எம் ஸீரோ... இந்தியாவின் முதல் சூப்பர் காரின் புரோட்டோடைப் ரெடி...!

Written By:

இந்தியாவின் முதல் சூப்பர் கார் மாடல் எம் ஸீரோ பற்றி கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் செய்தி வெளியிட்டிருந்தோம். கான்செப்ட் நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த கார் தற்போது உற்பத்தி நிலைக்கு தயாராகி வருகிறது. மேலும், முதல் புரொட்டோடைப் மாடலை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, இந்த காரை உற்பத்திக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. இதுபற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தயாரிப்பு நிறுவனம்

தயாரிப்பு நிறுவனம்

மீன் மெட்டல் மோட்டார்ஸ்[Mean Metal Motors] என்ற நிறுவனம் எம் ஸீரோ என்ற பெயரில் இந்த சூப்பர் காரை உருவாக்கி வருகிறது. இந்த சூப்பர் காரை இந்தியா, போர்ச்சுக்கல், இத்தாலி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாடுகளை சேர்ந்த 25 பேர் கொண்ட பொறியியல் நிபுணர் குழுவினர் இணைந்து உருவாக்கி வருகின்றனர்.

 புதிய மூலப்பொருள்

புதிய மூலப்பொருள்

இந்த காருக்காக பிரத்யேக மூலப்பொருட்கள் அடங்கிய கலவையில் பாடி தயாரிக்கப்படுகிறது. இந்த மூலப்பொருளுக்கு கார்போஃப்ளாக்ஸ் என்று பெயரிட்டு அழைக்கின்றனர். இது கார்பன் ஃபைபருக்கு இணையான உறுதியும், இலகு எடையிலும் இருக்கும். கார்பன் ஃபைபர் மிக அதிக விலை கொண்டிருக்கும் நிலையில், கார்பன் ஃப்ளாக்ஸ் மிக குறைவான விலை கொண்ட மூலப்பொருளாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மூலப்பொருள் அதிர்வுகளை வெகுவாக உள்வாங்கக்கூடிய தன்மையையும் பெற்றிருக்கும். எதிர்காலத்தில் ராணுவ துறையிலும் இந்த கார்பன் ஃப்ளாக்ஸ் மூலப்பொருளை பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளதாக மீன் மெட்டல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஞ்சின்

மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஞ்சின்

எம் ஸீரோ காரை ஹைபிரிட் எரிபொருள் நுட்பம் கொண்டதாக தயாரிக்கப்படுகிறது. இந்த காரில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி நிறுவனத்திடமிருந்து 4.0 லிட்டர் வி8 இரட்டை டர்போசார்ஜர் எஞ்சினை சப்ளை பெற்று பொருத்துவதற்கு முடிவு செய்துள்ளனர். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 510 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். கூடுதலாக 50 பிஎச்பி பவரை கூட்டுவதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், எஞ்சின் சப்ளை பெறுவதற்கான பேச்சுவார்த்தை இன்னும் துவங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

எலக்ட்ரிக் மோட்டார்

எலக்ட்ரிக் மோட்டார்

இந்த காரில் 4.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தவிர்த்து, 190 பிஎச்பி பவரை அளிக்க வல்ல மின் மோட்டாரையும் பயன்படுத்த உள்ளனர். இந்த மின் மோட்டாரை அமெரிக்காவை சேர்ந்த க்ளீன் வேவ் டெக்னாலஜீஸ் நிறுவனத்திடமிருந்து பெற உள்ளதாக மீன் மெட்டல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 700 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இந்த சூப்பர் கார் இருக்கும்.

பேரலல் ஹைபிரிட் மாடல்

பேரலல் ஹைபிரிட் மாடல்

இது பேரலல் ஹைபிரிட் சிஸ்டத்தில் இயங்கும் கார் என்பதால், பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் என இரண்டும் சேர்ந்து இயங்கும். எனவே, பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் ஒரே நேரத்தில் இயங்கும்போது, அதிகபட்சமாக 750 பிஎச்பி பவரை அளிக்கவல்லதாக இருக்கும்.

 செயல்திறன்

செயல்திறன்

எம் ஸீரோ கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் தொட்டுவிடும் வல்லமை கொண்டதாக இருக்கும்.

 வடிவமைப்புப் பணிகள்

வடிவமைப்புப் பணிகள்

போர்ச்சுக்கல் மற்றும் இத்தாலியை சேர்ந்த பொறியாளர் குழுவினர் எம்- ஸீரோ சூப்பர் காரின் பாடி மற்றும் டிசைன் பொறுப்புகளை ஏற்றிருக்கின்றனர். இங்கிலாந்தை சேர்ந்த குழுவினர் ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்திய குழுவினர் எஞ்சின், கியர்பாக்ஸ், ஏரோடைனமிக்ஸ், காரின் எலக்ட்ரானிக்ஸ், ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பம் போன்றவற்றை உருவாக்கும் பொறுப்பை ஏற்றிருக்கின்றனர்.

இந்தியாவில் உற்பத்தி

இந்தியாவில் உற்பத்தி

முதலில் ஐரோப்பாவில் தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதையடுத்து, இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.75 லட்சம் விலையில் இந்த காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். எனவே, மிக குறைவான விலை கொண்ட சூப்பர் கார் மாடலாக இருக்கும்.

 
English summary
India's First Hybrid Supercar M Zero Prototype Almost Ready.
Story first published: Thursday, February 18, 2016, 15:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark