லம்போர்கினி நிறுவனத்தின் 5,000-வது அவென்டேடார் சூப்பர் கார் தயாரிக்கபட்டு வெளியானது

Written By:

லம்போர்கினி நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் இருந்து, 5,000-வது அவென்டேடார் தயாரிக்கபட்டு வெளியானது.

இந்த இத்தாலிய கார் உற்பத்தி நிறுவனத்தின் தலைமையகம், சண்ட்'அகாடா போலோக்னீஸ் (Sant'Agata Bolognese) என்ற இடத்தில் அமைந்துள்ளது.

லம்போர்கினியின் 5,000-வது அவென்டேடார் சூப்பர் கார், எல்பி700-4 ரோட்ஸ்டர் காராக இருந்தது. ரோஸ்ஸோ பியா (ரெட்) நிறத்தில் பெயிண்டிங் செய்யபட்ட இந்த சூப்பர் கார், பெயர் வெளியிடப்படாத ஒரு இத்தாலிய வாடிக்கையாளரால் வாங்கபட்டது.

அவென்டேடார் இந்த சாதனையை நிகழ்த்த 5 ஆண்டு காலம் ஆகியுள்ளது. முர்சியலாகோவின் மாற்றாக அமைந்த அவென்டேடார் மாடலின் உற்பத்தி, ஃபிப்ரவரி 2011-ல் துவங்கியது.

அவென்டேடார் எல்பி700-4 ரோட்ஸ்டர், 6.5 லிட்டர், நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட், வி12 இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 690 பிஹெச்பியையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இது நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடுகிறது.

அவென்டேடார் எல்பி700-4 ரோட்ஸ்டர், உச்சபட்சமாக மணிக்கு 349 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

lamborghini-aventador-5000th-car-released

லம்போர்கினி நிறுவனம், அடுத்ததாக வெளியாக எஸ்யூசியான உருஸ் மீது அதிகம் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த உருஸ் எஸ்யூவி, ட்வின் - டர்போ, வி8 இஞ்ஜின் கொண்டிருக்கும்.

இந்த உருஸ் எஸ்யூவி, பென்ட்லீ பென்டைகா மாடலுடன் போட்டி போட வேண்டி இருக்கும். இந்த உருஸ் எஸ்யூவி, லம்போர்கினி நிறுவனத்தின் விற்பனையை அதிகபடுத்தும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

லம்போர்கினி நிறுவனத்தின் தயாரிப்புகள், உலகின் மிக விலை உயர்ந்த கார்களில் ஒன்றாக விளங்குகின்றன என்பது குறிப்பிடதக்கது.

English summary
5,000th Aventador was rolled-off from the Lamborghini Production Line. Italian carmaker Lamborghini's 5,000th Aventador was rolled out from Sant'Agata Bolognese headquarters. 5000th Aventador was a LP700-4 roadster, which was painted in Rosso Bia (red) color. It was sold to an unnamed Italian buyer. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark