ஜீப் பிராண்ட், இந்தியாவில் ஆகஸ்ட் 31-ல் அறிமுகம் செயப்படும் - முழு விவரம்

Written By:

ஜீப் பிராண்ட், இந்தியாவில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜீப் பிராண்ட்டின் அறிமுகம், பல ஆண்டுகளாக தாமதமாகி வந்தது. ஃபியட் நிறுவனம் கீழ் இயங்கும் ஜீப் பிராண்ட்டின் இந்திய பிரவேசம் தொடர்ந்து தாமதமாகி வந்ததால், இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா, இல்லையா என்ற சந்தேகங்கள் கூட எழ துவங்கியது.

மேலும், ஜீப் பிராண்ட் மற்றும் இந்த பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் கார்களுக்கு இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில், ஜீப் பிராண்ட்டின் ஆர்வலர்களை சந்தோஷப்படுத்தும் வகையில், ஜீப் பிராண்ட்டின் இந்திய பிரவேசம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

ஜீப் பிராண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள மாடல்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகமாகும் மாடல்கள்;

அறிமுகமாகும் மாடல்கள்;

தற்போதைய நிலையில், மிக குறைந்த அளவிலான தகவல்களே வெளியாகியுள்ளன.

ஜீப் பிராண்ட்டின் இந்திய தளத்தில், ஜீப் கிரான்ட் செரோக்கீ, ரேங்லர் அன்லிமிடெட், கிரான்ட் செரோக்கீ எஸ்ஆர்டி ஆகிய மாடல்கள் அறிமுகத்திற்கு காத்திருப்பது போல் குறிப்பிடப்பட்டுள்ளது.

5-டோர் மாடல்;

5-டோர் மாடல்;

ஜீப் பிராண்ட், 3-டோர்கள் கொண்ட மாடலையே இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்நிறுவனம் 5-டோர்கள் கொண்ட மாடலையே இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ரேங்லர்;

ரேங்லர்;

ரேங்லர் மாடல், இந்தியாவில் டீசல் இஞ்ஜின் தேர்வுடன் மட்டுமே விற்பனை செய்யப்படும். இதன் 4x4 மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வெளியாகும்.

வேரியன்ட்;

வேரியன்ட்;

கிரான்ட் செரோக்கீ, பேஸ் வேரியன்ட்டான 'லிமிடெட்' மற்றும் டாப்-என்ட் வேரியன்ட்டான 'சம்மிட்' என்ற 2 வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கிரான்ட் செரோக்கீ எஸ்ஆர்டி;

கிரான்ட் செரோக்கீ எஸ்ஆர்டி;

கிரான்ட் செரோக்கீ எஸ்ஆர்டி, 6.4-லிட்டர், வி8, ஹெமிகுடே பெட்ரோல் 475 பிஹெச்பி இஞ்ஜின் கொணடுள்ளது. இந்த மாடலும், அலுவல் ரீதியான ஜீப் இந்தியா இணையதளத்தில் டீஸ் செய்யபட்டது.

இது இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டால், குறைந்த எண்ணிக்கையிலேயே அறிமுகம் செய்யப்படும்.

வருங்கால திட்டங்கள்;

வருங்கால திட்டங்கள்;

ஜீப் பிராண்ட், தங்களின் போர்ட்ஃபோலியோவின் கீழ் அடுத்த சில ஆண்டுகளில் வேறு சில மாடல்களையும இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளனர்.

முதலாவதாக, ஜீப் ரெனிகேட் தான் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகின்றது. இது ஏற்கனவே இந்தியாவில் 'சி-எஸ்யூவி' என்ற குறியீட்டு பெயருடன் (கோட்நேம்) அழைக்கப்படுகிறது.

விலை;

விலை;

ஜீப் பிராண்ட்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட உள்ள மாடல்களின் எதிர்பார்க்கப்படும் விலைகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ரேங்லர் - 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய்

ஜீப் கிரான்ட் - 35 லட்சம் ரூபாய் முதல் 45 லட்சம் ரூபாய்

கிரான்ட் செரோக்கீ எஸ்ஆர்டி - 75 லட்சம் ரூபாய் முதல்

ஃபியட் க்றைஸலர் ஆட்டோமொபைல்ஸ்;

ஃபியட் க்றைஸலர் ஆட்டோமொபைல்ஸ்;

ஃபியட் க்றைஸலர் ஆட்டோமொபைல்ஸ், இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் கார் நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனத்தின் ஆல்ஃபா ரோமியோ, க்றைஸலர், டாட்ஜ், ஃபியட், ஃபியட் புரோஃபெஷ்னல், ஜீப், லான்சியா, ராம் டிரக்ஸ், அபாரத், மோபர் மற்றும் எஸ்ஆர்டி ஆகிய பிராண்ட்கள் இயங்குகின்றன.

மேலும், மஸராட்டி, கொமாவ் மற்றும் மேக்னட்டி மரெல்லி மற்றும் டெக்சிட் ஆகிய பிராண்ட்களும் ஃபியட் க்றைஸலர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானவை ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்தியாவிற்கான ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவி வேரியன்ட்கள் வெளியீடு - முழு விவரம்

ஜீப் பிராண்ட்டின் ரேங்லர் ட்ரெய்ல்கேட் கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்

ஜீப் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Fiat Chrysler Automobiles owned Jeep brand is to launch in India. Fiat has confirmed Jeep brand will launch in India on August 31. Official Jeep-India website line-up has information of three vehicles - Grand Cherokee, Wrangler Unlimted and Grand Cherokee SRT. We expected Jeep to bring 3-door Wrangler to India, but Fiat decided to bring 5-door version. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark