புதிய சூப்பர் கார் பிளாட்ஃபார்மை உருவாக்கும் ஃபெராரி!

By Meena

கால மாற்றத்துக்குத் தகுந்தவாறு நம்மை நாமே பரிணமித்துக் கொள்கிறோம். நமது புற உலகில் உள்ள அனைத்தும் அதுபோலவே புதிய மாற்றம் பெற்று வருகின்றன. குறிப்பாக, டெக்னாலஜியை எடுத்துக் கொண்டால், கிராஹாம்பெல் கண்டுபிடித்த சாதனம், இன்று செல்போனாக உருமாறி பட்டித் தொட்டியெல்லாம் பரவி விட்டது.

அனைத்து துறைகளிலும் இதுபோன்ற வரவேற்கத்தக்க மாற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆட்டோ மொபைல் துறையும் அப்படித்தான். முழுக்க, முழுக்க மேனுவலாக இருந்த கார்களும், மோட்டார் சைக்கிள்களும் இப்போது அப்படியே ஆட்டோ மேடிக்காக மாறியுள்ளன.

சூப்பர் கார்

ஏறி அமர்ந்தால் போதும், போக வேண்டிய இடத்துக்கு நம்மைக் கொண்டுபோய் சேர்த்து விடும் இன்டெலிஜெண்ட் கார்கள் எல்லாம் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இது ஒரு புறம் என்றால், மறு புறம் கார்களின் டிசைன்களை எளிமைப்படுத்துவதும், மேம்படுத்துவதும் நடக்கின்றன.

டன் கணக்கில் இருந்த கார்களின் எடை இப்போது பாதியாக சுருங்கி விட்டது. அதேபோல முன்பு இருந்ததைக் காட்டிலும் அதன் உறுதித் தன்மை அதிகரித்துள்ளது. இந்த பரிமாற்றங்கள் வளர்ச்சிக்கான படிகளாகவே கருதப்படுகிறது. அப்படித்தான் சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஸ்போர்ட் கார் நிறுவனமாக விளங்கும் ஃபெராரி, தனது கார்களின் அடித்தளத்தை (பிளாட்ஃபார்ம்) மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இனி மார்க்கெட்டுக்கு வரப்போகும் ஃபெராரி கார்கள் எல்லாம் அந்த புதிய பிளாட்ஃபார்மின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதாகத்தான் இருக்கப் போகின்றனவாம்.

ஆல்டெய்ர் என்பது ஃபெராரி நிறுவனத்துக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் சார்பு நிறுவனமாகும். இந்த அல்டெய்ர் கம்பெனிதான் புதிய பிளாட்ஃபார்ம்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

புதிய அடித்தளங்கள், இப்போது உள்ள ஃபெராரி கார்களின் பிளாட்ஃபார்மைக் காட்டிலும் 10 சதவீதம் இலகுவாக அதாவது எடை குறைந்ததாக இருக்குமாம். மேலும், விபத்து நேர்ந்தால் இப்போது இருப்பதைக் காட்டிலும் 20 சதவீதம் பாதுகாப்பாக அதன் பேஸ் இருக்கும் எனத் தெரிகிறது.

பிளாட்ஃபார்ம்களில் வாகன ஒருங்கிணைத்தல், பேக்கிங் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கான தொழில்நுட்ப உதவிகளை அல்டெய்ர் நிறுவனம் வழங்கும் என்று தெரிவித்துள்ளது ஃபெராரி. மற்றபடி இதுதொடர்பான கூடுதல் தகவல்கள் அனைத்தையும் ரகசியமாகவே வைத்துள்ளது அந்நிறுவனம். சூப்பர் கார் பிளாட்ஃபார்மில் வரப்போகும் ஃபெராரி கார்களுக்காக நாமும் காத்திருப்போம்.

Most Read Articles
English summary
Is Ferrari Working On A New Supercar Platform?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X