டொயோட்டா லெக்சஸ் சொகுசு கார்கள் விரைவில் இந்தியா வருகை!

Written By:

டொயோட்டா நிறுவனத்தின் லெக்சஸ் சொகுசு கார்கள் இந்த ஆண்டு முடிவதற்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

டொயோட்டா லெக்சஸ் கார்களின் வருகை குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

டொயோட்டா லெக்சஸ் பற்றி...

டொயோட்டா லெக்சஸ் பற்றி...

டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் தங்களின் லெக்சஸ் கார்களை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

லெக்சஸ் மாடலானது, இந்திய வாகன சந்தையின் ஹைப்ரிட் கார் கார்கள் செக்மண்ட்டில் பிரவேசம் செய்ய உள்ளது.

ஹைப்ரிட் செக்மண்ட்...

ஹைப்ரிட் செக்மண்ட்...

டொயோட்டா நிறுவனம் அனைத்து பிராண்ட்களையும் லெக்சஸ்-ஸின் கீழ் வழங்க உள்ளதா என்பதை குறித்து தீர்மாணமான முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை. இதனால், ஹைப்ரிட் செக்மண்டானது விற்பனை எண்ணிக்கையை மையபடுத்தியதாக இருக்காது.

மேலும், அரசும் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையிலான ஹைப்ரிட் தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. இதனால் பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் ஹைப்ரிட் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றன.

கொண்டுவரப்பட உள்ள மாடல்கள்;

கொண்டுவரப்பட உள்ள மாடல்கள்;

இந்திய வாகன சந்தைகளை பொருத்த வரை, டொயோட்டா நிறுவனம் ஆர்எக்ஸ் காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் ஆர்எக்ஸ்450ஹெச் ஆகிய மாடல்களை மட்டுமே கொண்டு வர முடிவு செய்துள்ளது.

மேற்குறிப்பிட்ட மாடல்களை தவிர, வேறு எந்த மாடலும் இந்தியாவிற்குள் கொண்டு வரும் திட்டம், டொயோட்டா நிறுவனத்திடம் இல்லை.

ஆர்எக்ஸ்450ஹெச் இஞ்ஜின்;

ஆர்எக்ஸ்450ஹெச் இஞ்ஜின்;

டொயோட்டா லெக்சஸ் ஆர்எக்ஸ்450ஹெச், 3.5 லிட்டர், வி6 இஞ்ஜின் கொண்டுள்ளது.

இது எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கபட்டுள்ளது. இதில் ஃப்யூவல் நேரடியாகவும், போர்ட் மூலமாக இஞ்ஜெக்ட் செய்யபடுகிறது. இதன் இஞ்ஜின், 308 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டிரைவ் மோட்கள்;

டிரைவ் மோட்கள்;

டொயோட்டா லெக்சஸ் ஆர்எக்ஸ்450ஹெச், எகோ மற்றும் ஸ்போர்ட் ஆகிய 2 டிரைவ் மோட் தேர்வு முறையில் கிடைக்கிறது.

மேலும், ஏடபுள்யூடி எனப்படும் ஆல் வீல் டிரைவ், ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கபடுகிறது.

வருங்கால வெளியீடுகள்;

வருங்கால வெளியீடுகள்;

முதலாவதாக, ஜிஎஸ்450ஹெச் - ஆர்எக்ஸ் ஹைப்ரிட்டின் பவர்ட்ரெய்ன் - இது 338 பிஹெச்பி என்ற அளவிலான கூட்டபட்ட திறன் கொண்டுள்ளது.

இரண்டாவதாக, எல்எஸ் 600ஹெச் - 5 லிட்டர், வி8, 438 பிஹெச்பி (கம்பைண்ட் அவுட்புட் திறன் கொண்டுள்ளது.

டொயோட்டா நிறுவனம், வருங்காலங்களில் லெக்சஸ் பிராண்டில் இந்த இரு வெற்றிகரமான செடான்களை இந்தியாவில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

போட்டி;

போட்டி;

டொயோட்டா லெக்சஸ் ஆர்எக்ஸ்450ஹெச், ஏற்கனவே ஹைப்ரிட் சந்தையில் தடம் பதித்துள்ள மெர்சிடிஸ், பிஎம்டபுள்யூ மற்றும் ஆடி போன்ற நிறுவனத்தின் தயாரிப்புகளுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

இதனால், டொயோட்டா நிறுவனம் முழு தாக்கதுடன் களம் இறங்க முயற்சிக்கும் என தெரிகிறது.

தற்போது கிடைக்கும் மாடல்கள்;

தற்போது கிடைக்கும் மாடல்கள்;

தற்போதைய நிலையில், இந்தியாவில் கேம்ரி ஹைப்ரிட் வாகனம் ஏற்கனவே வழங்கபட்டு வருகின்றது. இதில், 90 சதவிகித விற்பனை, கேம்ரியின் ஹைப்ரிட் மாடலில் இருந்து தான் கிடைத்து வருகின்ரது.

இதனாலும், வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்து வரும் கருத்துகளின் அடிப்படையில் தங்கள் நிறுவனத்தின் ஹைப்ரிட் தயாரிப்புகளை களம் இறக்க டொயோட்டா முடிவு செய்துள்ளது.

விலை;

விலை;

ஹைப்ரிட் மாடல்கள் இறக்குமதி செய்யபடுகின்றனவா அல்லது இங்கு இந்தியாவில் உற்பத்தி செய்யபடுகின்றனவா என்பதை பொருத்து, விலைகள் வேறுபட வாய்ப்புகள் உள்ளது.

தற்போதைய நிலையில், டொயோட்டா லெக்சஸ் ஆர்எக்ஸ்450ஹெச், இங்கிலாந்தில் சுமார் 46 லட்சம் ரூபாய் முதல் 47 லட்சம் ரூபாய் என்ற விலையில் விற்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்தியாவில் லெக்சஸ் சொகுசு கார்களை களமிறக்குவதற்கான நேரம் வந்துவிட்டது: டொயோட்டா

பீஜிங் ஆட்டோ ஷோவில் புதிய கிராஸ்ஓவர் காரை களமிறக்கும் லெக்சஸ்!

லெக்சஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Toyota Motor Corp. has expressed their plans to bring in the iconic Lexus cars to India by this year. As of now, Toyota will bring the RX compact SUV, the RX450h - Hybrid. Apart from this, Toyota will not launch any of the other models in the RX range. The RX450h - Hybrid could be available in 2 optional drive modes - namely, Eco and Sport.
Story first published: Wednesday, February 17, 2016, 10:41 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark