மஹிந்திரா கேயூவி1oo விற்பனைக்கு வந்தது... ரூ.4.42 லட்சம் முதல்...!

By Saravana

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய மஹிந்திரா கேயூவி1oo எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

4 மீட்டர் குறைவான நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய மினி எஸ்யூவி பல ஹேட்ச்பேக் கார்களுடன் நேரடியாக போட்டி போடும் என நம்பலாம். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட்டுகள் விபரம்

வேரியண்ட்டுகள் விபரம்

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் தலா 7 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். அனைத்து வேரியண்ட்டுகளிலும் இபிடி.,நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் [கே2 வேரியண்ட்டை தவிர்த்து] கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த புதிய மினி எஸ்யூவி 5 பேர் செல்வதற்கான இருக்கை அமைப்பு [2+3]மற்றும் 6 பேர் செல்வதற்கான இருக்கை அமைப்புடன்[3+3] கிடைக்கும்.

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் மாடலில் 3 சிலிண்டர்கள் கொண்ட புதிய எம்-ஃபால்கன் 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

டீசல் மாடலில் இருக்கும் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 77 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வழங்கும். இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்ாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

மஹிந்திரா கேயூவி100 மாடலின் டாப் வேரியண்ட்டில் பின் இருக்கையில் ஆர்ம் ரெஸ்ட் வசதி, பவர் விண்டோஸ், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி, மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், கூல்டு கிளவ் பாக்ஸ், இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன்கள், மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பம் ஆகியவை உள்ளது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

6 ஸ்பீக்கர்கள் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வேகத்தை வைத்து கதவுகள் தானாக பூட்டிக் கொள்ளும் வசதி, எஞ்சினை ஆஃப் செய்து சாவியை எடுத்த பின்னரும் சில நொடிகள் ஒளிர்ந்து வெளிச்சம் தரும் ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள், 243 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் ஆகியவை முக்கிய அம்சங்கள். இதன் பூட் ரூமை 473 லிட்டர் வரை கூட்டிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் எஸ்யூவி மாடலாக இதனை மஹிந்திரா தெரிவித்துள்ளது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.15 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 25.32 கிமீ மைலேஜ் தரும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

பிரேக் பவரை சரியான விகிதத்தில் அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தும் இபிடி.,தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பேஸ் மாடல்களிலிருந்து ஆப்ஷனலாக கிடைக்கிறது. அத்துடன் எஞ்சின் இம்மொபைலைசர், ஏர்பேக்குகள் ஆகியவை முக்கிய பாதுகாப்பு வசதிகளாக இருக்கின்றன. 2017ம் ஆண்டு அமலுக்கு வர இருக்கும் புதிய பாதுகாப்பு அம்சங்களுக்கு இணையான பாதுகாப்பு தரம் கொண்ட மாடலாக தெரிவிக்கப்படுகிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

ஃபியரி ஆரஞ்ச், டேஸ்லிங் சில்வர், பியர்ல் ஒயிட், மிட்நைட் பிளாக், ஃப்ளம்பயான்ட் ரெட், அக்குவா மரைன் மற்றும் டிசைனர் க்ரே ஆகிய 7 வண்ணங்களில் விருப்பம்போல் தேர்வு செய்து கொள்ள முடியும்.

 பெட்ரோல் மாடல் விலை விபரம்

பெட்ரோல் மாடல் விலை விபரம்

கே2: ரூ.4.42 லட்சம்

கே2 ப்ளஸ்: ரூ.4.64 லட்சம்

கே4: ரூ.4.77 லட்சம்

கே ப்ளஸ்: ரூ.4.99 லட்சம்

கே6: ரூ.5.36 லட்சம்

கே6 ப்ளஸ்: ரூ.5.58 லட்சம்

கே: ரூ.5.91 லட்சம்

அனைத்தும் புனே எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

 டீசல் மாடல் விலை விபரம்

டீசல் மாடல் விலை விபரம்

கே2: ரூ.5.22 லட்சம்

கே2 ப்ளஸ்: ரூ.5.44 லட்சம்

கே4: ரூ.5.57 லட்சம்

கே ப்ளஸ்: ரூ.5.79 லட்சம்

கே6: ரூ.6.21 லட்சம்

கே6 ப்ளஸ்: ரூ.6.43 லட்சம்

கே: ரூ.6.76 லட்சம்

அனைத்தும் புனே எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

Most Read Articles
English summary
Mahindra has launched the much awaited KUV100 in India for Rs. 4.42 lakh onward ex-showroom (Pune).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X