லத்தீன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் செவர்லே பீட் தோல்வி!

Written By:

இந்தியாவில் தாயாராகும் கார்கள் கிராஷ் டெஸ்ட் எனப்படும் மோதல் சோதனைகளில் தொடர்ந்து தோல்வியடைந்து வருவது வாடிக்கையாளர்களை கவலை கொள்ள செய்திருக்கிறது. இதுகுறித்து கார் நிறுவனங்கள் கவலைபட்டதாக தெரியவில்லை.

இந்திய அரசு வகுத்துள்ள விதிகளுக்கு உட்பட்டதாக கார்களை தயாரிப்பதாக சொல்லி எஸ்கேப் ஆகி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் தயாராகி மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் விற்பனையாகும் செவர்லே பீட் காரை கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு லத்தீன் என்சிஏபி அமைப்பு உட்படுத்தியது.

லத்தீன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் செவர்லே பீட் தோல்வி!

அங்கு இந்த கார் ஸ்பார்க் என்ற பெயரில் விற்பனையாகிறது. செவர்லே ஸ்பார்க் ஜிடி என்ற பேஸ் மாடல் கார்தான் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.இதில், அந்த கார் ஒரு நட்சத்திர மதிப்பீட்டை கூட பெறாமல் முற்றிலும் தோல்வியடைந்தது. பெரியவர் மற்றும் சிறியவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களில் இந்த கார் முற்றிலும் தோல்வி பெற்றது.

லத்தீன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் செவர்லே பீட் தோல்வி!

ஏர்பேக் பொருத்தப்படாததன் காரணமாகவே பயணிகள் பாதுகாப்பில் இந்த கார் ஒரு நட்சத்திர தர மதிப்பீட்டை கூட பெற முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்த காரின் கட்டுமானம் சிறப்பாக இருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.

லத்தீன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் செவர்லே பீட் தோல்வி!

பேஸிக் மாடல் என்பதே கிராஷ் டெஸ்ட்டில் முற்றிலும் தோல்விக்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்படுகிறது. முன்புற மோதல் சோதனையில் இந்த கார் முற்றிலும் தோல்வியடைந்தால், பக்கவாட்டு மோதல் சோதனைக்கு உட்படுத்துவதற்கு லத்தீன் என்சிஏபி அமைப்பு விரும்பவில்லை.

லத்தீன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் செவர்லே பீட் தோல்வி!

மேலும், குழந்தைகளுக்கான சைல்டு சீட் அமைப்பதிலும் சரியான வழிமுறையை பின்பற்றவில்லை. அதாவது, சைல்டு சீட் எப்போதுமே பின்புறத்தை நோக்கி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த காரில் முன்புறத்தை நோக்கி சைல்டு சீட் பொருத்துவதற்கான அமைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

லத்தீன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் செவர்லே பீட் தோல்வி!

இதனாலேயே, சிறியவர்களுக்கான பாதுகாப்பிலும் நட்சத்திர மதிப்பீடு பெற முடியாமல் போனது. இல்லையெனில், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் குறைந்தது 2 நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்றிருக்க வாய்ப்புண்டு.

லத்தீன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் செவர்லே பீட் தோல்வி!

மெக்சிகோ மற்றும் கொலம்பிய நாடுகளில் விற்பனையாகும் செவர்லே பீட் மாடல்தான் இந்த கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும், அந்நாடுகளுக்கு மஹாராஷ்டிர மாநிலம், தலேகானில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையில் உற்பத்தியாகும் செவர்லே பீட் கார்கள்தான் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

லத்தீன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் செவர்லே பீட் தோல்வி!

மெக்சிகோ, கொலம்பியா ஆகிய நாடுகளில் மிகவும் பிரபலமான இந்த சிறிய வகை கார் ஒரு நட்சத்திர அந்தஸ்தை கூட பெறாமல் தோல்வி கண்டிருப்பது அந்நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களை அதிர்யுற செய்துள்ளது. இந்த கிராஷ் டெஸ்ட் சோதனை மூலமாக, அந்நாடுகளில் செவர்லே பீட் காரின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.

English summary
The India-made Chevrolet Beat known as the Spark GT in Latin America has scored zero stars at the Latin NCAP crash test. The Latin NCAP goes on to state that Chevrolet Beat continues to disappoint with the zero star rating for both adult and child protection.
Story first published: Saturday, September 24, 2016, 11:25 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark