மஹிந்திரா கார்களுக்கான அதிரடித் தள்ளுபடி சலுகைகள் - விபரம்!

By Saravana Rajan

பருவமழைத் துவங்கியிருப்பதையடுத்து, கார் வர்த்தகத்தில் சுணக்கம் ஏற்படுவது வழக்கம். இதனை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் சிறப்புச் சலுகைகள், தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன.

அந்த வரிசையில், மஹிந்திரா நிறுவனமும் தனது கார்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. வரும் 31ந் தேதி வரை இந்த அதிரடித் தள்ளுபடி சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு காருக்கும் எவ்வளவு ரூபாய் சேமிக்க முடியும் என்ற விபரங்களை தொடர்ந்து காணலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500

மஹிந்திரா எக்ஸ்யூவி 500

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு ரூ.22,000 முதல் ரூ.75,000 வரையில் மதிப்புடைய சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இந்த சலுகைகள் வேரியண்ட்டை பொறுத்து வேறுபடுகிறது.

நூவோஸ்போர்ட்

நூவோஸ்போர்ட்

நூவோஸ்போர்ட் எஸ்யூவிக்கு ரூ.57,000 வரை மதிப்புடைய சிறப்புத் தள்ளுபடிகளை பெற முடியும். தற்போது ரூ.7.35 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து நூவோஸ்போர்ட் கிடைக்கிறது.

மஹிந்திரா கேயூவி100

மஹிந்திரா கேயூவி100

மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவிக்கு அதிகபட்சமாக ரூ.32,000 வரை மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. இந்த மினி எஸ்யூவி ரூ.4.42 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிக்கு ரூ.35,000 வரை மதிப்புடைய சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும். இதுதொடர்பான கூடுதல் விபரங்களை SCORPIO என்று டைப் செய்து 5757577 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் தகவல்களை பெற முடியும்.

மஹிந்திரா டியூவி300

மஹிந்திரா டியூவி300

நூவோஸ்போர்ட் போன்றே டியூவி300 காம்பேக்ட் எஸ்யூவி மாடலுக்கு ரூ.57,000 வரையிலான சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

அருகாமையிலுள்ள மஹிந்திரா டீலரை தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறு. வரும் 31ந் தேதி வரை இந்த சலுகை அமலில் இருந்தாலும், டீலர்களில் இருப்பு உள்ள கார்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்துமாம். எனவே, முந்திக் கொள்வது நல்லது.

Most Read Articles
English summary
Mahindra Introduces The Mighty Monsoon Offer For July 2016.
Story first published: Tuesday, July 19, 2016, 16:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X