ஜாகுவார் லேண்ட்ரோவரின் தானியங்கி கார்... அசத்தும் தொழில்நுட்பம்... மயக்கும் மதிநுட்பம்...!

Written By: Krishna

காரில் ஏறி அமர்ந்தால் போதும், அதுவே தானாக இயங்கி நம்மை சேர வேண்டிய இடத்துக்குக் கொண்டு போய் விட்டால் எப்படி இருக்கும்? கேட்க மட்டும்தான் நன்றாக இருக்கும்.

அதெல்லாம் நடக்கற கதையா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழும். அப்படியே ஒரு தொழில்நுட்பம் வந்தாலும், பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் என்ற கேள்வியும் நமக்கு வரும். இந்த நியாயமான சந்தேகங்களுக்கு விடையளிக்கப் போகிறது பிரிட்டனைச் சேர்ந்த பிரம்மாண்ட கார் நிறுவனமான ஜாகுவார் லேண்ட்ரோவர்.

டிரைவர்லெஸ் காரை தயாரிக்கும் ஜாகுவார் - லேண்ட்ரோவர்!

தானாக இயங்கும் தொழில்நுட்பத்திலான காரை பல நிறுவனங்கள் உருவாக்கி வந்தாலும், அதன் செயல்பாடுகள் மீதான நம்பகத்தன்மை குறித்து எவருக்கும் தெளிவான எண்ணம் இல்லை. அதேவேளையில் ஜாகுவார் லேண்ட்ரோவர், பக்காவான பாதுகாப்பு டெக்னாலஜியுடன் தானியங்கி காரை வடிவமைத்து வருகிறது. டிரைவரைக் காட்டிலும் அதிக கவனமாக வாகனத்தை இயக்கும் வகையில் அந்த டெக்னாலஜி மேம்படுத்தப்பட்டு வருகிறது.

டிரைவர்லெஸ் காரை தயாரிக்கும் ஜாகுவார் - லேண்ட்ரோவர்!

சமதளப் பரப்பான சாலைகளில் மட்டுமல்ல, கரடு முரடனா காட்டு வழிப் பாதை, மலைச் சரிவுகளில் கூட தானியங்கி கார் உங்களைப் பத்திரமாக கூட்டிச் செல்லும் என்ற உத்தரவாதத்தை அளித்திருக்கிறது ஜாகுவார்.

டிரைவர்லெஸ் காரை தயாரிக்கும் ஜாகுவார் - லேண்ட்ரோவர்!

வெறுமனே ஒரு சில அம்சங்களை மட்டும் சேர்த்து அரை குறை தானியங்கி காராக உருவாகாமால், 360 டிகிரி கோணத்திலும் சாலையைக் கண்காணித்து வாகனத்தை இயக்கும் வகையிலான தொழில்நுட்பமாக இது அமைந்துள்ளது.

டிரைவர்லெஸ் காரை தயாரிக்கும் ஜாகுவார் - லேண்ட்ரோவர்!

கேமராக்கள், அல்ட்ரா சோனிக் தொழில்நுட்பம், ரேடார், லைடார் சென்சார்கள் ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக காருக்கு முன்னால் சிறு கல் இருந்தால் கூட தெரிந்துவிடும். அத்தகைய உயர் பாதுகாப்பு அம்சத்தின் அடிப்படையில், தானியங்கி கார் இயங்கும்.

டிரைவர்லெஸ் காரை தயாரிக்கும் ஜாகுவார் - லேண்ட்ரோவர்!

சாலை கரடு முரடானதாக இருந்தாலோ, சரிவாக இருந்தாலோ டயரின் அழுத்தத்தை வைத்து அதை அறிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல இயங்கும் வசதியும் இந்த காரில் உள்ளது.

டிரைவர்லெஸ் காரை தயாரிக்கும் ஜாகுவார் - லேண்ட்ரோவர்!

இது குறித்து, லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறை தலைவர் டோனி ஹார்பர் கூறுகையில், அடுத்த தலைமுறை கார்களில் இருக்க வேண்டிய புதிய அம்சங்களை குறிப்பிட்ட அளவோடு சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை. அனைத்து சாலைகளுக்கும் ஏற்ற வகையிலான தானியங்கி கார்களை உருவாக்கவே நாங்கள் முயன்று வருகிறோம் என்றார்.

டிரைவர்லெஸ் காரை தயாரிக்கும் ஜாகுவார் - லேண்ட்ரோவர்!

எது எப்படியோ, பாதுகாப்பான பயணத்தை இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்கள் வழங்கினால் மட்டும் போதும், இரு கரம் நீட்டி அதை வரவேற்கலாம்.

 
English summary
Jaguar Land Rover Unveil Autonomous Off-Road Technology.
Please Wait while comments are loading...

Latest Photos