லேண்ட்ரோவர் நிறுவனம், ஸ்மார்ட்ஃபோன்களை உற்பத்தி செய்ய திட்டம்

By Ravichandran

லேண்ட்ரோவர் நிறுவனம், 2017-ஆம் ஆண்டு முதல் ஸ்மார்ட்ஃபோன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் கார் உற்பத்தி நிறுவனமான லேண்ட்ரோவர், 2017 முதல் ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் அதற்கான ஆக்சஸரீஸ்களையும் உற்பத்தி செய்ய உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுபாட்டில் இயங்கும் லேண்ட்ரோவர் நிறுவனம், இங்கிலாந்தை சேர்ந்த புல்லிட் குரூப் என்ற எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பெஸ்போக் ஸ்மார்ட்ஃபோன் ரேஞ்ச்களையும், அதற்கான ஆக்சஸரீஸ்களையும் தயாரிக்க உள்ளது.

land-rover-to-manufacture-smartphones-and-accessories-2017

இந்த கூட்டுமுயற்சி குறித்து ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் உயர் அதிகாரி லிண்ட்ஸே வீவர் மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார். மேலும், "லேண்ட்ரோவர் நிறுவனத்தின் சிறப்புமிக்க டிசைன் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை, புல்லிட் குரூப் உடன் இணைந்து மொபைல் ஃபோன் துறையிலும் ஒன்றாக இணைக்கும் இந்த முயற்சி, ஜாகுவார் பிராண்டிற்கு புதிய சவால்களையும், பரிமாணங்களையும் வழங்கும்" என லிண்ட்ஸே வீவர் கூறினார்.

கூடுதலாக, "ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தினுடைய ஸ்பெஷல் ஆபரேஷன்ஸ் பிரிவை சேர்ந்த டிசைன் மற்றும் இஞ்ஜினியரிங் குழு, லேண்ட்ரோவர் பிராண்ட் மற்றும் தயாரிப்புகளின் மதிப்பை உயர்த்தும் வகையிலான பெஸ்போக் தயாரிப்புகள் மற்றும் அப்ளிகேஷன்களை உருவாக்க பணி புரியும்" என லிண்ட்ஸே வீவர் தெரிவித்தார்.

ஜாகுவார் மற்றும் புல்லிட் குரூப் இடையிலான கூட்டணியில் தயாரிக்கபடும் இந்த ஸ்மார்ட்ஃபோன்கள், ஜாகுவார் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் போல் நல்ல திடமான ஆடம்பர சாதனமாக இருக்கும் என நம்பலாம்.

Most Read Articles
English summary
Tata Motors owned iconic British automaker, Land Rover will be manufacturing mobile phones and their accessories from the beginning of the year 2017. Land Rover has partnered with British consumer electronics company Bullitt Group, to manufacture a bespoke smartphone range with all accessories. To know more about Land Rover's new plans, check here...
Story first published: Thursday, May 12, 2016, 10:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X