்டிலும் இன்னும் கூடுதல் திறன் கொண்ட இஞ்ஜினை உபயோகிக்கும் என தகவல்கள் வெளியாகிறது.

கேப்டர் மாடலில், 6-ஸ்பீட் மேனுவல் அல்லது ஈஸி-ஆர் ஏஎம்பி கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ள 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் உபயோகிக்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

கேப்டர் எஸ்யூவி, இந்தியாவில் 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபடலாம் என தகவல்கள் வெளியாகிறது.

English summary
India Bound Renault Kaptur Crossover has mad its Debut in Russia. Renault has made this Kaptur for emerging markets like Russia, Brazil and India. It is made as a premium crossover alternative to the Duster. Kaptur is based on same platform, as that of Duster. The Kaptur is expected to make its entry into India in 2017. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark