இந்தியாவில் ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

Written By:

ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. நேற்றிரவு மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவியின் விபரங்கள் பத்திரிக்கையாளர் முன்னிலையில் வெளியிடப்பட்டன.

ஜாகுவார் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய மாடல் இந்திய வாடிக்கையாளர்களிடத்தில் அதிக வரவேற்பை பெறும் என்று நம்பப்படுகிறது. அறிமுக நிகழ்ச்சியிலிருந்து எடுக்கப்பட்ட பிரத்யேக படங்கள் மற்றும் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 இந்தியாவில் ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது!

மொத்தம் 2 விதமான டீசல் எஞ்சின் மாடல்களில், ப்யூர், பிரெஸ்டீஜ், ஆர் - ஸ்போர்ட் மற்றும் ஃபர்ஸ்ட் எடிசன் ஆகிய 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். வசதிகள், எஞ்சின், விலை விபரம் உள்ளிட்ட முக்கியத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

 இந்தியாவில் ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது!

2013ம் ஆண்டு பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஜாகுவார் சிஎக்ஸ்-17 கான்செப்ட் அடிப்படையில் இந்த புதிய எஸ்யூவி மாடல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஜாகுவார் எஃப்- டைப் ஸ்போர்ட்ஸ் கார் போன்ற முக அமைப்பை பெற்றிருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள் ஆகியவை ஜாகுவார் எக்ஸ்இ மற்றும் எக்ஸ்எஃப் சொகுசு செடான் கார்களை நினைவூட்டுகின்றது.

 இந்தியாவில் ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது!

ஹெட்லைட்டுக்கு நேர் கீழாக ஏர் டேம்களும், அதற்கு கீழே கச்சிதமான வடிவில் பனி விளக்குகளும் உள்ளன. பக்கவாட்டில் பின்புறத்தில் தாழ்ந்திறங்கும் கூரை, கம்பீரமான அலாய் வீல்கள் ஆகியவையும், வலுவான பாடி லைன்களும் மிரட்டலாக இருக்கிறது.

 இந்தியாவில் ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது!

டெயில் லைட்டுகள் மிக கச்சிதமாகவும், கவர்ச்சியாகவும் வசீகரிக்கின்றன. பின்புற பம்பர் வலுவான தோற்றத்தை தருகிறது. மொத்தத்தில் வாடிக்கையாளர்களை முதல் பார்வையிலேயே சொக்க வைத்துவிடும் என்று சொல்லலாம். டிசைனில் அசத்துவதால் போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருக்கும்.

 இந்தியாவில் ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது!

காரின் உட்புறம் எதிர்பார்ப்பைவிட அதிக பிரிமியம் அம்சங்களை கொண்டுள்ளது. பொழுதுபோக்கு மற்றும் இதர தகவல்களை ஒருங்கே வழங்கும் வசதி கொண்ட 8 இன்ச் அளவுடைய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இந்த சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும்.

 இந்தியாவில் ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது!

380w ஒலி திறன் கொண்ட மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் உள்ளது. விரும்பும் வண்ணத்தில் உயர்தர லெதர் இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளலாம். 10 விதமான வண்ணத்தில் மெலிதாக ஒளிரும் ஆம்பியன்ட் லைட்டுகள், பானரோமிக் சன்ரூஃப் எனப்படும் கண்ணாடி கூரை அமைப்பு ஆகியவையும் ஆப்ஷனலாக பெற்றுக் கொள்ளலாம்.

 இந்தியாவில் ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது!

ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவியில் 2.0 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் வி6 என இரண்டு விதமான டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இரண்டு மாடல்களிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மாடல்களும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

 இந்தியாவில் ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது!

2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 177 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க்கையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 8.7 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 208 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

 இந்தியாவில் ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது!

அடுத்ததாக, 3.0 லிட்டர் வி6 எஞ்சின் அதிகபட்சமாக 296 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் அளிக்கும் வல்லமை கொண்டது. இந்த மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 6.2 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 241 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

 இந்தியாவில் ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது!

இந்த சொகுசு ரக எஸ்யூவியில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பல வசதிகள் உள்ளன. ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் எளிதாக பார்க்கிங் செய்ய உதவும் 360 டிகிரி கோணத்தில் காரை சுற்றிலும் காட்டும் கேமரா ஆகியவை முக்கியமானவை.

 இந்தியாவில் ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது!

இந்த காரில் 650 லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட பொருட்கள் வைப்பதற்கான பூட் ஸ்பேஸ் உள்ளது. ஆடி க்யூ5 உள்ளிட்ட நேரடி போட்டியாளர்களைவிட இது 100 லிட்டர் வரை கூடுதல் கொள்ளளவு கொண்டது. இருக்கைகளை மடக்கி வைத்தால், இதன் பூட் ஸ்பேஸை 1,740 லிட்டர் கொள்ளளவு திறன் கொண்டதாக மாற்ற முடியும்.

 விலை விபரம்

விலை விபரம்

  • ஜாகுவார் எஃப் பேஸ் ப்யூர்: ரூ. 68.40 லட்சம்
  • ஜாகுவார் எஃப் பேஸ் பிரெஸ்டீஜ்: ரூ. 74.50 லட்சம்
  • ஜாகுவார எஃப் பேஸ் ஆர்-ஸ்போர்ட்: ரூ. 1.02 கோடி
  • ஜாகுவார் எஃப் பேஸ் ஃபர்ஸ்ட் எடிசன்: ரூ. 1.13 கோடி

[குறிப்பு: அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை]

English summary
British carmaker Jaguar has launched its first ever SUV, the F-Pace in India. Prices for the Jaguar F-Pace SUV start at Rs. 68.40 lakh ex-showroom (Delhi).

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark