ஜீப் எஸ்யூவிகளுக்கு பிரத்யேக ஷோரூம்களை திறக்கிறது ஃபியட்!

Written By: Krishna

அமெரிக்காவைச் சேர்ந்த அல்ட்ரா கிளாசிக் கார் தயாரிப்பு நிறுவனம் ஜீ்ப். ஆட்டோ மொபைல் துறையில் பெரும்பாலானோரால் நேசிக்கப்படும் பிராண்டுகளில் அதுவும் ஒன்று.

அதன் கிளாஸான லுக், ப்ரீயமான ஸ்டைல் மற்றும் தன்னிகரற்ற பெயர் ஆகியவையே ஜீப் நிறுவனத்தின் மீதான மதிப்புக்குக் காரணம். ஃபியட் க்ரிஸ்லெர் ஆட்டோ மொபைல்ஸ் (எஃப்.சி.ஏ.) லிமிடெடின் துணை நிறுவனம்தான் ஜீப். இந்தியாவில் ஃபியட் வாயிலாகவே ஜீப் நிறுவனம் தயாரித்த கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஜீப் எஸ்யூவி

கிராண்ட் செரோக்கி, ரேங்க்லர் அன்லிமிடெட் உள்ளிட்ட மாடல்கள் ஜீப் நிறுவனத்தின் ஹிட்டான கார்கள். சரி, இப்போது விஷயம் என்னவென்றால், இந்தியாவில் எக்ஸ்க்லூசிவ் ஷோ ரூம்களை ஜீப் நிறுவனம் திறக்கப் போகிறதாம். அதாவது பிரத்யேக விநியோக உரிமையின் கீழ் ஜீப்பின் அதிகாரப்பூர்வ ஷோ ரூம்களாக அவை இருக்கப் போகின்றன.

செரோக்கி மற்றும் ரேங்க்லர் அன்லிமிடெட் மாடல் ஆகிய இரண்டுமே இந்த ஷோ ரூமில் விற்பனை செய்யப்படும். அந்த எஸ்யூவி மாடல் கார்கள் நிகழாண்டில் நடத்தப்பட்ட ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டன. அப்போதே அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு.

கடந்த 3 ஆண்டுகளாக ஜீப் நிறுவனத்தின் புதிய மாடல்கள் இந்திய சந்தையில் இல்லாதது ஆட்டோ மொபைல் ஆர்வலர்களுக்கு வருத்தமாக இருந்தது. இந்நிலையில் அந்தக் குறையைத் தீர்க்க, பிரத்யேக ஷோ ரூம் முடிவை எடுத்துள்ளதாம் ஜீப் நிறுவனம்.

அதற்காக ரூ.1800 கோடியை இந்தியாவில் முதலீடு செய்கிறது அந்நிறுவனம். இந்த ஆண்டு செப்டம்பரில் மூன்று ஷோ ரூம்கள் முதல்கட்டமாகத் திறக்கப்படும் என்றும், அதன் பிறகு படிப்படியாக நாடு முழுவதும் அவை விரிவுபடுத்தப்படும் என்றும் ஜீப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட கார்களை இறக்குமதி செய்து விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் காரின் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, அவற்றை ஒருங்கிணைத்து வடிவமைக்கும் பணிகள் ஃபியட் வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

கிராண்ட் செரோக்கி மாடலைப் பொருத்தவரை 241 பிஎச்பி முறுக்கு விசையை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 8 கியர்கள் ஆட்டோமேடிக் ஆப்ஷனில் வழங்கப்பட்டுள்ளன.

ரேங்க்லர் மாடல் காரானது 197 பிஎச்பி உற்பத்தித் திறன் கொண்ட டீசல் எஞ்சினில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 கியர்கள் ஆட்டோமேடிக் ஆப்ஷனுடன் உள்ளது. ஜீப் நிறுவனத்தின் கார்கள் இந்திய சாலைகளை இனி ஆக்கிமிரக்கும் என எதிர்பார்க்கலாம். விரைவில் பார்க்கலாம் அதன் மேல் மக்கள் வைத்துள்ள ஆதரவை....

English summary
Jeep To Have Exclusive Dealerships For Its Products In India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark