லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர், இந்தியாவில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர்...

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர்...

இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் சூப்பர் கார் நிறுவனமான லம்போர்கினி, தங்கள் நிறுவனம் வழங்கும் லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் சூப்பர்காரை இந்தியாவின் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்தனர்.

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் சூப்பர் கார் ஆனது, லம்போர்கினி ஹூராகேன் மாடலின் கன்வெர்டிபிள் மாடல் ஆகும்.

புதிய ஷோரும் திறப்பு;

புதிய ஷோரும் திறப்பு;

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் சூப்பர்காரின் அறிமுகம், லம்போர்கினி நிறுவனத்தின் புதிய ஷோரூமின் திறப்பு விழாவும், இந்த புதிய ஷோரூமிலேயே கூட்டாக நடத்தபட்டது.

லம்போர்கினியின் இந்த புதிய மும்பை ஷோரூம் முகவரி;

சினர்ஜி,

அப்பாசாஹெப் மராத்தே மார்க்,

பிரபாதேவி,

மும்பை.

Cnergy,

Appasaheb Marathe Marg,

Prabhadevi,

Mumbai.

லம்போர்கினி ஹூராகேன்;

லம்போர்கினி ஹூராகேன்;

லம்போர்கினி ஹூராகேன் சூப்பர்கார், கல்லார்டோ மாடலுக்கு மாற்றாக 2014-ஆம் அறிமுகம் செய்யபட்டது.

லம்போர்கினி ஹூராகேன் சூப்பர்கார், உலகம் முழுவதும் மிகவும் வெற்றிகரமான மாடலாக விளங்கியது.

டிசைன்;

டிசைன்;

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் கன்வெர்டிபிள் சூப்பார்கார், முன்னதாக நியூயார்க்கில் காட்சிபடுத்தபட்டது.

நியூயார்க்கில் காட்சிபடுத்தபட்ட போது இருந்த டிசைன் அப்படியே தொடரபடுகிறது. கூடுதலாக, மடக்ககூடிய மேற்கூரை மட்டுமே சேர்க்கபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் சூப்பர்கார், நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் 5.2 லிட்டர், வி10 இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 602 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 560 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் சூப்பர்காரின் இஞ்ஜின், 7-ஸ்பீட் ட்யூவல் கிளட்ச் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

இதன் மூலமாகவும், எலக்ட்ரானிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் (ஏடபுள்யூடி) சிஸ்டம் மூலமாகவும், 4 சக்கரங்களுக்கும் பவர் மற்றும் டார்க் கடத்தபடுகிறது.

செயல்திறன்;

செயல்திறன்;

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் சூப்பர்காரின் எடை சற்று கூட்டபட்டுள்ளது. இந்த நிலையிலும், இதன் செயல்திறன் அப்படியே தக்க வைத்து கொள்ளபட்டுள்ளது.

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 3.4 நொடிகளில் எட்டும் திறன் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் சூப்பர்கார், உச்சபட்சமாக மணிக்கு 324 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

மடக்ககூடிய மேற்கூரை;

மடக்ககூடிய மேற்கூரை;

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் சூப்பர்காரின் மிக முக்கியமான சிறப்பு அம்சமாக, இதன் ரிட்ராக்டபிள் ரூஃப் எனப்படும் மடக்ககூடிய மேற்கூரை விளங்குகிறது.

மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சூப்பர்கார் பயணித்து கொண்டிருக்கும் போது கூட, இதன் மேற்கூரையை 17 நொடிகளில் திறக்கவும், மூடவும் முடியும்.

சேஸி;

சேஸி;

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் சூப்பர்கார், கல்லார்டோ மாடலை காட்டிலும் இடை குறைவான மற்றும் திடமான சேஸி கொண்டுள்ளது.

மோட்கள்;

மோட்கள்;

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் சூப்பர்கார், 3 விதமான டிரைவிங் மோட்கள் கொண்டுள்ளது.

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் சூப்பர்கார், ஹூராகேன் மாடலில் உள்ளது போன்றே ஸ்ட்ராடா, ஸ்போர்ட், கோர்ஸா ஆகிய 3 விதமான டிரைவிங் மோட்கள் உள்ளது.

கஸ்டமைஸ் செய்துகொள்ள வாய்ப்பு;

கஸ்டமைஸ் செய்துகொள்ள வாய்ப்பு;

இத்தாலி சுப்பர்கார் உற்பத்தி நிறுவனமான லம்போர்கினி, இந்த ஹூராகேன் ஸ்பைடர் சூப்பர்காரை ஏராளமான கஸ்டமைஸ் செய்துகொள்ள வாய்ப்புகளுடன் வழங்குகிறது.

விலை;

விலை;

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் சூப்பர்கார், 3.89 கோடி ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

லம்போர்கினி ஹுராகேன் ஸ்பைடர் எல்பி 610-4, விரைவில் இந்தியாவில் அறிமுகம்

லம்போர்கினி ஹூராகென் 2 வீல் டிரைவ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

லம்போர்கினி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Italian Supercar maker has launched Lamborghini Huracan Spyder Convertible SuperCar in India. With this, new Lamborghini Showroom was inaugurated in Cnergy, Appasaheb Marathe Marg, Prabhadevi, Mumbai. Lamborghini Huracan Spyder features three driving modes - namely, Strada, Sport and Corsa. To know more about Lamborghini Huracan Spyder, check here...
Story first published: Thursday, May 5, 2016, 14:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark