அதிக எரிபொருள் சிக்கனம் தரும் ஹைப்ரிட் நுட்பத்துடன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அறிமுகம்!

Written By:

மஹிந்திரா நிறுவனம், இண்டெல்லி-ஹைப்ரிட் டெக்னாலஜி (Intelli-Hybrid Technology) எனப்படும் அதிக எரிபொருள் சிக்கனம் தரும் ஹைபிரிட் நுட்பத்துடனான புதிய ஸ்கார்ப்பியோ மாடலை அறிமுகம் செய்துள்ளனர். சந்தைகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு, சில நேரங்களில் சில மாடல்களின் கொள்ளளவு கூட்டப்படுவதும், குறைக்கப்படுவதும் வாடிக்கையான விஷயமாகும்.

அந்த வகையில், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

முக்கிய நோக்கம்;

முக்கிய நோக்கம்;

டெல்லி அரசு, 2000 சிசி அல்லது அதற்கும் கூடுதலான இஞ்ஜின் கொள்ளளவு கொண்ட வாகனங்களின் விற்பனைக்கு தடை விதித்தது. இதனால், ஏராளமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த பிரச்னையை சமாளிக்க, மஹிந்திரா நிறுவனம், தங்களின் ஸ்கார்ப்பியோ மாடலின் இஞ்ஜின் கொள்ளளவை குறைத்து, 1.99 லிட்டர் என்ற கொள்ளளவு உடைய இஞ்ஜின் கொண்ட புதிய ஸ்கார்ப்பியோ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடல், முக்கியமாக டெல்லி மற்றும் என்சிஆர் சந்தைகளுக்காக பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டது.

கிடைக்கும் வேரியன்ட்கள்;

கிடைக்கும் வேரியன்ட்கள்;

இண்டெல்லி-ஹைப்ரிட் டெக்னாலஜி உடைய புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, எஸ்4, எஸ்4+, எஸ்4+ 4டபுள்யூடி, எஸ்6+, எஸ்8, எஸ்10-2டபுள்யூடி மற்றும் எஸ்10-4டபுள்யூடி ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கிறது.

இண்டெல்லி-ஹைப்ரிட் டெக்னாலஜி;

இண்டெல்லி-ஹைப்ரிட் டெக்னாலஜி;

இண்டெல்லி-ஹைப்ரிட் டெக்னாலஜி இல்லாத வாகனங்களுடன் ஒப்பிடுகையில், இண்டெல்லி-ஹைப்ரிட் டெக்னாலஜி உடைய 7% வரையிலான எரிபொருளை சேமிக்க உதவுகிறது. இந்த இண்டெல்லி-ஹைப்ரிட் டெக்னாலஜியின் படி, 3 நொடிகளுக்கு மேல் இந்த வாகனம் ஒரே இடத்தில் நின்ற நிலையில் இருந்தால், இஞ்ஜின் தானாக நின்றுவிடும். அதன் பின்னர், கிளட்ச்சை மீண்டும் டிப்ரெஸ் செய்வதன் மூலம், இஞ்ஜின் மீண்டும் ஸ்டார்ட் ஆகி விடுகிறது. மேலும், இந்த இண்டெல்லி-ஹைப்ரிட் டெக்னாலஜி கொண்ட வாகனங்களில், பிரேக் உபயோகிக்கும் போது உருவாகும் சக்தியானது பேட்டரியை சார்ஜ் செய்ய உதவுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இஞ்ஜின் பற்றி கூறுகையில், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் விற்கப்படும் இண்டெல்லி-ஹைப்ரிட் டெக்னாலஜி உடைய 1.99 லிட்டர் டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்ட புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, 120 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

இண்டெல்லி-ஹைப்ரிட் டெக்னாலஜி கொண்ட புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மாடலில், ஐப்ரோ-ஸ்டைலிலான எல்இடி பார்க்கிங் லைட்கள் உடைய மடங்கும் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஜிபிஎஸ் நேவிகேஷன் உடைய 6-இஞ்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மன்ட் சிஸ்டம், முழுமையான ஆட்டோமேட்டிக் டெம்பரேச்சர் கண்ட்ரோல், புளூ-கிரே இன்டீரியர் மற்றும் 17-இஞ்ச் அல்லாய் வீல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

விலை;

விலை;

இண்டெல்லி-ஹைப்ரிட் டெக்னாலஜி உடனான 1.99 லிட்டர் என்ற கொள்ளளவு உடைய இஞ்ஜின் கொண்ட புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் அடிப்படை (பேஸ்) வேரியன்ட், 9.35 லட்சம் ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்கப்படுகிறது.

சேமிப்பு;

சேமிப்பு;

இண்டெல்லி-ஹைப்ரிட் டெக்னாலஜி உடனான 1.99 லிட்டர் என்ற கொள்ளளவு உடைய இஞ்ஜின் கொண்ட புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, டெல்லியில் 5% சலுகையுடனான வேல்யூ ஆட்டட் டேக்ஸ் (concessional Value Added Tax (VAT)) எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியுடன் கிடைக்கிறது. இதனால், வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் மாடல்களை பொருத்து, 60,000 ரூபாய் முதல் 90,000 ரூபாய் வரை சேமிக்க முடியும்.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra launched new Scorpio with Intelli-Hybrid Technology in Delhi. Mahindra Scorpio with Intelli-Hybrid Technology is available in trims such as S4, S4+, S4+ 4wd, S6+, S8, S10-2WD, and S10-4WD variants. It will help save 7 percent fuel compared to vehicles without this technology. Intelli-Hybrid technology helps create energy and charge battery while braking. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos