நாட்டின் பிரம்மாண்ட மெர்சிடிஸ் ஷோ ரூம் ஆமதாபாத்தில் திறப்பு...

Written By: Krishna

ஜெர்மன் நாட்டின் பிரம்மாண்ட கார் நிறுவனமான மெர்சடைஸ் லிமிடெட், உலகம் முழுவதும் காலூன்றி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த விஷயம்தான்.

இந்தியாவில் மெர்சடைஸ் பெனஸின் பிரத்யேக ஷோ ரூம்கள் 40 நகரங்களில் உள்ளன. மொத்தம் 85 அவுட் லெட்கள் நாடு முழுவதும் உள்ளன. இப்போது விஷேசத் தகவல் என்னவென்றால், நாட்டிலேயே பெரிய 3 எஸ் ஷோரூமை குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் அண்மையில் தொடங்கியுள்ளது மெர்சடைஸ் நிறுவனம்...

அது என்னங்க 3 எஸ்? என்ற கேள்வி எழலாம். பொதுவாகவே, கார்களை விற்பனை செய்யும் இடம் மட்டுமே ஷோ ரூமாக இருக்கிறது. சர்வீஸ் தேவைகளுக்கு வேறு இடத்தை அணுக வேண்டியுள்ளது. அதேபோல காருக்குத் தேவையான உதிரி பாகங்களை வாங்குவதற்கு மற்றொரு இடத்தை நாட வேண்டியுள்ளது. இந்த மூன்று சேவைகளும் ஒரே இடத்தில் இருக்கும் இடத்தின் பெயர்தான் 3 எஸ். அதாவது சேல்ஸ், சர்வீஸ், ஸ்பேர் ஆகியவற்றின் சுருக்கமாக அது அழைக்கப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஷோரூம்

அப்படி ஒரு பிரம்மாண்டமான 3 எஸ் ஷோ ரூமை மெர்சடைஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலரான எமரால்டு மோட்டார்ஸ் ஆமதாபாத்தில் அண்மையில் திறந்துள்ளது. குஜராத்தில் தொடங்கப்படும் 8-ஆவது மெர்சடைஸ் நிறுவன ஷோ ரூம் இதுவாகும். மொத்தம் 34,600 சதுர அடி பரப்பளவில் ஆமதாபாத் பிரம்மாண்ட ஷோ ரூம் உள்ளது. மெர்சடைஸ் தயாரித்துள்ள 8 மாடல் கார்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, சர்வீஸ் சென்டர்களும், உதிரி பாக விற்பனையகமும் அதற்குள்ளேயே இயங்குகிறது.

ஆமதாபாத்தின் சிஜி சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஷோ ரூமானது மொத்தம் 12.5 கோடி செலவில் ஒரு வருடத்தில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவில் எமரால்டு மோட்டார்ஸ் நிர்வாகிகள் மற்றும் மெர்சடைஸ் நிறுவனத்தின் பயிற்சி பெற்ற ஊழியர்கள் 94 பேர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு மெர்சடைஸ் நிறுவனம் பல மாடல்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தனது ஷோ ரூம்களை நாடு முழுவதும் அந்நிறுவனம் விரிவுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Largest 3S Facility By Mercedes Benz Opens Up In Ahmedabad.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark