மஹிந்திரா நூவோஸ்போர்ட் மற்றும் புதிய ஸ்கார்ப்பியோ மாடல்களுக்கு ரீகால் அழைப்பு

Written By:

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம், தங்களின் அடுத்த தலைமுறை புதிய ஸ்கார்ப்பியோ மற்றும் நூவோஸ்போர்ட் மாடல்களுக்கு ரீகால் அழைப்பு விடுத்துள்ளனர். எந்த ஒரு வாகனமும் கோளாறுகள் உள்ள பட்சத்திலோ அல்லது பழுதுகள் உள்ள பட்சத்திலோ அவற்றிற்கு ரீகால் அழைப்பு விடுக்கப்படுகிறது. ரீகால் அழைப்புகள், புகார்கள் வந்ததும் கட்டாயத்தின் பேரிலோ அல்லது தாமாகவோ முன் வந்து மேற்கொள்ளப்படுகிறது.

மஹிந்திரா நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த ரீகால் அழைப்பு தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

ரீகால் அழைப்பு;

ரீகால் அழைப்பு;

ஃபால்டி ஃப்லூயிட் ஹோஸ் (faulty fluid hose) எனப்படும் பழுதான திரவ ஹோஸ்ஸில் ஏற்பட்ட கோளாறை சமயோஜித முறையில் கண்டுபிடித்ததன் காரணமாக, மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் இந்த ரீகால் அழைப்பு விடுத்துள்ளது. 2016 வரையில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு இந்த ரீகால் அழைப்பு பொருந்தும். எத்தனை வாகனங்களுக்கு ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என மஹிந்திரா நிறுவனம் அறிவிக்கவில்லை.

பழுது பார்த்தல்;

பழுது பார்த்தல்;

வாகனங்களின் பரிசோதனை தொடர்பாக, வாடிக்கையாளர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளப்படுவார்கள் என்றும், மேலும் இதற்கான பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரீகாலுக்கான காரணம்;

ரீகாலுக்கான காரணம்;

"வாடிக்கையாளர்களுக்கு சிக்கல்கள் இல்லாத சுமூகமான வாகனம் இயக்கம் அனுபவத்தை வழங்கும் வகையில், இந்த ரீகால் அழைப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இந்த ரீகால் அழைப்பு சியாம் அமைப்பின் தாமாக முன் வந்து மேற்கொள்ளும் ரீகால் அழைப்பு (SIAM's voluntary code on vehicle recall) மேற்கொள்ளும் முறைக்கு உட்பட்டு செய்யப்படுகிறது" என மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கிறது.

முந்தைய ரீகால்;

முந்தைய ரீகால்;

முன்னதாக, கடந்த மாதம், மஹிந்திரா நிறுவனம், ரியர் டிரைவ்ஷாஃப்ட் பழுதடைந்துள்ளதோ என்ற சந்தேகத்தின் பேரில் சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி ரீகால் அழைப்பு விடுத்தனர்.

ரீகால் கலாச்சாரம்;

ரீகால் கலாச்சாரம்;

இந்தியாவில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 2.24 மில்லியன் வாகனங்களை, பாதுகாப்பு காரணங்களுக்கு ரீகால் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்கவேல் மாரியப்பனுக்கு தார் எஸ்யூவி பரிசு: ஆனந்த் மஹிந்திரா!

பிவி சிந்துவுக்கும் தார் எஸ்யூவி பரிசு: ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு

காட்டு வழி போறோம்... கவலைப்படாத..... ஆஃப் - ரோடிங் ஜீப்கள் அறிமுகமான கதை...

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra & Mahindra Ltd. recalls its new generation Scorpio and Nuvosport for pro-active inspection of faulty fluid hose. This recall is for vehicles manufactured until 2016. Customers will be contacted for inspection and subsequent rectification, which will done free of cost. However, Mahindra did not confirm about number of vehicles recalled for this rectification. To know more, check here...
Story first published: Thursday, September 22, 2016, 16:54 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark