இந்தியருக்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர், இங்கிலாந்தின் மிகப்பெரிய கார் நிறுவனமாக வளர்ச்சி

By Ravichandran

ஜாகுவார் லேண்ட் ரோவர், இங்கிலாந்தின் மிகப்பெரிய கார் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

ஜாகுவார் லேண்ட் ரோவர் படைத்த புதிய சாதனை குறித்து வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்வோம்.

இந்தியருக்கு சொந்தமான ஜாகுவார்...

இந்தியருக்கு சொந்தமான ஜாகுவார்...

ஜேஎல்ஆர் அல்லது ஜாகுவார் லேண்ட் ரோவர் என்று அழைக்கபடும் கார் நிறுவனம் தான், இங்கிலாந்தின் மிகப்பெரிய கார் நிறுவனமாக வளந்துள்ளது.

இந்த ஜாகுவார் நிறுவனம், 7 ஆண்டுகளுக்கு முன்பு, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் கையகபடுத்தபட்டது. இந்த ஜேஎல்ஆர் சொகுசு கார் நிறுவனம், இந்தியராக உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவரான ரத்தன் டாடாவுக்கு சொந்தமானது என்பது விசேஷமான செய்தியாகும்.

முதல் இடத்தை பிடித்த ஜாகுவார்;

முதல் இடத்தை பிடித்த ஜாகுவார்;

முன்னதாக, நிஸான் கார் நிறுவனம் தான் இங்கிலாந்தின் முன்னோடி கார் நிறுவனமாக விளங்கி வந்தது. இந்த நிதி ஆண்டில், இங்கிலாந்தில் 489,923 கார்களை உற்பத்தி செய்து அந்நாட்டின் முதன்மையான கார் நிறுவனமாக ஜாகுவார் வளர்ந்துள்ளது.

ஜேஎல்ஆர் உயர் அதிகாரி பெருமிதம்...

ஜேஎல்ஆர் உயர் அதிகாரி பெருமிதம்...

‘இங்கிலாந்து தான் எங்களின் பிரதான சந்தையாக விளங்குகிறது. இங்கிலாந்தில் பெரிய வாகன உற்பத்தியாளர் என்ற சாதனையை படைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' என ஜேஎல்ஆர் நிறுவனத்தின் உயர்அதிகாரி வொல்ஃப்கேங் ஸ்டாட்லர் தெரிவித்தார்.

1 பில்லியன் பவுண்ட் முதலீடு;

1 பில்லியன் பவுண்ட் முதலீடு;

குறைந்த மாசு உமிழ்வு வெளிபடுத்தும் இஞ்ஜினியம் இஞ்ஜினை உருவாக்குவதில் ஜேஎல்ஆர் நிறுவனம் முனைப்பு காட்டி வந்தது. இத்தகைய இஞ்ஜினை உயர்தர தொழில்நுட்பங்கள் கொண்ட உற்பத்தி ஆலையில் உருவாக்குவதற்கு, ஜேஎல்ஆர் நிறுவனம் சமீபத்தில் தான் இங்கிலாந்தில் 1 பில்லியன் பவுண்ட் முதலீடு செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸின் சாதனை;

டாடா மோட்டார்ஸின் சாதனை;

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் கையகபடுத்தபட்ட 3 ஆண்டுகளில், ரீடெய்ல் விற்பனையில் ஜேஎல்ஆர் நிறுவனம் 27 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

2016 ஆட்டோ எக்ஸ்போவில், ரேன்ஜ்ரோவர் இவோக் கன்வெர்டிபிள் எஸ்யூவி காட்சிபடுத்தபடுகிறது?

இந்தியாவில் புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவிக்கு முன்பதிவு ஆரம்பம்

ஆய்வுப் பணிகளுக்காக புதிய ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு கார் இறக்குமதி

Most Read Articles
English summary
Jaguar Land Rover has becomes the largest Car manufacturer in the UK. This British luxury car brand was taken over by Tata Motors seven-years-ago. JLR has reported 27 per cent increase in retail sales, just three-years after it was bought by the Tata Motors. It is to be mentioned that, JLR is owned by Indian Business Tycoon Ratan Tata.
Story first published: Saturday, January 23, 2016, 19:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X