ஜாகுவார் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்... !!

Written By:

லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் தனது முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் மாடலை ஜாகுவார் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

மிக அட்டகாசமான டிசைன், அதிக தூரம் பயணிக்கும் திறனை அளிக்கும் பேட்டரி பேக்கேஜுடன் இந்த புதிய எஸ்யூவி மாடல் வந்திருக்கிறது. பார்வையாளர்களை கவர்ந்து வரும் இந்த புதிய எஸ்யூவி மாடல் பற்றிய கூடுதல் விபரங்கள் மற்றும் படங்களை தொடர்ந்து காணலாம்.

ஜாகுவார் ஐ-ஃபேஸ் என்ற பெயரில் இந்த புதிய கான்செப்ட் கார் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. ஜாகுவார் எஃப் ஃபேஸ் எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

அதேநேரத்தில், ஜாகுவார் எஃப் ஃபேஸ் போன்று இல்லாமல் வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டு இருப்பதால், முன்புற பானட் அமைப்பு சற்று சிறியதாகவும், வசீகரமாகவும் இருக்கிறது. இது கான்செப்ட் மாடல் என்பதால், உலோக தகடு கூரைக்கு பதிலாக கண்ணாடி கூரை அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஐஃபேஸ் மின்சார எஸ்யூவியில் அலுமினியம், லெதர், கார்பன் ஃபைபர் உள்ளிட்ட பாகங்களால் தரமும், கவர்ச்சியும் இழைந்தோடுகிறது. 12 அங்குல உயர் துல்லிய திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும், 5.5 அங்குல டிஎப்டி திரை சென்டர் கன்சோலில் இடம்பிடித்துள்ளது.

இந்த காரின் மிக முக்கிய அம்சமாக தெரிவிக்கப்படுவது என்ன தெரியுமா? இந்த காரின் தயாரிப்பு நிலை மாடல் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 500 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்பதேயாகும்.

குயிக் சார்ஜ் என்ற விரைவான சார்ஜ் வசதி மூலமாக 90 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். தொழில்நுட்ப ரீதியிலும், வசதிகளிலும் மிக சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த எஸ்யூவியில் முன்புற மற்றும் பின்புற ஆக்சில்களில் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரில் 90 kWh லித்தியம் அயான் பேட்டரி உள்ளது. இந்த பேட்டரி மூலமாக மின் மோட்டார்கள் 0 - 96 கிமீ வேகத்தை வெறும் 4 வினாடிகளில் எட்டிவிடும்.

அடுத்த ஆண்டு இறுதியில் இந்த புதிய கான்செப்ட் காரின் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் செய்யப்படும். 2018ம் ஆண்டில் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது கான்செப்ட் நிலை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த காருக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படுகிறது.

English summary
Jaguar has unveiled the I-PACE concept, an all electric SUV just ahead of the LA Auto Show.
Story first published: Tuesday, November 15, 2016, 11:21 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos