கர்நாடகாவில் புகை உமிழும் பஸ் குறித்து புகார் அளித்தால் 1000 ரூபாய் பரிசு

Written By:

கர்நாடகாவில் புகை உமிழும், மாசு ஏற்படுத்தும் பஸ் குறித்து புகார் அளித்தால் 1000 ரூபாய் பரிசு வழங்கப்படும். நீங்கள், பிஎம்டிசி எனப்படும் பெங்களூரு மாநகருக்குள் இயங்கும் பஸ்கள் குறித்தும், கேஎஸ்ஆர்டிசி எனப்படும் வெளி மாவட்டங்கள் அல்லது வெளி மாநிலங்களுக்கு செல்லும் பஸ்களை குறித்தும் புகார் தெரிவிக்கலாம்.

பஸ் சேவைகளை பசுமையாக மாற்றும் நோக்கில், கர்நாடகா ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (Karnataka State Transport Corporation (KSRTC)) மற்றும் பெங்களூரு மெட்ரோபோலிட்டன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (Bengaluru Metropolitan Transport Corporation (BMTC)) ஆகிய இரண்டுமே, புகை உமிழும் பஸ்கள் குறித்து புகார் தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளன.

karnataka-rewards-if-you-report-buses-emit-pollution-causing-smoke

நீங்கள் புகார் தெருவிக்கும் பஸ் ஆனது, சேவையில் இருந்து விலக்கி கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

இது குறித்து, ஒரு கேஎஸ்ஆர்டிசி அதிகாரி சில முக்கியமான தகவல்களை வழங்கினார். "இது வரை, பொதுமக்களால் 3 புகை உமிழும் பஸ்கள், பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டு புகார் தெரிவிக்கபட்டுள்ளது. வாக்கு அளித்தபடி, புகை உமிழும் பஸ் குறித்து புகார் அளித்த 3 பேர்களுக்கும் தலா 1000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்ச்சி நடவடிக்கை கர்நாடக மாநிலத்தின், பெங்களூரு உட்பட 15 பிற மாவட்டங்களிலும் விரிவு படுத்தப்படும். இத்தகைய முயற்சிகள், நமது வாழ்க்கையை சுற்றுசூழலுக்கு மேலும் இனக்கமானதாக ஆக்கிவிடும் என நம்புகிறோம்" என அந்த அதிகாரி தெரிவித்தார்.

பஸ் சேவைகளை பசுமையாக மாற்றும் நோக்கில், பிஎம்டிசி நிறுவனம், 135 பஸ்களை, 20% பயோ-ஃப்யூவல் கொண்டு இயக்கப்பட உள்ளது.

இதன் சோதனை முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2015-ஆம் ஆண்டில், பிஎம்டிசி நிறுவனம், ஒரு மாதத்தில், 5,000 லிட்டர் டீசலை மாற்றி பயோ-ஃப்யூவலை உபயோகித்தனர்.

இதனால், வாசகர்களே நீங்கள் இனி புகை உமிழும் பிஎம்டிசி அல்லது கேஎஸ்ஆர்டிசி குறித்து புகார் அளித்து புக்கர் தெரிவித்து 1000 ரூபாய் பரிசு பெறலாம்.

புகை உமிழும் பஸ்கள் குறித்த புகார்களை, பிஎம்டிசி ஹெல்ப்லைன் ஆன (BMTC's helpline --- 1-800-425-1663), 1-800-425-1663 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

English summary
If you spot BMTC or KSRTC bus 'smoking' emitting smoke in public and causing pollution, you can earn reward of Rs.1000, by complaining about it and you can also have it removed from service. As an initiative to go green, KSRTC and BMTC have been asking citizens to report such polluting buses. These complaints can be done to BMTC's helpline (1-800-425-1663)...
Story first published: Friday, June 17, 2016, 8:10 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more