மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருக்கு அதிரடி சலுகைகள்... டிசம்பர் 31 வரை மட்டுமே பெற முடியும்!

Written By:

ஆண்டு கடைசியை நெருங்கி விட்ட நிலையில், இருப்பில் தேங்கி இருக்கும் இந்த ஆண்டு தயாரிப்பு தேதி கொண்ட கார்களுக்கு பல அதிரடி சலுகைகளை கார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அந்த வகையில், இப்போது மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காருக்கு அதிரடி ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த விபரங்களை தொடர்ந்து செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 அதிரடி ஆஃபர்... இச்சலுகை டிசம்பர் 31 வரை மட்டுமே!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருக்கு ரூ.101 மட்டுமே முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் அரிய வாய்ப்பை மஹிந்திரா அறிவித்துள்ளது. இதனால், புத்தாண்டில் கார் விலை உயர்வை தவிர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 அதிரடி ஆஃபர்... இச்சலுகை டிசம்பர் 31 வரை மட்டுமே!

விலையில் நேரடி தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், இலவச இன்ஸ்யூரன்ஸ் உள்பட பல்வேறு சலுகைகள் மூலமாக ரூ.88,000 வரை சேமிக்கும் வாய்ப்பையும் மஹிந்திரா அறிவித்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 அதிரடி ஆஃபர்... இச்சலுகை டிசம்பர் 31 வரை மட்டுமே!

கடன் திட்டத்தில் வாங்கப்படும் கார்களுக்கு நிதி நிறுவனங்கள், வங்கிகள் மூலமாக கூடுதல் பரிசு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், சில நிச்சய பரிசுகளும் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 அதிரடி ஆஃபர்... இச்சலுகை டிசம்பர் 31 வரை மட்டுமே!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு ஆன்ரோடு விலையில் தள்ளுபடியும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறப்பு கடன் திட்டங்களையும் தேர்வு செய்து வாங்கும் வாய்ப்பும் இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 அதிரடி ஆஃபர்... இச்சலுகை டிசம்பர் 31 வரை மட்டுமே!

பிரம்மாண்டமும், ஸ்டைலும் இழைந்தோடும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. மேலும், இந்த காரில் 7 பேர் செல்வதற்கான இடவசதியும், நவீன தொழில்நுட்ப வசதிகளும் இந்த காரை முன்னிலைப்படுத்தும் விஷயங்களாக உள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 அதிரடி ஆஃபர்... இச்சலுகை டிசம்பர் 31 வரை மட்டுமே!

இந்த காரில் இருக்கும் 2,179சிசி டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 330 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கிறது. இதுதவிர்த்து, 1.99 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலிலும் கிடைக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 அதிரடி ஆஃபர்... இச்சலுகை டிசம்பர் 31 வரை மட்டுமே!

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலும் வாடிக்கையாளர்களின் தேர்வுக்கு கூடுதல் வசதி. இந்த கார் ரூ.12.38 லட்சம் முதல் ரூ.18.60 லட்சம் வரையிலான விலையில் சென்னையில் கிடைக்கிறது.

English summary
Mahindra offers huge discounts on the XUV500.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark