இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக், இந்திய வாகன சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது.

இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக் குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ்...

இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ்...

இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக், சாகச பயன்பாடுகளுக்கான வாகனம் (அடெவென்சர் யூடிலிட்டி வெஹிகிள்) வகையை சார்ந்ததாகும்.

இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக் தான், இந்தியாவின் முதல் அடெவென்சர் யூடிலிட்டி வெஹிகிள் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

இது இந்திய வாகன சந்தைகளில், பெரிய அளவில் எதிர்பார்க்கபட்ட வாகனம் ஆகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக், 2.5 லிட்டர், விஜிஎஸ் டர்போ இண்டர் கூல்ட், டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 134 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 320 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக்கின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

மேலும், இது தேர்வு முறையிலான 4x4 சிஸ்டத்துடன் வெளியாகிறது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக்கில் எராளமான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

இதில், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ட்யூவல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், இபிடி எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக்-ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளது.

இவை எல்லாம் தாண்டி, இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக்கில், ஐக்ரிப் (iGRIP (Isuzu Gravity Response Intelligent Platform)) எனப்படும் இசுஸு கிராவிட்டி ரெஸ்பான்ஸ் இண்டெல்லிஜெண்ட் பிளாட்ஃபார்ம் மற்றும் ஷிஃப்ட்-ஆன்-தி-ஃபிளை டயல் வகையிலான 4 டபுள்யூ நாப் ஆகிய வசதிகளும் வழங்கபட்டுள்ளது.

பொழுதுபோக்கு;

பொழுதுபோக்கு;

இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக்கில், 7-இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.

இந்த எண்டர்டெயின்மெண்ட் சிஸ்டம், புளூடுத், யூஎஸ்பி, டிவிடி, ஆக்ஸ் மற்றும் ஐபாட் கனெக்டிவிட்டி ஆகிய வசதிகள் கொண்டுள்ளது.

இதர வசதிகள்;

இதர வசதிகள்;

இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக்கில், ஆட்டோ ஏர் கண்டிஷனர், டில்ட் அட்ஜஸ்டிபிள் ஸ்டியரிங், ஸ்டியரிங் மவுண்டட் ஆடியோ கண்ட்ரோல் உள்ளிட்ட அளவில்லா வசதிகள் வழங்கபட்டுள்ளது.

உற்பத்தி;

உற்பத்தி;

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் இசுஸு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம், இந்த இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக்கை இந்தியாவில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிட்டி என்ற பகுதியில் உள்ள உற்பத்தி ஆலையில் தயார் செய்யபடுகிறது.

கடுமையான பரிசோதனை;

கடுமையான பரிசோதனை;

இந்த இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக், அடெவென்சர் யூடிலிட்டி வெஹிகிள் சுமார் 40 லட்சம் கிலோமீட்டர் வரையிலான தூரத்திற்கு கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தபட்டுள்ளதாக இசுஸு நிறுவனம் தெரிவிக்கிறது.

போட்டியாளர்களின் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக், கூடுலான ஆயுள், நம்பகத்தன்மை, மற்றும் செயல்திறனை கொண்டுள்ளது.

இதனால், வாடிக்கையாளர்கள் இதன் தரத்தை உறுதியாக நம்பலாம் என தெரிவிக்கபடுகிறது.

டெலிவரி;

டெலிவரி;

இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக், இந்தியா முழுவதும் வரும் ஜூலை முதல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யபடும்.

விலை;

விலை;

இந்த இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக், அடெவென்சர் யூடிலிட்டி வெஹிகிள் 12.49 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் சென்னை) அறிமுக விலையில் விற்பனை செய்யபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இசுஸு டி- மேக்ஸ் பிக்கப் டிரக் விற்பனை எப்போது?

இசுஸு எம்யூ-7 எஸ்யூவியின் உட்புறத்தை சொர்க்க லோகமாக மாற்றிய டிசி டிசைன்ஸ்!

இசுஸு தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Isuzu Motors has launched all-new D-Max V-Cross model in Indian market. This is India's first adventure utility vehicle. D-Max V-Cross model at its facility in Sri City, Andhra Pradesh. Delivery of D-Max V-Cross is set to begin from July 2016. The adventure utility vehicle is priced at introductory offer of Rs. 12.49 lakh ex-showroom (Chennai). To know more, check here...
Story first published: Tuesday, May 10, 2016, 16:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X