புதிய மஹிந்திரா பிக் பொலிரோ பிக்கப் இந்தியாவில் அறிமுகம்

Written By:

மஹிந்திரா நிறுவனம், புதிய பிக் பொலிரோ பிக்கப் வாகனத்தை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மஹிந்திரா பிக் பொலிரோ பிக்கப் வாகனம் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா பிக் பொலிரோ பிக்கப்...

மஹிந்திரா பிக் பொலிரோ பிக்கப்...

பிக் பொலிரோ பிக்கப், மஹிந்திரா நிறுவனம் சார்பாக அறிமுகம் செய்யபட்டுள்ள புதிய பிக்கப் வாகனம் ஆகும்.

மஹிந்திரா பிக் பொலிரோ பிக்கப், ஏராளமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

மஹிந்திரா பிக் பொலிரோ பிக்கப், 9 அடி (2765 மில்லிமீட்டர்) அளவிலான பாடி நீளமும், 1,500 கிலோகிராம் பே லோட் (தள்ளுசுமை திறன்) திறன் கொண்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மஹிந்திரா பிக் பொலிரோ பிக்கப் வாகனத்திற்கு, எம்டிஐ டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

இந்த எம்டிஐ டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின், பிஎஸ்-3 வேரியண்ட்டில் 63 பிஹெச்பியையும், 195 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த எம்டிஐ டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின், பிஎஸ்-4 வேரியண்ட்டில் 70 பிஹெச்பியையும், 195 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் வகையில் ட்யூன் செய்யபட்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மஹிந்திரா பிக் பொலிரோ பிக்கப் வாகனத்தின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

பிக் பொலிரோ பிக்கப் வாகனம், ஒரு லிட்டருக்கு 13 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கிறது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

மஹிந்திரா பிக் பொலிரோ பிக்கப் வாகனம் தான், இதன் பிரிவிலான வாகனங்களிலேயே 1,500 கிலோகிராம் என்ற சிறந்த பே லோட் திறன் கொண்டுள்ளது.

(*) 9 அடி நீளம் கொண்ட மிகப்பெரிய கார்கோ பாடி

(*) பணிச்சூழலியல் ரீதியாக நன்கு வடிவமைக்கப்பட்ட கேபின்

(*) ஸ்டாண்டர்ட் பவர் ஸ்டீயரிங்

(*) இஞ்ஜின் இம்மோபலைஸர்

சிறப்பு அம்சம்;

சிறப்பு அம்சம்;

மஹிந்திரா பிக் பொலிரோ பிக்கப் வாகனத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாக, இதன் பிஎஸ்-3 வேரியண்ட்டிற்கு 3 வருடங்கள் வரம்பற்ற கிலோமீட்டர் வாரண்ட்டி வழங்கபடுகிறது.

வேரியண்ட்கள்;

வேரியண்ட்கள்;

மஹிந்திரா பிக் பொலிரோ பிக்கப் வாகனம், 2-வீல்-டிரைவ் ஃபிளாட்பெட் மற்றும் சிபிசி மாடல் வேரியண்ட்களில் அறிமுகம் செய்யபடுகிறது.

மஹிந்திரா பிக் பொலிரோ பிக்கப் வாகனம், விரைவில் 4-வீல்-டிரைவ் வேரியண்ட்டிலும் கிடைக்க உள்ளது.

விலை விவரம்;

விலை விவரம்;

மஹிந்திரா பிக் பொலிரோ பிக்கப் வாகனம், பிஎஸ்-3 வேரியண்ட் மற்றும் பிஎஸ்-4 வேரியண்ட் என 2 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

மஹிந்திரா பிக் பொலிரோ பிக்கப் பிஎஸ்-3 ; 6.15 லட்சம் ரூபாய்

மஹிந்திரா பிக் பொலிரோ பிக்கப் பிஎஸ்-4 ; 6.30 லட்சம் ரூபாய்

குறிப்பு ; அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் பூனே விலை விவரங்கள் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டத்துடன் புதிய பொலிரோ பிக்கப் டிரக் அறிமுகம்

மஹிந்திராவின் பொலிரோ மேக்ஸி டிரக் ப்ளஸ் பிக்கப் டிரக் அறிமுகம்

மஹிந்திரா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Mahindra has launched their all new Big Bolero Pickup in India. Mahindra Big Bolero Pickup has cargo body length of 9 feet (2765 mm) and payload capacity of 1,500 kgs. Mahindra claims that Big Bolero pickup gives a mileage of 13km/l. Mahindra Big Bolero Pikup comes with choices of two-wheel drive flatbed & CBC models. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark