கார்களுக்கு ரூ.2.71 லட்சம் வரை சேமிப்பு சலுகைகளை வழங்க மஹிந்திரா முடிவு!

Written By:

புத்தாண்டு நெருங்கி வரும் வேளையில், கார் வாங்கும் திட்டத்தை வாடிக்கையாளர்கள் தள்ளிபோடுவது இயல்பு. இதனால், கார் விற்பனையில் வழக்கமாக சுணக்கம் ஏற்படும். தற்போது ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பும் கார் நிறுவனங்களுக்கு பலத்த இடியை தலையில் இறக்கியிருக்கிறது.

இதனால், சில கார் நிறுவனங்களின் டீலர்களில் இருப்பு அதிகரித்துவிட்டது. இருப்பு வைக்கப்பட்ட கார்களை இந்த மாதத்துடன் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு உபாயமாக, இருப்பு உள்ள கார்களுக்கு அதிரடிச் சலுகைகளை வழங்குவதற்கு பல முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

ஆலோசனையில் முடிவு

ஆலோசனையில் முடிவு

அதன்படி, எஸ்யூவி வகை வாகன தயாரிப்பில் முன்னணி வகிக்கும் மஹிந்திரா நிறுவனம், டீலர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறது. அதன்படி, தற்போது இருப்பு உள்ள கார்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மாடலுக்கு தக்கவாறும், மாநிலங்களுக்கு தக்கவாறும் அதிகபட்ச சலுகைகள் வழங்குவது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

சலுகைகள் வேறுபடும்

சலுகைகள் வேறுபடும்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிக்கு ரூ.50,000 வரை சேமிப்புச் சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த சலுகை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.

முன்னணி மாடல்கள்

முன்னணி மாடல்கள்

பொலிரோ எஸ்யூவிக்கு அதிகபட்சமாக ரூ.67,000 வரை வழங்கப்பட உள்ளதாம். அதேபோன்று, மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு அதிகபட்சமாக ரூ.89,000 வரையிலும், கேயூவி100 எஸ்யூவிக்கு ரூ.73,000 வரையிலும் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்ச சலுகை

அதிகபட்ச சலுகை

மஹிந்திரா நிறுவனத்தின் வாயிலாக விற்பனை செய்யப்படும் சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவிக்கு அதிகபட்சமாக ரூ.2.71 லட்சம் வரை தள்ளுபடி வழங்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

செல்லாது அறிவிப்பின் தாக்கம்

செல்லாது அறிவிப்பின் தாக்கம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 39,383 கார்களை விற்பனை செய்திருந்த மஹிந்திரா நிறுவனம், கடந்த மாதம் 29,814 கார்களையே விற்பனை செய்துள்ளது. அதாவது, விற்பனை 24.29 சதவீதம் குறைந்துவிட்டது. எனவே, இருப்பு உள்ள கார்களை தள்ளுபடிகளை கொடுத்து இந்த மாத இறுதிக்குள் விற்பனை செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது.

English summary
Mahindra Plans To Give Massive Discounts On Cars.
Story first published: Friday, December 2, 2016, 11:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark