மேட் இன் இந்தியா மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

Written By:

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், தாங்கள் தயாரிக்கும் மேட் இன் இந்தியா எனப்படும் இந்தியாவில் தயாரிக்கப்படும் மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர். தசரா மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் இந்தியாவில் வேகமாக நெருங்கி கொண்டிருக்கிறது. இதையொட்டி, பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கின்றனர்.

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இந்த மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியை, இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பூனே அருகே சகன் உற்பத்தி ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்கிறது. மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, இந்தியாவில் தயாரித்து வெளியிடப்படும் 9-வது மேட் இன் இந்தியா தயாரிப்பு ஆகும்.

ட்ரிம்கள்;

ட்ரிம்கள்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, மெர்சிடிஸ் ஜிஎல்சி 220 டி 4மேட்டிக் ஸ்டைல், மெர்சிடிஸ் ஜிஎல்சி 220 டி 4மேட்டிக் ஸ்போர்ட் மற்றும் மெர்சிடிஸ் ஜிஎல்சி 300 4மேட்டிக் ஸ்போர்ட் ஆகிய 3 ட்ரிம்களில் கிடைக்கும்.

பெட்ரோல் வேரியன்ட்;

பெட்ரோல் வேரியன்ட்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் பெட்ரோல் வேரியன்ட்டான ஜிஎல்சி 300 மாடல், 4-சிலிண்டர்கள் உடைய 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 245 பிஹெச்பியையும், 370 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

டீசல் வேரியன்ட்;

டீசல் வேரியன்ட்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் டீசல் வேரியன்ட்டான ஜிஎல்சி 220 டி ஸ்டைல் மற்றும் ஸ்போர்ட் மாடல்கள், 4-சிலிண்டர்கள் உடைய 2,143 சிசி லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 170 பிஹெச்பியையும், அதிகபட்சமாக 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின்கள் இரண்டுமே 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

4மேட்டிக்;

4மேட்டிக்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட்கள் இரண்டுமே 4மேட்டிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் வசதியுடன் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, 18-இஞ்ச் வீல்கள், எல்இடி டெயில்லேம்ப்கள், லெதர் சீட்கள், ஆம்பியன்ட் லைட்டிங், பானரமிக் சன்ரூஃப், நேவிகேஷன் வசதி கொண்ட 7-இஞ்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே உள்ளிட்ட வசதிகள் கொண்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல், கிளைமேட் கண்ட்ரோல், ஆக்டிவ் பார்க் அசிஸ்ட் வசதியுடைய ரிவர்ஸ் கேமரா, ஆம்பியன்ட் லைட்டிங், கீலஸ் ஸ்டார்ட் (சாவி இல்லாமல் திறக்கும் வசதி, ரியர் விண்டோக்களுக்கு சன் பிளைன்ட்கள், 5 பேர் அமரக்கூடிய வசதி உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இந்த மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியில் சேர்க்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

பாதுகாப்பு பொருத்த வரை, மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியில் இஎஸ்பி கர்வ் டைனமிக் அசிஸ்ட், கிராஸ்வின்ட் அசிஸ்ட், அட்டென்ஷன் அசிஸ்ட், அடாப்டிவ் பிரேக் லைட்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் அசிஸ்ட் மற்றும் ஒட்டுமொத்தமாக 7 ஏர்பேக்குகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ரேட்டிங்;

பாதுகாப்பு ரேட்டிங்;

பயணியர் பாதுகாப்பு (occupant protection), குழந்தைகள் பாதுகாப்பு (child protection) மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பு (pedestrian safety) ஆகியவற்றிற்காக மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, 5 ஸ்டார் ரேட்டிங் (மதிப்பீடு) பெற்றுள்ளது.

விலை;

விலை;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மெர்சிடிஸ் ஜிஎல்சி 220 டி 4மேட்டிக் ஸ்டைல் - 47.90 லட்சம் ரூபாய்

மெர்சிடிஸ் ஜிஎல்சி 220 டி 4மேட்டிக் ஸ்போர்ட் - 51.50 லட்சம் ரூபாய்

மெர்சிடிஸ் ஜிஎல்சி 300 4மேட்டிக் ஸ்போர்ட் - 51.90 லட்சம் ரூபாய்

குறிப்பு;

இந்த அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் ஆகும்.

English summary
Mercedes-Benz launched their ‘Made In India’ GLC for Sale in India. GLC SUV is 9th 'Made in India' model from Mercedes-Benz. Safety wise, Mercedes-Benz GLC SUV has ESP curve dynamic assist, crosswind assist, attention assist, adaptive brake lights, tyre pressure monitoring assist, and 7 airbags in total. It has seating capacity for five passengers.To know more, check here...
Story first published: Thursday, September 29, 2016, 16:41 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos