கைனட்டிக் ஸஃபர் எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

கைனட்டிக் ஸஃபர் என்ற புதிய எலக்ட்ரிக் மூன்று சக்கர பயணிகள் வாகனத்தை கைனட்டிக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கைனட்டிக் கிரீன் எனர்ஜி அண்ட் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம், இந்த எலக்ட்ரிக் ஆட்டோ தயாரிக்கபடுகிறது.

கைனட்டிக் ஸஃபர் ஸ்டீல் பாடியை கொண்டு தயாரிக்கபட்டுள்ளது. இது ட்யூவல் ஹெட்லேம்ப்கள், கன்சோல், ரேன்ஜ் இண்டிகேட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

கைனட்டிக் ஸஃபர் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 25 கிலோமீட்டர் எனும் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதில் 4 பயணிகளும், டிரைவரும் பயணிக்க முடியும்.

இந்த கைனட்டிக் ஸஃபர் ஆட்டோவின் (இ-3 வீலர்) கியர்பாக்ஸ், ஃப்லைஓவர்களில் திறன்பட செல்லும் வகையில் உருவாக்கபட்டுள்ளது. பேட்டரி தயாரிக்கும் நிறுவனமான எக்ஸைட் தான், இந்த கைனட்டிக் ஸஃபர் ஆட்டோவிற்கான லெட் ஆசிட் பேட்டரி சிஸ்டத்தை வழங்குகிறது.

கைனட்டிக் ஸஃபர் ஆட்டோ, மஹாராஷ்டிராவின் அஹ்மத்நகர் என்ற இடத்தில் உள்ள கைனட்டிக் கிரீன் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யபடுகிறது. இந்த உற்பத்தி ஆலையில் இருந்து ஒரு மாதத்திற்கு 4,000 வாகனங்கள் தயாரிக்கும் வகையிலான உற்பத்தி திறன் உள்ளது.

kinetic-safar-electric-auto-three-wheeler-vehicle-launched-in-india

உத்திர பிரதேச அரசிடம் இருந்து 27,000 ஆட்டோக்களை வழங்கக்கோரி, கைனட்டிக் குழுமம் ஏற்கனவே அதிக அளவிலான ஆர்டர்களை குவித்துள்ளது.

அனைத்தையும் விட மிக முக்கியமான விஷயம், இந்த கைனட்டிக் ஸஃபர் ஆட்டோ வெரும் 1.28 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

இத்தகைய குறைந்த விலையில், மாசு உமிழ்வு வெளிபடுத்தாத திறன்மிக்க எலக்ட்ரிக் ஆட்டோ கிடைப்பதால், இன்னும் ஏராளமான வாடிக்கையாளர்கள் கைனட்டிக் ஸஃபர் 3 வீலரை விருப்பதுடன் ஏற்று கொள்வார்கள என எதிர்பார்க்கபடுகிறது.

Most Read Articles
English summary
Kinetic Safar Electric Auto (Three-Wheeler) is launched In India. This Kinetic Safar Electric Auto is produced by Kinetic Green Energy and Power Solutions. This e-three wheeler capable of climbing flyovers. The Kinetic Group already bagged huge orders 27,000 Kinetic Safar vehicles from the UP government.
Story first published: Friday, January 22, 2016, 11:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X