4 கதவுகளுடன் புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்தது- விபரம்!

4 கதவுகளுடன் புதிய எலக்ட்ரிக் கார் மாடலை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய காரின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இதுவரை 2 கதவுகள் கொண்ட எலக்ட்ரிக் கார் மாடல்களை மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், 4 கதவுகளுடன் கூடிய புதிய எலக்ட்ரிக் கார் மாடலை மஹிந்திரா நிறுவனம் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்து புதிய அத்தியாயத்தை துவங்கியிருக்கிறது.

மஹிந்திரா இ2ஓ ப்ளஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட முக்கியத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

4 கதவுகளுடன் புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார் அறிமுகம்

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மஹிந்திரா இ2ஓ காரின் அடிப்படையில் சில டிசைன் மாறுதல்களுடன் இந்த புதிய மாடல் வந்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் நவீன பாரம்பரியத்திலான க்ரில் அமைப்பு, ஹெட்லைட், புதிய பம்பர் அமைப்புடன் வந்திருக்கிறது. 4 கதவுகளுடன் வெகு நேர்த்தியாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அலாய் வீல்கள் கவர்ச்சியளிக்கிறது.

4 கதவுகளுடன் புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார் அறிமுகம்

பி4 மற்றும் பி6 ஆகிய வேரியண்ட்டுகளில் 48V திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இந்த பேட்டரியுடன் 3 ஃபேஸ் இன்டக்ஷன் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 25.4 பிஎச்பி பவரையும், 70 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த மாடல் 0 100 கிமீ வேகத்தை 14.1 வினாடிகளில் எட்டும்.

4 கதவுகளுடன் புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார் அறிமுகம்

இந்த மாடலில் இருக்கும் 48V பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 110 கிமீ தூரம் பயணத்தை வழங்கும். முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணிநேரம் பிடிக்கும். விரைவு சார்ஜ் வசதி மூலமாக 75 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது.

4 கதவுகளுடன் புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார் அறிமுகம்

பி8 வேரியண்ட்டில் 72V பேட்டரி உள்ளது. இது 2 ஃபேஸ் மின் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 40 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 9.5 வினாடிகளில் எட்டும்.

4 கதவுகளுடன் புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார் அறிமுகம்

இந்த 72V பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். முழுமையாக சார்ஜ் செய்ய 9 மணிநேரம் பிடிக்கும். 90 நிமிடத்தில் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது.

4 கதவுகளுடன் புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார் அறிமுகம்

சார்ஜ் தீர்ந்து போகும்பட்சத்தில், 5 முதல் 10 கிமீ தூரம் வரை செல்லக்கூடிய விசேஷ வசதியும் உண்டு. மலைச் சாலைகளில் செல்லும்போது உதவும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் தொழில்நுட்பம் மிகவும் சிறப்பானது. அடுத்து பிளாபுங்கட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாப் வேரியண்ட்டில் வழங்கப்படுகிறது.

 விலை விபரம்

விலை விபரம்

  • மஹிந்திரா இ2ஓ ப்ளஸ் பி4: ரூ.5.46 லட்சம்
  • மஹிந்திரா இ2ஓ ப்ளஸ் பி6: ரூ.5.95 லட்சம்
  • மஹிந்திரா இ2ஓ ப்ளஸ் பி8: ரூ.8.46 லட்சம்
  • அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

    பி2 என்ற வேரியண்ட்டும் விற்பனைக்கு உள்ளது. ஆனால், இவை டாக்சி ஆபரேட்டர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும்.

Most Read Articles
English summary
Mahindra has launched the four-door variant of the e2o electric hatchback, the e2o Plus in India.
Story first published: Friday, October 21, 2016, 16:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X