புதிய மஹிந்திரா குவான்ட்டோ எஸ்யூவிக்கு, நூவோஸ்போர்ட் என பெயர் மாற்றம்

By Ravichandran

பொலிவுகூட்டபட்டு வரும் புதிய மஹிந்திரா குவான்ட்டோ காம்பேக்ட் எஸ்யூவிக்கு நூவோஸ்போர்ட் என்று பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய மஹிந்திரா குவான்ட்டோ குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

Picture credit: Overdrive

நூவோஸ்போர்ட்...

நூவோஸ்போர்ட்...

நூவோஸ்போர்ட் மாடல், மஹிந்திரா நிறுவனத்தின் 4-மீட்டர் நீளத்துக்கும் குறைவாந காம்பேக்ட் எஸ்யூவி மாடல். சமீப காலமாக, மஹிந்திரா நிறுவனம் இந்த நூவோஸ்போர்ட் அடிக்கடி சாலை சோதனைகள் செய்தது குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், அடையாளங்கள் மறைக்கப்படாமல் சோதனை செய்யப்பட்ட புதிய மஹிந்திரா குவான்ட்டோ படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகியது. ஓவர்டிரைவ் தளம் வெளியிட்ட தகவல்களின் படி, இந்த பொலிவுகூட்டபட்ட மஹிந்திரா குவான்ட்டோ எஸ்யூவிக்கு நூவோஸ்போர்ட் என்று பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட், பெட்ரொல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட்டின் பெட்ரோல் மாடல், புதிய 1.2 லிட்டர் எம்ஹாக்-100 இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட்டின் டீசல் மாடல், மஹிந்திரா குவான்ட்டோவில் இருந்த அதே 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜினை கொண்டிருக்கும்.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவிக்கு புதிய பனி விளக்குகள் மற்றும் சைடு ப்ளிங்கர்கள் வழங்கபட்டுள்ளது. இதன் பானட்டில், புதிய ஏர்-ஸ்கூப் பெற்றுள்ளது.

மேலும், இதற்கு புதிய அலாய் வீல்கள் வழங்கபட்டுள்ளது. இதன் கதவுகளில் கிளாடிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பின்புற டிசைன்;

பின்புற டிசைன்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியின் பின்புறத்தில் பகுதியில், நூவோஸ்போர்ட் பெயர் கொண்ட பேட்ஜ் மற்றும் புதிய டெய்ல்லைல்ட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

மற்றபடி, இந்த நூவோஸ்போர்ட்டின் ஒட்டுமொத்த டிசைன் அதன் முந்தைய மாடலின் வடிவங்களையே கொண்டுள்ளது.

7-ஸீட்டர்;

7-ஸீட்டர்;

குவான்ட்டோவில் இருந்த 7-ஸீட்டர் இருக்கை அமைப்பு, இந்த மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியிலும் வழங்கபடுகிறது. இதன் டாப் வேரியண்ட் மாடல், க்ரூஸ் கண்ட்ரோல், டபுள்-டின் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.

போட்டி;

போட்டி;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி தனது பங்காளியான மஹிந்திரா டியூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

அறிமுகம்;

அறிமுகம்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி, இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்யபடும் என தகவல்கள் வெளியாகிறது.

விலை;

விலை;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியின் விலை, சுமார் 5.5 லட்சம் ரூபாய் முதல் 8.5 லட்சம் ரூபாய்க்கு இடையில் நிர்ணயிக்கப்படலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

'யோகா' சொகுசு இருக்கைகளுடன் வந்த மஹிந்திரா குவான்ட்டோ

அல்ஜீரிய தேச மக்களை அசத்திய மஹிந்திரா எஸ்யூவிகள்!

குவான்ட்டோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Mahindra has renamed their new Quanto facelift as Nuvosport, according to the news from Overdrive. Just like Quanto, Mahindra will continue ti present the Nuvosport as 7 Seater SUV. Mahindra Nuvosport is expected to be launched by the end of March. It is expected to priced at the ranges of Rs. 5.5 lakhs to Rs. 8.5 lakhs.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X