இந்தியாவின் எரிபொருள் தேவை, 11% உயர்வு

Written By:

இந்தியாவின் எரிபொருள் தேவை, கடந்த 2015-16 நிதி ஆண்டில் 11% உயர்ந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில், இது தான் மிக வேகமான வளர்ச்சி ஆகும்.

மார்ச் 31-ஆம் தேதி முடிவடைந்த நிதி ஆண்டின் பதிவுகளின் படி, இந்தியா 183.5 மில்லியன் டன் எரிபொருளை உபயோகித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில், இந்தியாவின் எரிபொருள் உபயோகம் 165.5 மில்லியன் டன் அளவில் இருந்தது. மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் படி, இது 10.9% உயர்வு ஆகும்.

கடந்த மார்ச் மாதம் மட்டும், எரிபொருள் 16.42% உயர்ந்து 17.09 டன் எரிபொருள் உப்யோகிக்கபட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இதே காலகட்டத்தில், எரிபொருள் உப்யோகம் 14.67 மில்லியன் டன் என்ற அளவில் இருந்தது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியியிட்ட கணிப்புகளின் படி, 2016-17 நிதி ஆண்டில், பெட்ரோல் தேவை 11% உயரும் என்றும், டீசல் தேவை 4% உயரும் என தெரிவிக்கபட்டுள்ளது.

indian-fuel-consumption-increase-by-11-percent

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியும், விவசாயத்துறையில் அதிகரித்து வரும் டீசலின் தேவைகளுமே இந்த எரிபொருள் உபயோகத்தின் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறை வேகமாக வளர்ந்து வருகிறது.

இதையெல்லாம் தாண்டி, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இடையிலான விலை வித்தியாசங்கள் குறுகி கொண்டே வருவதும், பெட்ரோலின் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

English summary
India's fuel demand has witnessed an increase of 11 percent during Financial Year of 2015-16. This is fastest growth in past two decades. As of on March 31st, end of financial year, India had consumed 183.5 million tons. Boom in Indian economy and demand from agricultural sector for diesel and growth in automobile sector are main factors. To know more, check here...
Story first published: Friday, April 15, 2016, 10:34 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark