மேட் இன் இந்தியா மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி இந்தியாவில் செப்டம்பர் 29-ல் அறிமுகம்

Written By:

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், தாங்கள் தயாரிக்கும் மேட் இன் இந்தியா எனப்படும் இந்தியாவில் தயாரிக்கப்படும் மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியை இந்தியாவில் செப்டம்பர் 29-ல் அறிமுகம் செய்ய உள்ளனர். இந்தியாவில் பண்டிகை காலங்கள் வேகமாக நெருங்கி கொண்டிருக்கிறது. இதனால், பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியை, இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பூனே அருகே சகன் உற்பத்தி ஆலையில் அசெம்பிள் செய்கிறது.

விற்கப்படும் விதம்;

விற்கப்படும் விதம்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, தற்போதைய நிலையில் சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்ட வடிவிலேயே அறிமுகம் செய்யப்படுகிறது.

விலை;

விலை;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் டீசல் வேரியன்ட் 50.70 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலையிலும், பெட்ரோல் வேரியன்ட் 50.90 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலையிலும் விற்கப்படுகிறது.

போட்டி;

போட்டி;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, ஆடி க்யூ5 மற்றும் பிஎம்டபுள்யூ ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

பெட்ரோல் வேரியன்ட்;

பெட்ரோல் வேரியன்ட்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் பெட்ரோல் வேரியன்ட், 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 241 பிஹெச்பியையும், 370 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

டீசல் வேரியன்ட்;

டீசல் வேரியன்ட்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் டீசல் வேரியன்ட், 2.1 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 168 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின்கள் இரண்டுமே 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

4மேட்டிக்;

4மேட்டிக்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட்கள் இரண்டுமே 4மேட்டிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, 18-இஞ்ச் வீல்கள், எல்இடி டெயில்லேம்ப்கள், லெதர் சீட்கள், ஆம்பியன்ட் லைட்டிங், பானரமிக் சன்ரூஃப், நேவிகேஷன் வசதி கொண்ட 7-இஞ்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே ஆகிய வசதிகள் கொண்டுள்ளது.

English summary
German carmaker Mercedes-Benz launched their GLC SUV in India recently. This September 29, Mercedes will launch their locally assembled vehicle in India. Mercedes GLC SUV is made at carmaker's plant in Chakan, Pune. At present, Mercedes-Benz GLC is currently sold as Completely Built Unit. Mercedes GLC has 4MATIC all-wheel drive system. To know more, check here...
Story first published: Sunday, September 18, 2016, 7:07 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos