சென்னையில் அமையும் 'ரயில் ஆட்டோ ஹப்'... பயன்கள் என்னென்ன?

By Saravana

ரயில் மூலமாக கார்களை எடுத்துச் செல்வதற்கான நாட்டின் முதலாவது 'ரயில் ஆட்டோ ஹப்', சென்னையில் அமைக்கப்படும் என்று நேற்று தாக்கல் செய்யப்பட் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படும் சென்னையில் அமையும் இந்த புதிய ரயில் ஆட்டோ ஹப் பெரும் வரப்பிரசாதமான திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தால், வாகன உற்பத்தியாளர்களுக்கு மட்டுமின்றி இதர வகைகளிலும் பல்வேறு பயன்கள் கிடைக்கும். அதுபற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இந்தியாவின் டெட்ராய்ட்

இந்தியாவின் டெட்ராய்ட்

சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கார் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஹூண்டாய், ஃபோர்டு, ரெனோ, நிசான், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னையில்தான் உற்பத்தி மையத்தை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகின்றன.

போக்குவரத்து

போக்குவரத்து

பெரும்பாலான நிறுவனங்கள் கார்களை டிரக்குகள் மற்றும் கப்பல்கள் மூலமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றன. இதனால், சென்னையில் கார்களை எடுத்துச் செல்லும் டிரக்குகளால் பெரும் போக்குவரத்து நெரிசலும், கால விரயமும் ஏற்படுகிறது.

வாகன நெரிசல்

வாகன நெரிசல்

கார்களை எடுத்துச் செல்லும் மிக நீளமான டிரக்குகளால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன், இந்த வாகனங்களால் அதிக அளவு விபத்துக்களும் ஏற்டுகின்றன. எரிபொருள் செலவும் அதிகம் என்பதுடன், வாகனங்களின் புகையால் சுற்றுச்சூழலும் அதிகம் மாசுபடுகிறது.

Photo Credit: Youtube

ரயில் போக்குவரத்து

ரயில் போக்குவரத்து

ரயில் மூலமாக கார்களை எடுத்துச் செல்லும்போது எரிபொருள் செலவு குறையும் என்பதோடு, கால விரயமும் வெகுவாக குறையும். அதாவது, சென்னையிலிருந்து வட இந்தியாவிற்கு கார்களை டிரக்கில் எடுத்துச் செல்வதற்கு ஒரு வாரத்திற்குிம் மேலாகிறது. ஆனால், ரயில் மூலமாக ஓரிரு நாளில் கார்களை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சென்றுவிட முடியும்.

வரப்பிரசாதம்

வரப்பிரசாதம்

இந்த ஆட்டோ ஹப் மூலமாக வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கும் பயன் கிடைக்கும். குறித்த நேரத்தில் கார்களை டெலிவிரி பெறும் வாய்ப்பு உருவாகும். அத்துடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் வெகுவாக குறையும் என்பதுடன், சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்து போன்றவையும் தவிர்க்கப்படும்.

அதுமட்டுமா..

அதுமட்டுமா..

சென்னையில் அமைக்கப்படும் ஆட்டோ ஹப் எனப்படும் சரக்கு முனையத்தில் ஒரே நேரத்தில் 5,000 கார்களை நிறுத்தி வைக்க முடியும். ஒரே நேரத்தில் 310 கார்களை ஒரு சரக்கு ரயில் மூலமாக அனுப்பி வைக்க முடியும்.

ஸ்பெஷல் பெட்டிகள்

ஸ்பெஷல் பெட்டிகள்

கார்களை எடுத்துச் செல்வதற்காக பிரத்யேக ரயில் பெட்டிகள் பயன்டுத்தப்படும். இதனால், கார்களை மிகவும் பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து சாதனமாக அமையும்.

ஸ்டாக்யார்டு பளூ குறையும்

ஸ்டாக்யார்டு பளூ குறையும்

கார் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் கார்கள், அதற்காக ஆலையில் உள்ள பிரம்மாண்ட ஸ்டாக் யார்டுகளில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. ஆனால், ரயில் போக்குவரத்து மூலமாக ஒரே நேரத்தில் அதிக கார்களை அனுப்ப முடிவதால், ஸ்டாக்யார்டுகளில் அதிக நாட்கள் கார்களை நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

லைசென்ஸ்

லைசென்ஸ்

கடந்த ஆண்டு முதல்முறையாக மாருதி நிறுவனம் ரயில் மூலமாக கார் அனுப்பும் திட்டத்தில் இணைந்தது. இதற்காக, ரூ.5 கோடியை கொடுத்து 20 ஆண்டுகளுக்கான லெசென்ஸை ரயில்வே துறையிடமிருந்து பெற்றது. இதனை, மேலும் 10 ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்ள முடியும். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் 30 சதவீத கார்களை ரயில் மூலமாக அனுப்புவதற்கும் மாருதி திட்டமிட்டுள்ளது.

மிச்சம்

மிச்சம்

ஆட்டோ ஹப் மூலமாக கார்களை அனுப்பும் கார் நிறுவனங்களுக்கு 20 முதல் 25 சதவீதம் போக்குவரத்து செலவு குறையும். இது கார் நிறுவனங்களுக்கு கூடுதல் பலன் தரும் விஷயம். எனவேதான், ஃபோர்டு உள்ளிட்ட கார் நிறுவனங்கள் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளன.

எங்கு அமைகிறது...

எங்கு அமைகிறது...

சென்னை ஆட்டோ ஹப், வாலாஜாபாத்தில் அமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
The railways minister's Budget speech in parliment has announced that the country's first 'rail-auto hub' would come up near this city, also the largest automobile manufacturing hub. According to sources from Southern Railway, this would be at Walajabad, near here.
Story first published: Friday, February 26, 2016, 11:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X