டொயோட்டா லெக்சஸ் கார்களின் உற்பத்தி இந்தியாவில் விரைவில் துவக்கம்

Written By:

லெக்சஸ் நிறுவனம், தங்களின் கார்களின் உற்பத்தியை இந்தியாவில் விரைவில் துவக்க திட்டமிட்டுள்ளது. நாளுக்குநாள், இந்தியாவில் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் இணை நிறுவனமான லெக்சஸ் இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

லெக்சஸ் நிறுவனத்தின் உற்பத்தி திட்டங்கள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் அறிமுகம்;

இந்தியாவில் அறிமுகம்;

லெக்சஸ் நிறுவனம், தங்களின் மாடல்களை அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனை செய்யும் நடவடிக்கைகளை துவக்க உள்ளனர். ஆரம்ப கட்டத்தில், லெக்சஸ் நிறுவனம் தங்களின் கார்களை சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட வடிவிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

உற்பத்தி ஆலை;

உற்பத்தி ஆலை;

லெக்சஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டொயோட்டா, இந்தியாவின் பெங்களூருவில் கார்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கார்களை அசெம்பிள் செய்வதற்கான முயற்சியில் டொயோட்டா நிறுவனம், மும்முரமாக உள்ளது. ஆரம்பத்தில், வாட்டர் பெயிண்ட்கள் உபயோகிக்கப்படும் லெக்சஸ் மாடல்களின் உற்பத்தியுடன் துவக்க உள்ளனர்.

முதல் மாடல்;

முதல் மாடல்;

துவக்கத்தில், லெக்சஸ் நிறுவனம், ஹைப்ரிட் மாடலை தான் இந்தியாவின் அசெம்பிள் செய்ய துவங்க உள்ளது. லெக்சஸ் இஎஸ் 300ஹெச் போன்ற மாடல் தான் முதன் முதலில் இந்தியாவில் தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கலாம்.

ஃபேம் ஸ்கீம்;

ஃபேம் ஸ்கீம்;

குறைக்கப்பட்ட வரிகள் அல்லாது, இந்தியாவில் ஹைப்ரிட் வாகனங்களுக்கு ஃபேம் ஸ்கீம் அடிப்படையில் மத்திய அரசு வழங்கும் ஆதாயங்களால் லெக்சஸ் நிறுவனம், வெகுவாக பயன் அடைய உள்ளது.

டொயோட்டா பெரும் ஆதாயம்;

டொயோட்டா பெரும் ஆதாயம்;

ஏற்கனவே, டொயோட்டா நிறுவனம், தங்களின் கேம்ரி ஹைப்ரிட் மாடலை இந்தியாவில் தயாரித்து வருகிறது. இதற்காக, மத்திய அரசு வழங்கும் ஃபேம் ஸ்கீம் உள்ளிட்டவையின் அடிப்படையில், டொயோட்டா நிறுவனம் ஏராளமான சலுகைகளை பெற்று வருகிறது. இந்தியாவில் ஹைப்ரிட் கார்களின் உற்பத்தியை துவங்கும் பட்சத்தில், லெக்சஸ் நிறுவனமும் இத்தகைய சலுகைகளை பெறும்.

டீலர்ஷிப்கள்;

டீலர்ஷிப்கள்;

லெக்சஸ் நிறுவனம், தங்களின் விற்பனை நடவடிக்கைகளை குறைந்த அளவிலான டீலர்ஷிப்களை கொண்டே துவக்க உள்ளனர். அதன் பின்னர், மெல்ல மெல்ல தங்களின் நெட்வர்க்கை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

உயர்ந்த சேவை;

உயர்ந்த சேவை;

லெக்சஸ், இந்தியாவில் புதிய பிராண்டாக இருந்தாலும், இது இந்தியாவில் புகழ்பெற்ற பிராண்ட் ஆகும். அதிக வாடிக்கையாளர்கள், நம்பகத்தன்மை மற்றும் நல்ல சர்வீஸ் கொண்ட சொகுசு பிராண்ட்களை நோக்கி செல்லும் பட்சத்தில், தரமான சேவை மூலம் இத்தகைய வாடிக்கையாளர்களை ஈர்த்து கொள்ள லெக்சஸ் நிறுவனம், முனைப்புடன் உள்ளது.

ஹைப்ரிட் அல்லாத மாடல்கள்;

ஹைப்ரிட் அல்லாத மாடல்கள்;

லெக்சஸ் நிறுவனம், ஹைப்ரிட் அல்லாத மாடல்களையும் இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறது.

வருங்கால திட்டம்;

வருங்கால திட்டம்;

லெக்சஸ் நிறுவனம், முழுமையான எல்எக்ஸ் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்எக்ஸ் எஸ்யூவி, இந்தியாவில் பெட்ரோல் வேரியன்ட் மற்றும் டீசல் வேரியன்ட்களில் விற்கப்படும். இந்திய ஆட்டோமொபைல் சந்தைகளில் எஸ்யூவியின் ட்ரென்ட் வளர்ந்து கொண்டே இருப்பதால், இத்தகைய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் மூலம் செப்டம்பரில் இந்தியாவில் பிரவேசிக்கும் லெக்சஸ்

டொயோட்டா லெக்சஸ் சொகுசு கார்கள் விரைவில் இந்தியா வருகை!

இந்தியாவில் லெக்சஸ் சொகுசு கார்களை களமிறக்குவதற்கான நேரம் வந்துவிட்டது: டொயோட்டா

English summary
Lexus will be selling its cars in India from 2017. Initially, models will be fully-imported. Lexus parent company Toyota is gearing up to set up plant in Bengaluru to locally assemble some models in India. Toyota will start assembling its hybrid models at the beginning. Lexus models such as Lexus ES 300h would be very first models to be built in India. To know more, check here...
Story first published: Tuesday, September 27, 2016, 13:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark