டோணியின் ஹம்மர் எஸ்யூவிக்கு அபாரதத்துடன் கூடிய வரி விதிப்பு!

By Saravana

ஹம்மருக்கும் இந்தியாவுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. மோசடியாக கார் இறக்குமதி செய்த வழக்கில் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ஹம்மர் எஸ்யூவி சிக்கி மீண்டது அறிந்ததே. அதைத்தொடர்ந்து, கிரிக்கெட் வீரர்களுக்கு சூதாட்ட புரோக்கர்கள் ஹம்மர் எஸ்யூவியை பரிசாக வழங்கியதாக சர்ச்சை வெடித்தது.

இதுபோன்று, ஹம்மர் வாங்கிய இந்திய பிரபலங்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், மீண்டும் ஹம்மர் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணித் தலவைர் மஹேந்திர சிங் டோணி. ஆம், போக்குவரத்துத் துறையின் சில குளறுபடிகளால், ஹம்மர் எஸ்யூவிக்கு அபராதத்துடன் ஆயுள் வரி கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

ஹம்மர் ஆசை

ஹம்மர் ஆசை

சொகுசு கார் மற்றும் விலை உயர்ந்த பைக்குகள் மீது தீராத காதல் கொண்டிருக்கும் மஹேந்திர சிங் டோணி, கடந்த 2009ம் ஆண்டு இந்த ஹம்மர் எச்2 எஸ்யூவியை வாங்கியிருக்கிறார்.

வரி கட்ட தவறிய டோணி

வரி கட்ட தவறிய டோணி

அப்போது ஆண்டுக்கு ஒருமுறை வரி செலுத்தும் நடைமுறை இருந்ததால், கடந்த 2010ம் ஆண்டு வரை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு சரியாக வரி செலுத்தியிருக்கிறாராம்.

 ஆன்லைன் குளறுபடி

ஆன்லைன் குளறுபடி

கடந்த 2012ம் ஆண்டில் ராஞ்சி போக்குவரத்து துறை கணிணிமயமாக்கப்பட்டது. அப்போது, மஹேந்திர சிங் டோணியின் ஹம்மர் எஸ்யூவியை பதிவேற்றம் செய்யும்போது, கணிணி பட்டியலில் ஹம்மர் இல்லை. இதனால், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பெயரில், டோணியின் ஹம்மர் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

ஆயுள் வரி

ஆயுள் வரி

ஆண்டுக்கு ஒருமுறை இருந்த வாகனங்களுக்கான வரியை, 2011ல் ஆயுள் வரியாக மாற்றியிருக்கின்றனர். அதாவது, வாகனத்திற்கு ஒருமுறை மட்டுமே ஆயுள் வரி செலுத்தினால் போதுமானது.

 மதிப்பு

மதிப்பு

இதற்காக, நோட்டீஸ் அனுப்புகையில், டோணியின் ஹம்மர் எஸ்யூவி, ஸ்கார்ப்பியோ என்ற பெயரில் இருந்ததால், வெறும் ரூ.53,000 மட்டுமே ஆயுள் வரியாக வந்துள்ளது.

சுதாரிப்பு

சுதாரிப்பு

இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட ராஞ்சி போக்குவரத்துத் துறை, தற்போது ஒரு கோடி மதிப்புடைய ஹம்மருக்கு ரூ.4 லட்சம் வரி செலுத்துவதற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

அபராதம்

அபராதம்

கடந்த 2010ம் ஆண்டுக்கு பின்னர், டோணி வரி செலுத்தவில்லையென்பதால், வரிக்குண்டான அபராதத் தொகையையும் சேர்த்து கட்டுமாறு ராஞ்சி போக்குவரத்துத் துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

தொடர்புடைய செய்தித் தொகுப்பு

தொடர்புடைய செய்தித் தொகுப்பு

டோணியின் கார் கலெக்ஷன்!

Most Read Articles
English summary
Indian Skipper Dhoni has to pay hefty tax and fine for his Hummer.
Story first published: Friday, March 18, 2016, 16:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X