மஹிந்திரா இ2ஓ பிளஸ் எலக்ட்ரிக் காரின் டீஸர் படம் வெளியீடு

Written By:

மஹிந்திரா நிறுவனம், தங்களின் அடுத்த எலக்ட்ரிக் காரின் படம் வெளியிட்டு டீஸ் செய்யதுள்ளது. கடந்த சில வருடங்களாக எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்ந்து பிரபலம் அடைந்து வருகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் இ2ஓ எலக்ட்ரிக் காரும் மக்களிடையே பிரபலம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் மஹிந்திரா நிறுவனம் தங்களின் அடுத்த எலக்ட்ரிக் காரின் படத்தை வெளியிட்டு டீஸ் செய்துள்ளது.

மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

இ2ஓ பிளஸ்;

இ2ஓ பிளஸ்;

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் காருக்கு மஹிந்திரா இ2ஓ பிளஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மஹிந்திரா இ2ஓ கார் கடந்த சில ஆண்டுகளாக விற்பனையில் உள்ளது. இந்நிலையில், சில சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டு இ2ஓ பிளஸ் வடிவில் வெளியாக உள்ளது. இதன் படம் தான் தற்போது வெளியிடப்பட்டு டீஸ் செய்யபட்டுள்ளது.

டீஸர் படம்;

டீஸர் படம்;

மஹிந்திரா நிறுவனம், இந்த டீஸர் படம் மற்றும் புதிய பெயரை தவிர வேறு எந்த விதமான தகவல்களையும் வெளியிடவில்லை. அதுவும், புதிய எல்இடி பிரேக் லைட்களை வெளிப்படுத்தும் இதன் ரியர் என்ட் படம் மட்டும் தான் காண்பிக்கப்பட்டுள்ளது.

நம்பர் பிளேட்;

நம்பர் பிளேட்;

இ2ஓ மாடலோடு ஒப்பிடுகையில், மஹிந்திரா இ2ஓ பிளஸ் எலக்ட்ரிக் காரின் நேம் பிளேட் / நம்பர் பிளேட் சற்று மேலே நகர்த்தப்பட்டுள்ளது. இந்த மஹிந்திரா இ2ஓ பிளஸ், இ2ஓ மாடலுடன் சேர்த்து கூட்டாக விற்பனை செய்யப்படும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

யூகம்;

யூகம்;

மஹிந்திரா நிறுவனம் தயாரித்து வரும் நான்கு டோர்கள் கொண்ட இ2ஓ எலக்ட்ரிக் காருக்கு தான், மஹிந்திரா இ2ஓ பிளஸ் என பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. இந்த நான்கு டோர்கள் கொண்ட இ2ஓ சோதனைகள் மேற்கொள்ளப்படும் பொது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பல முறை வெளியாகியுள்ளது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்;

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்;

மஹிந்திரா இ2ஓ பிளஸ் காருக்கு நீண்ட பேட்டரிரேஞ்ச் கொண்ட புதிய பேட்டரி பேக் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் சொகுசு அம்சங்கள் என்ற பெயரில் மஹிந்திரா நிறுவனம் இந்த மஹிந்திரா இ2ஓ பிளஸ் எலக்ட்ரிக் காருக்கு ஏராளமான புதிய அம்சங்களை சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பு ; மஹிந்திரா நிறுவனத்தின் இ2ஓ எலக்ட்ரிக் காரின் படங்களும் உபயோகிக்கப்பட்டுள்ளது.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Teases the picture of a new Electric Vehicle for Indian Market. e2o from Mahindra Electric has been on sale for sometime. India-based automobile manufacturer has provided their electric vehicle with mild updates. Now, the vehicle named as all-new Mahindra e2o Plus electric vehicle has been teased ahead of its Indian launch. To know more, check here...
Story first published: Friday, October 7, 2016, 15:49 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos