இந்தியாவில் ஜாகுவார் - லேண்ட்ரோவர் கார்களின் விலை குறைகிறது...!!

By Meena

சிங்கம் 3 சூர்யா போல சாலைகளில் கம்பீரமாகச் சுற்றிக் கொண்டிருக்கும் கார் ஜாகுவார். இந்த மாடல் கார்கள் செம காஸ்ட்லி என்பதால், அவற்றை வாங்குவதும், தேரோட்டம் மாதிரி ஊர் பார்க்க ஓட்டிச் செல்வதும் ஒரு விதமான பெருமைக்குரிய விஷயம்.

லக்ஸரி மாடலான ஜாகுவாரை எடுத்துக் கொண்டால், அதன் விலை கி்ட்டத்தட்ட ரூ.50 லட்சமாகவும், அதற்கு அதிகமாகவுமே இருக்கிறது. இதேபோன்று, லேண்ட்ரோவர் மாடல்களின் விலையும் ரூ.50 லட்சத்தை நெருங்குகிறது.

ஜாகுவார் கார்

இந்தியாவில் லக்ஸரி கார் மார்க்கெட்டுக்குள் புலியைப் போல பதுங்கி பதுங்கி நுழைந்த இந்த மாடல் கார்கள், விற்பனையில் இப்போது நாலு கால் பாய்ச்சல் போடத் தொடங்கியுள்ளன.

லக்ஸரி கார்களின் மொத்த விற்பனையில் 2 அல்லது 3 சதவீதப் பங்கை வைத்திருந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள், படிப்படியாக வளர்ந்து தற்போது 10 சதவீதத்தை எட்டியுள்ளன.

லேண்ட்ரோவர் கார்

இந்த உத்வேகமும், வரவேற்பும் அந்நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போய் சேர்த்துள்ளது.
ஜாகுவார் எக்ஸ்இ, எக்ஸ் எஃப், லேண்ட் ரோவர் உள்ளிட்ட மாடல்களின் விலை இந்தியாவில் தற்போது ரூ.50 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது. இருப்பினும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க அதன் விலையில் மேலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களில் அதிக அளவில் உள்நாட்டு உதிரிபாகங்களை பயன்படுத்த அதன் தாய் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்திற்காக தனி ஆலையையும் இந்தியாவில் திறக்கவும் முடிவு செய்துள்ளது.

எனவே, ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்களின் விலை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் சாலையில் நிமிடத்துக்கொன்றாகப் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Jaguar Land Rover Could Be More Affordable Soon In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X