ஜீப் நிறுவனத்தின் பிரிமியம் எஸ்யூவிகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

அமெரிக்காவின் பாரம்பரியம் மிக்க ஜீப் கார் நிறுவனத்தின் பிரிமியம் எஸ்யூவி மாடல்கள் சற்றுமுன் ஜோத்பூர் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. ஜீப் செரோக்கீ மற்றும் ஜீப் ரேங்லர் மாடல்கள் ஆகிய இரண்டு மாடல்களும் இந்தியாவிற்கு வந்துள்ளன.

இதில், ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்யூவி மூன்றுவிதமான மாடல்களிலும், ஜீப் ரேங்லர் எஸ்யூவி ஒரு மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. விலை, தொழில்நுட்ப விபரங்கள் உள்ளிட்ட முக்கியத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

 மாடல்கள் விபரம்

மாடல்கள் விபரம்

ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்யூவியானது ஜீப் செரோக்கீ சம்மிட், செரோக்கீ லிமிடேட் மற்றும் செரோக்கீ எஸ்ஆர்டி ஆகிய மூன்று மாடல்களில் வந்துள்ளது. இதில், செரோக்கீ எஸ்ஆர்டி பவர்ஃபுல் மாடல். மற்றொரு ஜீப் ரேங்கலர் எஸ்யூவியானது அன்லிமிடேட் என்ற ஒரேயொரு மாடலில் விற்பனைக்கு கிடைக்கும்.

ரேங்லர் எஞ்சின்

ரேங்லர் எஞ்சின்

ஜீப் ரேங்லர் அன்லிமிடேட் எஸ்யூவியில் இருக்கும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 200 எச்பி பவரை வழங்க வல்லது. இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் இருக்கிறது.

 செரோக்கீ எஞ்சின்

செரோக்கீ எஞ்சின்

செரோக்கீ எஸ்யூவியின் லிமிடேட் மற்றும் சம்மிட் மாடல்களில் 240 எச்பி பவரை அளிக்க வல்ல 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.

செரோக்கீ எஸ்ஆர்டி எஞ்சின்

செரோக்கீ எஸ்ஆர்டி எஞ்சின்

ஜீப் நிறுவனத்தின் பெர்ஃபார்மென்ஸ் பிராண்டான எஸ்ஆர்டி.,யின் கீழ் வந்திருக்கும் செரோக்கீ எஸ்ஆர்டி எஸ்யூவியில் 475 எச்பி பவரை வாரி வழங்கும் 6.4 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

செரோக்கீ எஸ்ஆர்டி செயல்திறன்

செரோக்கீ எஸ்ஆர்டி செயல்திறன்

செரோக்கீ எஸ்ஆர்டி மாடல் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 275 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

4 வீல் டிரைவ்

4 வீல் டிரைவ்

செரோக்கீ எஸ்யூவியின் மூன்று மாடல்களிலும் க்வாட்ராடிராக்-2 4 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. மேலும், எஸ்ஆர்டி எஸ்யூவியில் பிரெம்போ பிரேக்குகளும், ஆக்டிவ் டேம்பிங் சஸ்பென்ஷன் சிஸ்டமும் உள்ளது. எனவே, அதிசெயல்திறன் மிக்க செரோக்கீ எஸ்ஆர்டி மாடலுக்கு இவை பக்கபலமாக இருக்கும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

செரோக்கீ எஸ்யூவியில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பை ஸினான் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 20 இன்ச் வீல்கள் சிறப்பு சேர்க்கின்றன. அதேபோன்று, ரேங்லர் எஸ்யூவியில் ஹெவி டியூட்டி ஆக்சில்கள் பொருத்தப்பட்டிருப்பதால், ஆஃப்ரோடு சாகசங்களில் மிகச்சிறப்பாக செயல்படும். அதேபோன்று பூட்டும் வசதி கொண்ட சென்டர் கன்சோலும் உள்ளது. இந்த எஸ்யூவியில் யு- கனெக்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

 விலை விபரம்

விலை விபரம்

  • ஜீப் ரேங்லர் அன்லிமிடேட்: ரூ.71.59 லட்சம்
  • ஜீப் கிராண்ட் செரோக்கீ லிமிடேட்: ரூ.93.64 லட்சம்
  • ஜீப் கிராண்ட் செரோக்கீ சம்மிட்: ரூ.1.03 கோடி
  • ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி: ரூ.1.12 கோடி

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகள்

 இறக்குமதி

இறக்குமதி

தற்போது இந்த எஸ்யூவிகள் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதுதான் அதிக விலைக்கும் காரணம். ஆனால், அடுத்த ஆண்டிலிருந்து இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர். அப்போது விலை குறையும் என எதிர்பார்க்கலாம்.

முதலீடு

முதலீடு

ரஞ்சன்கவுனில் உள்ள ஃபியட் ஆலையில் இந்த ஜீப் எஸ்யூவிகள் அசெம்பிள் செய்யப்படும். இந்த ஆலையில் ஜீப் எஸ்யூவி உற்பத்தி பிரிவுகளுக்காக ரூ.1,878 கோடியை ஃபியட் கிறைஸ்லர் குழுமம் முதலீடு செய்துள்ளது.

ஷோரூம் திட்டம்

ஷோரூம் திட்டம்

தற்போது ஆமதாபாத்தில் ஷோரூம் திறக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் சென்னை மற்றும் டெல்லியில் புதிய ஷோரூம் திறக்கப்பட இருக்கிறது. அக்டோபரில் மும்பையிலும், டெல்லியில் மற்றொரு ஷோரூமையும் திறக்க இருப்பதாக ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் மாடல்கள்

பெட்ரோல் மாடல்கள்

ஜீப் செரோக்கீ மற்றும் ரேங்லர் எஸ்யூவிகளின் பெட்ரோல் மாடல்களையும் வரும் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஜீப் திட்டமிட்டு இருக்கிறது.

 
English summary
Jeep Grand Cherokee Rumbles Into India; Prices Start At Rs. 93.64 Lakh
Story first published: Tuesday, August 30, 2016, 11:09 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark