விரைவில் லெக்சஸ் சொகுசு கார்களை இந்தியாவில் களமிறக்கும் டொயோட்டா!

Written By:

ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டா உலக அளவில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும், லெக்சஸ் என்ற பிராண்டில் சொகுசு கார்களையும் விற்பனை செய்து வருகிறது.

ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற சொகுசு கார்களுக்கு இணையாக இந்த கார்களை உலகின் பல்வேறு நாடுகளில் டொயோட்டா விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், விரைவில் தனது லெக்சஸ் சொகுசு கார்களை இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது டொயோட்டா.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் லெக்சஸ் சொகுசு கார்கள்!

லெக்சஸ் கார் மாடல்களை ஆய்வுப் பணிகளுக்காக ஏற்கனவே இந்தியாவில் இறக்குமதி செய்திருக்கிறது டொயோட்டா. அவ்வப்போது இந்த கார்களை ரகசியமாக படம் பிடித்து ஆட்டோமொபைல் தளங்கள் வெளியிட்டு வருகின்றன.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் லெக்சஸ் சொகுசு கார்கள்!

இதேபோன்று, டொயோட்டா டீலரின் ஸ்டாக்யார்டில் நிறுத்தப்பட்டு இருந்த லெக்சஸ் ஆர்எக்ஸ் 450எச் ஹைபிரிட் சொகுசு எஸ்யூவி மற்றும் லெக்சஸ் ஆர்சி- எப் கூபே ஆகிய இரண்டு கார்களை படம்பிடித்து ஆட்டோமொபைல் இணையதளம் ஒன்று வெளியிட்டு இருக்கிறது. இதுதவிர, லெக்சஸ் இஎஸ் செடான் காரும் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் லெக்சஸ் சொகுசு கார்கள்!

லெக்சஸ் ஆர்சி- எஃப் கூபே ரக கார் ஜாகுவார் எஃப் டைப், பிஎம்டபிள்யூ எம்4 மற்றும் ஆடி ஆர்எஸ்5 கார்களுடன் போட்டி போடும். இந்த காரில் 460 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 270 கிமீ வேகம் வரை செல்லும்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் லெக்சஸ் சொகுசு கார்கள்!

லெக்சஸ் ஆர்எக்ஸ்450எச் எஸ்யூவி கார் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி, பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஆகிய மாடல்களுடன் போட்டியிடும். இந்த எஸ்யூவியில் 3.5 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைந்து இந்த பெட்ரோல் எஞ்சின் செயலாற்றும்போது இந்த கார் அதிகபட்சமாக 304 பிஎச்பி பவரை அளிக்கும்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் லெக்சஸ் சொகுசு கார்கள்!

டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் லெக்சஸ் பிராண்டுக்காக இரண்டு பிரத்யேக டீலர்களை டொயோட்டா கார் நிறுவனம் திறக்க இருக்கிறது. அடுத்து நாட்டின் முக்கிய நகரங்களில் புதிய டீலர்களை திறக்கும்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் லெக்சஸ் சொகுசு கார்கள்!

லெக்சஸ் சொகுசு கார்கள் அனைத்துமே இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். இதனால், ஆடி, பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நேரடி போட்டியாளர்களைவிட விலை அதிகமிருக்கும் என தெரிகிறது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் லெக்சஸ் சொகுசு கார்கள்!

இந்த கார்கள் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் லெக்சஸ் கார்களின் டெலிவிரி துவங்கப்படும் என்று டொயோட்டா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெக்சஸ் பிராண்டு சக்சஸ் பிராண்டாக மாறுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Spy Images Credit: Carandbike

English summary
Spy Pics: Lexus RX450h SUV Spotted In India Ahead Of Launch. Read in Tamil.
Story first published: Wednesday, October 12, 2016, 9:59 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos