மகேந்திரா கேயூவி 100 காரை பிரம்மாண்டமாக மாற்றும் புதிய கிட் அறிமுகம்

Written By: Krishna

சங்கர் படம் மாதிரி பிரம்மாண்டமாக இருக்க வேண்டும். அதேவேளையில், வி.சேகர் படம் மாதிரி லோ பட்ஜெட்டில் இருக்க வேண்டும். அப்படி ஒரு கார் வாங்க விரும்புவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸாக விளங்குபவை காம்பேக்ட் சியூவி கார்கள்.

காம்பேக்ட் சியூவி மாடலில் தற்போது மகேந்திரா கேயூவி 100 மட்டுமே சந்தையில் விற்பனைக்கு உள்ளது. இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரைக் கவரும் வகையிலான அம்சங்களுடன் அந்தக் கார்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கட்ந்த ஜனவரி மாதம் இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது.

மஹிந்திரா கேயூவி100

இந்த மாடல் மகேந்திரா எக்ஸ்யூவி 500 மாடலைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மோனோகோக் சேஸ் மற்றும் சுற்றியும் பிளாஸ்டிக் பிளேட் டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அதற்கு மேலும் மெருகு ஏற்றும் வகையில் வண்டிக்கு வெளியே சில எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸைப் பொருத்துவதற்கான எக்ஸ்ப்லோரர் கிட் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த கிட்டில் உள்ள சாதனங்களை வண்டியின் வெளிப்புறத்தில் பொருத்திவிட்டால், கேயூவி 100 சும்மா ஜம்மென்று மாறிவிடும்.

பேஸ் பிளேட்டுக்குப் பொருத்தும் சாதனங்கள், பின்புறமும், முன்புறமும் பொருத்தக்கூடிய பம்பர்கள், பேனட்டில் பொருத்தும் ஸ்கூப்ஸ், வீல் வளைவுகள் (ஆர்ச்சஸ்), பக்கவாட்டில் வரும் ஸ்கர்ட்ஸ் ஆகியவை அந்த கிட்டில் உள்ளன.

இதைத்தவிர கூரையில் பொருத்தக்கூடிய ஸ்பாயிலர்கள் எல்இடி விளக்கு இணைப்புடன் வழங்கப்பட்டுள்ளன. அதன் விலை ரூ.42,000. இந்த கிட்டை பொருத்தினால் டார்ஜான் வீரன் போல வண்டி வலுவாகக் காட்சியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கேயூவி 100 மாடலில் உள்ள சிறப்பம்சங்கள்....

1.2 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் எஞ்சின்கள் உள்ளன. பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. டீசல் எஞ்சினில் 77 பிஎச்பி 190 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆற்றல் உள்ளது.

கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் சாலைக்கும் காரின் அடித்தளத்துக்கும் இடையேயான இடைவெளி 170 மில்லி மீட்டராக உள்ளது.

குடும்பத்துடன் பயணிக்கும்போது, சில உடைமைகளை எடுத்துச் செல்வதற்காக 243 லிட்டர் கொள்ளளவுடன் கூடிய பூட்ஸ்பேஸ் வசதி இருக்கிறது.

கேயூவி 100 ஹை எண்டு மாடலில் 4 ஏர் பேக் இருப்பது அதன் கூடுதல் சிறப்பம்சம். மைலேஜைப் பொருத்தவரை பெட்ரோல் எஞ்சின் கார் லிட்டருக்கு 18.1 கிலோ மீட்டரும், டீசல் எஞ்சின் கார் லிட்டருக்கு 25.3 கிலோ மீட்டரும் தரும் எனக் கூறப்படுகிறது.

விலையை எடுத்துக் கொண்டால், ரூ.4.5 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

English summary
Mahindra KUV100 Xplorer Kit Now Available At Dealers.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark