இடது கை டிரைவிங் மாடலாக தயாராகும் மஹிந்திரா கேயூவி 100!

Written By: Krishna

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா அண்டு மஹிந்திரா. காம்பேக்ட் சியூவி ரகத்தில் கேயூவி 100 என்ற மாடலை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது மஹிந்திரா. விற்பனையிலும் அந்த மாடல் சிறப்பானதொரு இடத்தைப் பிடித்தது.

இந்த நிலையில் லெஃப்ட் ஹேண்ட் டிரைவிங் நடைமுறை (இடது புறமாக வாகனங்களை இயக்கும் முறை) உள்ள நாடுகளுக்கு அந்த மாடலை ஏற்றுமதி செய்வதற்காக அதற்கு தகுந்தாற்போல பல மாற்றங்களை கேயூவி 100 மாடலில் மேற்கொண்டு வருகிறது அந்நிறுவனம்.

மஹிந்திரா கேயூவி100

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வலது கை வாகன டிரைவிங் முறைதான் அமலில் உள்ளது.   லெஃப்ட் ஹேண்ட் டிரைவ் சிஸ்டம் உள்ள நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்யத்தான் கேயூவி 100 மாடலில் மாற்றங்களை செய்து வருகிறது மஹிந்திரா நிறுவனம். குறிப்பாக ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த லெஃப்ட் ஹேண்ட் வாகனங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாம் அந்நிறுவனம்.

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு மாடல்களிலான கேயூவி 100 கார்களும் லெஃப்ட் ஹேண்ட் டிரைவ் வசதியுடன் வடிவமைக்கப்பட உள்ளன.

இதைத்தவிர, கடந்த மே மாதம் மட்டும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு 260 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது மஹிந்திரா நிறுவனம். இதன் மூலம் அந்நிறுவனத்தின் பயணிகள் வாகன ஏற்றுமதி விகிதம் 137 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கேயூவி 100-இல் 1.2 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் எஞ்சின்கள் உள்ளன. பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. டீசல் எஞ்சினில் 77 பிஎச்பி 190 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆற்றல் உள்ளது.

கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் சாலைக்கும் காரின் அடித்தளத்துக்கும் இடையேயான இடைவெளி கேயூவி 100-இல் 170 மில்லி மீட்டராக உள்ளது. பூட்ஸ்பேஸ் வசதியைப் பொருத்தவரை இதில் 243 லிட்டர் கொள்ளளவு கொண்ட உடைமைகளை எடுத்துச் செல்ல முடியும்.

English summary
M&M Developing Left-Hand Drive For KUV100.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark