உலகின் மிக விலை உயர்ந்த எஸ்யூவி கார்ல்மேன் கிங் அறிமுகம்

Written By:

உலகின் மிக விலை உயர்ந்த எஸ்யூவி பற்றி உங்களுக்கு தெரியுமா?

பலரும் பென்ட்லீ நிறுவனம் வழங்கும் பென்டகா தான் மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி என நினைத்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், பென்டகா மாடலை விடவும் விலை உயர்ந்த கார் ஒன்று உள்ளது.

கார்ல்மேன் கிங் என பெயரிடப்பட்டுள்ள இந்த எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

கார்ல்மேன் கிங்...

கார்ல்மேன் கிங்...

கார்ல்மேன் கிங் என்ற பெயரில் கொண்டு உலகின் மிக விலை உயர்ந்த எஸ்யூவி என்ற சாதனை படைத்துள்ள இந்த கார், சீனாவை மையமாக கொண்டு இயங்கும் கார் உற்பத்தி நிறுவனமான ஐஏடி ஆட்டோமொபைல் டெக்னாலஜி நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

தோற்றம்;

தோற்றம்;

மிக வித்தியாசமாக தோன்றும் லம்போர்கினி காரை எடுத்து அதற்கு மிக கட்டுமஸ்தான எஸ்யூவி பாடி வழங்கினால் எப்படி இருக்குமோ, அப்படி தான் இந்த கார்ல்மேன் கிங் எஸ்யூவி காரின் தோற்றம் உள்ளது.

பெயர் காரணம்;

பெயர் காரணம்;

கார்லோமேன் 1 (Carloman I) என்றவர் தான் ஃபிராங்க் என்ற ராஜ்ஜியத்தின் மன்னராக இருந்தார். இவர், முதல் புனித ரோமானிய பேரரசர் (ஹோலி ரோமன் எம்பரர்) என்று அழைக்கபடும் ஷார்ல்மேன் (Charlemagne) அவர்களின் சகோதரர் ஆவார்.

இந்த கார்லோமேன் 1 மன்னரின் பெயர் அடிப்படையாக கொண்டு தான், உலகின் மிக விலை உயர்ந்த எஸ்யூவியான இந்த காருக்கு கார்ல்மேன் கிங் என பெயர் சூட்டபட்டுள்ளது.

லிமிடெட் எடிஷன்;

லிமிடெட் எடிஷன்;

கார்ல்மேன் கிங் எஸ்யூவி லிமிடெட் எடிஷன் மாடலாக வழங்கபடுகிறது. இந்த மாடலில் வெரும் 10 கார்கள் மட்டுமே தயாரிக்கபடுகிறது என்பது குறிப்பிடதக்கது.

டிசைன்;

டிசைன்;

டிசைன்படி, கார்ல்மேன் கிங் எஸ்யூவி மிக கூர்மையன ஆங்குலார் தோற்றங்களும், டைமண்ட் வடிவத்திலான மடிப்புக்கோடுகளும் (creases) கொண்டுள்ளது.

இது வெறித்தனம் மிகுந்த லம்போர்கினி உருஸ் மாடலை போல் காட்சி அளிக்கிறது.

தங்கம்;

தங்கம்;

கார்ல்மேன் கிங் எஸ்யூவியின் வாள் போன்ற பேட்ஜ் (Sword Badge), உறுதியான தங்கம் கொண்டு உருவாக்கபட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

கார்ல்மேன் கிங் எஸ்யூவியில் ஏராளமாக லெதர் மற்றும் அலகாண்ட்ரா உபயோகிக்கபட்டுள்ளது. மேலும், இதில் மரக்கட்டை மற்றும் தங்கத்திலான ஆக்ஸ்ண்ட்கள் சேர்க்கபட்டுள்ளது.

