ஒரே மாதத்தில் 21,000 புக்கிங்குகளை குவித்த மஹிந்திரா கேயூவி100!

By Ravichandran

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய கேயூவி100 எஸ்யூவி அறிமுகம் செய்யபட்ட ஒரெ மாதத்தில், 21,000 புக்கிங்களை குவித்துள்ளது.

மஹிந்திரா கேயூவி100 மாடலின் இந்த அபாரமான புக்கிங்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா கேயூவி100 பற்றி...

மஹிந்திரா கேயூவி100 பற்றி...

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி, இந்தியாவில் ஜனவரி 15, 2016-ல் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது. மஹிந்திரா கேயூவி100, யங் எஸ்யூவி என்றும் அழைக்கபடுகிறது.

மஹிந்திரா கேயூவி100, மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விற்பனை முறைகள்;

விற்பனை முறைகள்;

மஹிந்திரா நிறுவனம், தங்களின் கேயூவி100 எஸ்யூவியின் புக்கிங்களை, வழக்கமான டீலர்ஷிப்கள் மூலமாகவும், இணைய வழி விற்பனை நிறுவனமான ஃப்ளிப்கார்ட் மூலமாகவும் ஏற்று கொண்டு வந்தது.

ஃப்ளிப்கார்ட்டின் கருத்து;

ஃப்ளிப்கார்ட்டின் கருத்து;

மஹிந்திரா கேயூவி100 அறிமுகம் செய்யபட்ட நாள் முதல், இணையதளம் வழி மூலமாக மேற்கொள்ளபட்டுவந்த ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் விற்பனை நடவடிக்கைக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஆன்லைன் விற்பனையின் வெற்றி!

ஆன்லைன் விற்பனையின் வெற்றி!

மஹிந்திரா கேயூவி100 அறிமுகம் செய்யபட்டது முதல் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆன்லைன் மூலம் மேற்கொள்ளபட்டு வந்த புக்கிங்களில் 45% புக்கிங்கள், இந்தியாவின் டாப் 5 நகரங்களில் இருந்து பதிவாகியுள்ளது.

இது மக்கள் ஆட்டோமொபைல்களை கூட ஆன்லைனில் வாங்கும் நடவடிக்கைகளின் ஏற்றத்தை காட்டுகிறது.

ஃப்ளிப்கார்ட்டின் தனிப்பிரிவு;

ஃப்ளிப்கார்ட்டின் தனிப்பிரிவு;

ஃப்ளிப்கார்ட் இணைய வழி விற்பனை நிறுவனம், ஆட்டோமொபைல் தயாரிப்புகளை விற்பதற்காக தங்கள் இணையதளத்தில் இதற்கு என ஒரு ஆட்டோமொபைல் பிரிவையே ஏற்படுத்தியுள்ளனர்.

இந்திய வாடிக்கையாளர்களுக்கு, வீட்டிலோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ ஆட்டோமொபைல் தயாரிப்புகள் வாங்கும் விஷயத்தில் பிரத்யேகமான அனுபவத்தை வழங்குவதே இந்த பிரத்யேகமான ஆட்டோமொபைல் பிரிவு உருவாக்கபட்டதன் நோக்கமாகும்.

மஹிந்திரா கேயூவி100 வாகனத்தின் இணைய வழி விற்பனையின் வெற்றி, வாகனங்கள் இணையதளம் மூலம் வெற்றிகரமாக விற்கபடலாம் என்பதை உறுதிபடுத்துகிறது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி, இந்திய வாகன சந்தையில் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளில் விற்கபடுகிறது.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின், 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 82 பிஹெச்பியையும், 115 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின், 1.2 லிட்டர் டீசல் இஞ்ஜின், 77 பிஹெச்பியையும், 190 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய இரண்டுமே 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல்கள், 4.45 லட்சம் ரூபாய் முதல் 5.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் விற்கபடுகிறது.

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் டீசல் மாடல்கள், 5.25 லட்சம் ரூபாய் முதல் 6.84 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் விற்கபடுகிறது.

மஹிந்திரா, ஃப்ளிப்கார்ட் மகிழ்ச்சி;

மஹிந்திரா, ஃப்ளிப்கார்ட் மகிழ்ச்சி;

ஆல்லைன் மற்றும் டீலர்ஷிபகள் (ஆஃப்லைன்) மூலம், மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு கிடைத்த 21,000+ கூடுதலான புக்கிங்கள் குறித்து மஹிந்திரா மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய 2 நிறுவனங்களுமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவி - சிறப்புப் பார்வை

மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியின் புகைப்படத் தொகுப்பு!

மஹிந்திரா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Mahindra and Flipkart have recorded 21,000 KUV1OO Bookings in a month's period from it launch. Mahindra launched their all-new KUV1OO model in India on January 15, 2016. Mahindra started accepting Bookings through regular dealerships and through online e-commerce websites like Flipkart. KUV1OO Bookings has made both Flipkart and Mahindra happy.
Story first published: Wednesday, March 2, 2016, 13:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X