ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500-வுக்கு புதிய டீசல் இஞ்ஜினை அறிமுகப்படுத்திய மஹிந்திரா

Written By:

ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 ஆகிய எஸ்யூவிகளில் புதிய 1.99 லிட்டர் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்ட மாடலை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சமீபத்தில் தான், 2,000 சிசி-க்கும் கூடுதலான டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாசு உமிழ்வு பிரச்னை மிகுந்த அளவில் பாதிப்புகளை உண்டாக்கி வந்ததால் தான், இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டியதாக இருந்தது. இதில், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தான் மிகவும் அதிகம் பாதிக்கபட்ட நிறுவனமாக உள்ளது.

mahindra-launches-1-99-litre-diesel-engine-delhi-ncr-region

இந்த பிரச்னைக்கு, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் ஒரு புதிய தீர்வு கண்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம், தங்களின் ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 கார்களை 1.99 லிட்டர் டீசல் இஞ்ஜினுடன் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த புதிய வகையிலான இஞ்ஜின் தேர்வு, டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளிக்கு மட்டும் தான் வழங்கபட உள்ளது.

1.99 லிட்டர் எம்ஹாக் டீசல் இஞ்ஜினை 2 மாடல்களுக்கும், வெவ்வேறு விதமாக இஞ்ஜினியர்கள் ட்யூன் செய்து வெளியிட்டுள்ளனர். ஸ்கார்பியோ-வுக்கு பொருத்தபட்டுள்ள 1.99 லிட்டர் எம்ஹாக் டீசல் இஞ்ஜின் 120 பிஹெச்பி-யையும், எக்ஸ்யூவி500 மாடலுக்கு பொருத்தபட்டுள்ள டீசல் இஞ்ஜின் 140 பிஹெச்பி-யையும், வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. முந்தைய வடிவ இஞ்ஜின்களில் வெளியானது போன்ற திறன் அளவுகளே இந்த புதிய இஞ்ஜின்களில் இருந்தும் வெளியாக உள்ளது.

mahindra-launches-1-99-litre-diesel-engine-in-delhi-ncr-regions

1.99 லிட்டர் எம்ஹாக் டீசல் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ள ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 வாகனங்களின் விலை விவரங்கள் குறித்து எந்த விதமான தகவல்களும் வெளியிடப்படவில்லை. தற்போதைய நிலையில், ஸ்கார்பியோ 9.05 லட்சம் ரூபாய் முதல் 14.61 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் விற்கபடுகிறது. அதேபோல், மஹிந்திரா எக்ஸ்யூவி500, 11.47 லட்சம் ரூபாய் முதல் 17.37 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் விற்கபடுகிறது.

1.99 லிட்டர் எம்ஹாக் டீசல் இஞ்ஜினின் உருவாக்கம், ஏப்ரல் 2014 முதல் நடைபெற்று கொண்டிருப்பதாக மஹிந்திரா நிறுவனம் உறுதி செய்துள்ளது. டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில், 2,000 சிசி-க்கும் கூடுதலான டீசல் வாகனங்களுக்கு தடைவிதிக்கபட்ட, இந்த நேரத்தில் 1.99 லிட்டர் எம்ஹாக் டீசல் இஞ்ஜின் அறிமுகம் செய்யபடுவது மிக பொருத்தமாக உள்ளது.

இதோடு மட்டுமல்லாமல், தங்கள் நிறுவனத்தின் எஸ்யூவி-க்களுக்கு பெட்ரோல் இஞ்ஜின்களை வடிவமைக்கும் முயற்சியிலும் மஹிந்திரா நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டு வந்தது குறிப்பிடதக்கது.

English summary
Mahindra launches 1.99-litre Diesel Engine for their Scorpio and XUV5OO SUVs. Mahindra and Mahindra is one of the manufacturers, which is very much affected by the ban of diesel vehicles sale in Delhi-NCR region. As a solution to this Diesel Engine Ban, Mahindra has launched a new 1.99-litre diesel engine for its XUV5OO and Scorpio models.
Story first published: Saturday, January 23, 2016, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

X