ஜாகுவார் எக்ஸ்இ பிரெஸ்டீஜ் வேரியன்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

ஜாகுவார் இந்தியா நிறுவனம், ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு (லக்சுரி) செடானின் பிரெஸ்டீஜ் வேரியன்ட்டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

முன்னதாக, ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு செடான், ஜாகுவார் எக்ஸ்இ ப்யூர் மற்றும் ஜாகுவார் எக்ஸ்இ ஃபோர்ட்ஃபோலியோ ஆகிய 2 வேரியன்ட்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பிரெஸ்டீஜ் வேரியன்ட், மிட்-வேரியன்ட் எனப்படும் இடைப்பட்ட வேரியன்ட்டாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

jaguar-xe-prestige-variant-launched-india-for-rupees-43-69-lakh

ஜாகுவார் இந்தியா நிறுவனம், தங்களின் ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு செடான்களை, இந்தியா முழுவதும் உள்ள, 23 ரீடெயில் ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு செடானின் பிரெஸ்டீஜ் வேரியன்ட், 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 197 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 320 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு செடானின் பிரெஸ்டீஜ் வேரியன்ட்டில், டவுரஸ் லெதர் சீட்கள், டிரைவர் சீட் மெமரி ஃபங்க்ஷன், இன்டீரியர் மூட் லைட்டிங், ஸ்லைடிங் ரூஃப், 380 டபுள்யூ மெரிடியன் சவுன்ட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு செடானின் அனைத்து வேரியன்ட்களின் விலை விவரங்கள்;

ஜாகுவார் எக்ஸ்இ ப்யூர் வேரியன்ட் - 39.9 லட்சம் ரூபாய்

ஜாகுவார் எக்ஸ்இ பிரெஸ்டீஜ் வேரியன்ட் - 43.69 லட்சம் ரூபாய்

ஜாகுவார் எக்ஸ்இ ஃபோர்ட்ஃபோலியோ வேரியன்ட் - 47.99 லட்சம் ரூபாய்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் மும்பை விலைகள் ஆகும்.

English summary
Jaguar India has launched new Prestige variant in Jaguar XE luxury sedan. Previously, Jaguar XE Jaguar was available only in Pure and Portfolio range. Now, Jaguar XE Prestige variant is launched as all-new mid-variant option from Jaguar. Jaguar XE Prestige variant has Taurus leather seats, interior mood lighting, sliding roof, rear view camera, and 380 W Meridian sound system etc...
Story first published: Friday, June 10, 2016, 7:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark