மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது

By Ravichandran

மஹிந்திரா நிறுவனம், தங்களின் புதிய எஸ்யூவியான நூவோஸ்போர்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர்.

மஹிந்திரா நூவோஸ்போர்ட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா நூவோஸ்போர்ட்

மஹிந்திரா நூவோஸ்போர்ட்

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி, மஹிந்திரா நிறுவனம் சார்பாக இந்திய வாகன சந்தைகளில் வழங்கப்படும் குவான்ட்டோ காருக்கு மாற்றாக அமைகிறது.

மேலும், இது டியூவி300 எஸ்யூவியை அடுத்து, மஹிந்திரா நிறுவனம் வழங்கும் 2-வது சப்-4 மீட்டர் எஸ்யூவி ஆகும்.

இது பெரிதும் எதிர்பார்க்கபட்ட வாகனங்களில் ஒன்றாக உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி, 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட், டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின், 100 பிஹெச்பியையும், 240 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஒரு ஏஎம்டி கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

டிரைவிங் மோட்;

டிரைவிங் மோட்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி, 2 டிரைவிங் மோட்கள் கொண்டுள்ளது.

வெவ்வேறு விதமான பிரயோகங்களுக்கு, ஈக்கோ மற்றும் பவர் மோட்கள் வழங்கபட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி, ஒரு லிட்டர் எரிபொருளுக்கு, 17.45 மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

ஸ்டைலிங்;

ஸ்டைலிங்;

குவான்ட்டோவுக்கு மாற்றாக வரும் மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி, குவான்ட்டோவை போன்றே புரொஃபைல் கொண்டுள்ளது. ஆனால், ஸ்கார்ப்பியோவின் சில டிசைன் அம்சங்களும், இந்த நூவோஸ்போர்ட் எஸ்யூவிக்கு ஏற்று கொள்ளபட்டுள்ளது.

ஸ்கார்ப்பியோவை போன்றே, நூவோஸ்போர்ட் எஸ்யூவியின் முன்பகுதியிலும் சிறிய கிரில் மற்றும் பெரிய ஏர் டேம் வழங்கபட்டுள்ளது.

வேறுபாடுகள்;

வேறுபாடுகள்;

ஹெட்லேம்ப் விஷயத்தில் தான், ஸ்கார்ப்பியோவை காட்டிலும் மஹிந்திரா நூவோஸ்போர்ட் வேறுபடுகிறது. மஹிந்திரா நூவோஸ்போர்ட், ஸ்கார்ப்பியோவை

போன்றே ஹெட்லேம்கள் கொண்டிருந்தாலும், இதன் டிஆர்எல் எனப்படும் டேடைம் ரன்னிங் எல்இடிகள் ஹெட்லேம்ப்களுடன் ஒருங்கிணைக்கபடாமல் உள்ளது.

மாறாக, ஹெட்லேம்ப்களுக்கு மேலும் இருக்கும் இந்த டிஆர்எல்கள், இதன் கண் இமைகள் போல் காட்சி அளிக்கிறது.

பிளாஸ்டிக் கிளாடிங்;

பிளாஸ்டிக் கிளாடிங்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியை சுற்றிலும் பிளாஸ்டிக் கிளாடிங் வழங்கபட்டுள்ளது. இது இந்த காருக்கு, ஒரு முரட்டுதனமான தோற்றத்தை அளிக்கிறது.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி, மல்டி-ஸ்போக் (பல்வேறு ஸ்போக்குகள்) அல்லாய் வீல்கள் கொண்டுள்ளது. மேலும், இதன் பின் பகுதியில் உள்ள டெயில் லேம்ப்கள், கிளியரான கிளாஸ் லென்ஸ்கள் கொண்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி, லெதர் இருக்கைகள் மற்றும் குரோம் ஆக்சண்ட் உடைய ட்யூவல் டோன் இண்டீரியர்கள் கொண்டுள்ளது.

இவை, இந்த மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவிக்கு பிரிமியம் தோற்றம் மற்றும் உணர்வை வழங்குகிறது.

பொழுதுபோக்கு அம்சம்;

பொழுதுபோக்கு அம்சம்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி, 6.2 இஞ்ச் அளவிலான டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.

இது புளூடூத், ஆக்ஸ் மற்றும் ஹேண்ட்ஸ்-ஃப்ரி காலிங் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.

பூட் ஸ்பேஸ்;

பூட் ஸ்பேஸ்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி தான், இதன் கிளாஸ் வாகனங்களில், சிறந்த உயரம் மற்றும் அகலம் கொண்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கிறது.

இதன் செக்மண்ட்டில், 412 லிட்டர் என்ற மிகச் சிறந்த பூட் ஸ்பேஸ் வசதி கொண்டுள்ளதும், இந்த நூவோஸ்போர்ட் என கூறப்படுகிறது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

பாதுகாப்பு விஷயத்தில் மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி குறிப்பிடதக்க அம்சங்களை கொண்டுள்ளது. இதன் முன் பகுதியில் ட்யூவல் ஏர்பேக்குகளும், இபிடி வசதியுடன் கூடிய ஏபிஎஸ் வழங்கபட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு வசதிகள் அனைத்தும், ஒவ்வொரு வேரியண்ட்டிலும் தேர்வும் முறையில் வழங்கபடுகிறது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி மொத்தம் 6 வண்ணங்களில் கிடைக்கிறது.

நூவோஸ்போர்ட் எஸ்யூவி, மோல்டன் ரெட், ரஸ்ட் ஆரஞ்ச், டைமண்ட் வைட், ரீகல் புளூ, மிஸ்ட் சில்வர் மற்றும் ஃபியரி பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

விற்பனைக்கு அறிமுகம்;

விற்பனைக்கு அறிமுகம்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி, இந்தியா முழுவதிலும் உள்ள மஹிந்திரா ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

போட்டி;

போட்டி;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி, மாருதி சுஸுகியின் விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்ளுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி பல்வேறு சிறந்த அம்சங்கள் கொண்டுள்ளதாலும், நல்ல விலையில் வெளியாவதாலும், இது மற்ற வாகனங்களுக்கு, கடும் போட்டியாக விளங்கும்.

விலை விவரங்கள் - 1;

விலை விவரங்கள் - 1;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியின் விலை விவரங்களை வேரியண்ட் ரீதியாக விரிவாக தெரிந்த் கொள்வோம்.

வேரியண்ட் பெயர் - என்4

விலை - 7,35,000 எக்ஸ்-ஷோரூம் (தானே)

வேரியண்ட் பெயர் - என்4+

விலை - 7,65,000 எக்ஸ்-ஷோரூம் (தானே)

வேரியண்ட் பெயர் - என்6

விலை - 8,36,000 எக்ஸ்-ஷோரூம் (தானே)

விலை விவரங்கள் - 2;

விலை விவரங்கள் - 2;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியின் விலை விவரங்களை வேரியண்ட் ரீதியாக விரிவாக தெரிந்த் கொள்வோம்.

வேரியண்ட் பெயர் - என்6 (ஏஎம்டி)

விலை - 9,00,000 எக்ஸ்-ஷோரூம் (தானே)

வேரியண்ட் பெயர் - என்8

விலை - 9,12,000 எக்ஸ்-ஷோரூம் (தானே)

வேரியண்ட் பெயர் - என்6 (ஏஎம்டி)

விலை - 8,36,000 எக்ஸ்-ஷோரூம் (தானே)

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எஸ்யூவியான நூவோஸ்போர்ட், ஏப்ரலில் அறிமுகம்

புதிய மஹிந்திரா குவான்ட்டோ எஸ்யூவிக்கு, நூவோஸ்போர்ட் என பெயர் மாற்றம்

மஹிந்திரா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Mahindra has launched their new NuvoSport compact SUV in India. NuvoSport replaces Quanto in the Mahindra's lineup of cars. NuvoSport is second sub-4m SUV after TUV300. Mahindra NuvoSport is available in 6 different colours - Molten Red, Rust Orange, Diamond White, Regal Blue, Mist Silver and Fiery Black. To know more about NuvoSport, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X