விற்பனையில் சொதப்பும் இந்த கார் மாடல்களுக்கு விரைவில் கல்தா!

Written By:

தொழில்நுட்ப வளர்ச்சி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தக்கவாறு கார் மாடல்கள் குறிப்பிட்ட கால அளவுகளில் தொடர்ந்து மாற்றங்களை சந்திக்கின்றன. அதேநேரத்தில், குறிப்பிட்ட கால அளவுகளில் கார்களுக்கு விடை கொடுக்கப்பட்டு, புதிய மாடல்கள் மூலமாக நிரப்பப்படுகின்றன.

சில கார் மாடல்கள் விற்பனையில் சொதப்புவதால், மார்க்கெட்டிலிருந்து கட்டாயமாக விலக்கப்படுகின்றன. அவ்வாறு, மார்க்கெட்டிலிருந்து விரைவில் விடைபெற இருக்கும் சில கார் மாடல்களை உங்களது பார்வைக்கு வழங்குகிறோம்.

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

எம்பிவி ரகத்தில் 7 சீட்டர் மாடலாக விற்பனை செய்யப்படும் செவர்லே என்ஜாய் கார் விரைவில் விற்பனை நிறுத்தப்பட இருக்கிறது. இதற்கு மாற்றாக எதிர்பார்க்கப்பட்ட செவர்லே ஸ்பின் எம்பிவி காரையும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதில்லை என்றும் ஜெனல் மோட்டார்ஸ் அறிவித்துவிட்டது. எனவே, இந்த செக்மென்ட்டில் மாருதி எர்டிகாவுக்கான போட்டி மாடல் ஒன்று குறைகிறது.

மாருதி ரிட்ஸ்

மாருதி ரிட்ஸ்

சிறந்த செயல்திறன் கொண்ட மாருதி ரிட்ஸ் கார் தோற்றத்தில் வாடிக்கையாளர்களை கவரவில்லை. எனவே, விற்பனையில் மாருதிக்கு முக்கிய பங்களிப்பை வழங்க முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில், மாருதி ரிட்ஸ் காரின் விற்பனையை விரைவில் மூடுவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுவிட்டது. இதற்கு மாற்றாக, மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மாருதி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டாடா இண்டிகா விஸ்டா

டாடா இண்டிகா விஸ்டா

டாடா போல்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல், டாடா விஸ்டா விற்பனையை நிறுத்துவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டது தெரிந்ததுதான். இந்த நிலையில், விரைவில் இந்த காரின் விற்பனையை நிறுத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று, ஸெஸ்ட் கார் இருப்பதால், மான்ஸா செடான் காருக்கும் மூடுவிழா நடத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

செவர்லே செயில் ஹேட்ச்பேக்

செவர்லே செயில் ஹேட்ச்பேக்

செவர்லே ஏவியோ யுவா காருக்கு மாற்றாக வந்த செவர்லே செயில் யுவா கார் எதிர்பார்த்த அளவு விற்பனையை பதிவு செய்யவில்லை. இதனால், இந்த காருக்கும் கல்தா கொடுக்க ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்திருக்கிறது. அதாவது, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டாளியான SAIC நிறுவனத்தின் தயாரிப்புகளிலிருந்து எடுக்கப்பட்டதுதான், இந்த செவர்லே செயில் யுவா மற்றும் என்ஜாய் போன்ற கார்கள். இனி சீன தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்வதை தவிர்த்துக் கொண்டு உலக அளவில் விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்படும் குளோபல் மாடல்களை இந்தியாவில் களமிறக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 டாடா ஆரியா

டாடா ஆரியா

மொக்கையான டிசைனால் வாடிக்கையாளர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில், இந்த காரை ஹெக்ஸா என்ற பெயரில் எஸ்யூவி ரக மாடல் போன்று பல மாற்றங்களை செய்து அறிமுகம் செய்ய இருக்கிறது டாடா மோட்டார்ஸ். எனவே, டாடா ஆரியா காரின் விற்பனை விரைவில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா மொபிலியோ

ஹோண்டா மொபிலியோ

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா மொபிலியோ எம்பிவி கார் எதிர்பார்த்த விற்பனையை பதிவு செய்யவில்லை. எனவே, இந்த காரை அடிப்படையாகக் கொண்டு பிஆர்வி என்ற எஸ்யூவி மாடலை ஹோண்டா சமீபத்தில் அறிமுகம் செய்தது. ஹோண்டா மொபிலியோவின் விற்பனையும் படுமோசமாக இருந்து வருவதால், விரைவில் இந்த காருக்கு மூடுவிழா நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
English summary
India Will Soon Bid Goodbye To These 6 Cars.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark