2016 ஜாகுவார் எக்ஸ்ஜே சொகுசு செடான் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஜாகுவார் எக்ஸ்ஜே சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்ட்டுள்ளது.

இந்த புதிய ஜாகுவார் எக்ஸ்ஜே கார் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

2016 ஜாகுவார் எக்ஸ்ஜே பற்றி...

2016 ஜாகுவார் எக்ஸ்ஜே பற்றி...

ஜாகுவார் அல்லது ஜாகுவார் லேண்ட் ரோவர் என்று அழைக்கபடும் நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும், 2016 ஜாகுவார் எக்ஸ்ஜே லக்சுரி சலூன் இந்திய வாகன சந்தைகளுக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இந்த 2016 ஜாகுவார் எக்ஸ்ஜே காரில், ஏராளமான புதிய அம்சங்களும், நவீன தொழில்நுட்பங்களும் சேர்க்கபட்டுள்ளது.

கிடைக்கும் இஞ்ஜின் வகைகள்;

கிடைக்கும் இஞ்ஜின் வகைகள்;

2016 ஜாகுவார் எக்ஸ்ஜே லக்சுரி சலூன், பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

2016 ஜாகுவார் எக்ஸ்ஜே-வின் பெட்ரோல் தேர்வு, 2.0 லிட்டர், இன்லைன் 4 சிலிண்டர், பெட்ரோல் டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 236.71 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 340 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இது மணிக்கு 241 கிலோமீட்டர் என்ற உச்சபட்ச வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

2016 ஜாகுவார் எக்ஸ்ஜே-வின் டீசல் இஞ்ஜின் தேர்வு, 3.0 லிட்டர், வி6 டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 295.89 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 700 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இது மணிக்கு 250 கிலோமீட்டர் என்ற உச்சபட்ச வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

இதர வசதிகள்;

இதர வசதிகள்;

2016 ஜாகுவார் எக்ஸ்ஜே லக்சுரி சலூனுக்கு ஏராளமான மாற்றங்கள் செய்யபட்டுள்ளது. இதில் புதிய டிஎஃப்டி இண்ஸ்ட்ருமெண்ட் பேனல் பொருத்தபட்டுள்ளது.

இது வேகம், ப்யூவல் அளவு, டெம்பரேச்சர், மற்றும் வாகனம் தொடர்பான பல்வேறு தகவல்களை வழங்குகிறது. இதோடு மட்டுமல்லாமல், ஜாகுவார் நிறுவனம் இன்கண்ட்ரோல் டச் ப்ரோ இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது.

சீட் வசதிகள்;

சீட் வசதிகள்;

2016 ஜாகுவார் எக்ஸ்ஜே லக்சுரி சலூனின் சீட்கள் உயர்தர தையல் வேலைப்பாடுகள் கொண்டுள்ளது.

மேலும், இந்த சீட்கள், 3 வகையான மஸாஜ் புரோகிராம்கள் உடைய மெமரி ஃபங்க்‌ஷன் கொண்டுள்ளது.

நவீன வசதிகள்;

நவீன வசதிகள்;

ஆல்-சர்ஃபேசஸ் பிராக்ரஸ் கண்ட்ரோல், பார்க்கிங் அசிஸ்டன்ஸ், அடாப்டிவ் டைனமிக் சிஸ்டம், 360 டிகிரி பார்க் டிஸ்டன்ஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட அதி நவீன வசதிகளும் இந்த 2016 ஜாகுவார் எக்ஸ்ஜே லக்சுரி சலூனில் உள்ளது.

விற்பனை;

விற்பனை;

இந்திய வாகன சந்தைகளில், 2016 ஜாகுவார் எக்ஸ்ஜே லக்சுரி சலூனின் விற்பனை ஏற்கனவே துவிங்கி நடைபெற்று வருகிறது.

விலை;

விலை;

2016 ஜாகுவார் எக்ஸ்ஜே லக்சுரி சலூனின், பேஸ் வேரியண்ட் 98.03 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் (மும்பை)) துவக்க விலையில் விற்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்தியருக்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர், இங்கிலாந்தின் மிகப்பெரிய கார் நிறுவனமாக வளர்ச்சி

இங்கிலாந்தில், ஜாகுவார் லேண்ட்ரோவர் ஆலைக்கு சென்ற நரேந்திர மோடி

ஜாகுவார் தொடர்புடைய செய்திகள்...

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Jaguar has launched their, 2016 edition of its XJ in the Indian automobile market. Lots of very new features and technologies are added to this 2016 XJ by Jaguar. 2016 XJ luxury saloon is offered with both petrol engine and diesel engine options. The base variant of 2016 Jaguar XJ luxury saloon costs Rs. 98.03 lakh ex-showroom (Mumbai).
Story first published: Monday, February 1, 2016, 11:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X