கூடுதலாக, கார்ல்மேன் கிங் எஸ்யூவியில் ஃபிரிட்ஜ், வைன் கிளாஸ்கள் மற்றும் டீ செட் ஆகிய ஏராளமான அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

கார்ல்மேன் கிங் எஸ்யூவி, எஃப்-450 பிக்-அப் பாடி கொண்டுள்ளது. இத்துடன் ஃப்ளாட்லைனிங் 6.8 லிட்டர், ஃபோர்ட் வி10, இஞ்ஜின் கொண்டுள்ளது.

இது 363 ஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

கார்ல்மேன் கிங் எஸ்யூவியில் உள்ள தங்கம் போன்ற அமைப்பு, எஃப்-150 பிக் அப் வாகனத்துடையதாகும்.

விலை;

விலை;

கார்ல்மேன் கிங் எஸ்யூவி, 1.84 மில்லியன டாலர்கள் (இந்திய மதிப்பில் 12.7 கோடி ரூபாய்) என்ற விலையில் விற்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள் - 1;உலகின் காஸ்ட்லி மோட்டார் இல்லத்தை முகேஷ் அம்பானி வாங்கியதாக பரபரப்பு!

இதர தொடர்புடைய செய்திகள் - 1;உலகின் காஸ்ட்லி மோட்டார் இல்லத்தை முகேஷ் அம்பானி வாங்கியதாக பரபரப்பு!

உலகின் காஸ்ட்லி மோட்டார் இல்லத்தை முகேஷ் அம்பானி வாங்கியதாக பரபரப்பு!

உலகின் காஸ்ட்லியான டாப் -10 ராணுவ பீரங்கிகள்: சிறப்புத் தொகுப்பு

உலகின் காஸ்ட்லியான டாப் - 10 ரோல்ஸ்ராய்ஸ் கார்களும், அதன் சிறப்புகளும்!

இதர தொடர்புடைய செய்திகள் - 2;

இதர தொடர்புடைய செய்திகள் - 2;

நட்சத்திர கால்பந்தாட்ட வீரர்களும்... அவர்களது அசத்தலான கார்களும்!

இமாலய விலைக்கு ஏலம் போன கார்கள் - சிறப்பு தொகுப்பு

காப்பீடு நிறுவனங்களை கதற வைக்கும் காஸ்ட்லியான கார் விபத்துக்கள்!

இதர தொடர்புடைய செய்திகள் - 3;

இதர தொடர்புடைய செய்திகள் - 3;

இந்தியாவின் விலையுயர்ந்த டாப் 10 கார்கள்- விபரம்!

ஆஹோ, ஓஹோ, அற்புதம்... அழகில் மட்டுமல்ல, விலையிலும் உலகின் நம்பர்-1!!

உலகின் காஸ்ட்லியான டாப்- 10 தனி நபர் பயன்பாட்டு விமானங்கள்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

கார்ல்மேன் கிங் எஸ்யூவி - கூடுதல் தகவல்கள்

கார்ல்மேன் கிங் எஸ்யூவி - கூடுதல் தகவல்கள்

கார்ல்மேன் கிங் எஸ்யூவி - கூடுதல் தகவல்கள்

கார்ல்மேன் கிங் எஸ்யூவி - கூடுதல் தகவல்கள்

கார்ல்மேன் கிங் எஸ்யூவி - கூடுதல் தகவல்கள்

கார்ல்மேன் கிங் எஸ்யூவி - கூடுதல் தகவல்கள்

கார்ல்மேன் கிங் எஸ்யூவி - கூடுதல் தகவல்கள்

கார்ல்மேன் கிங் எஸ்யூவி - கூடுதல் தகவல்கள்

கார்ல்மேன் கிங் எஸ்யூவி - கூடுதல் தகவல்கள்

English summary
Do you know about the costliest SUV in the World? China based carmaker IAT Automobile Technology has launched the most expensive SUV in the World, called as Karlmann King. Only 10 units of Karlmann King will ever be made. Karlmann King SUV is launched for $1.84 Million (Rs. 12.7 Crores). To know more about Karlmann King SUV, check here...
Story first published: Wednesday, April 27, 2016, 16:04 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark